ஞாயிறு, 25 மார்ச், 2007

சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி

சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி

தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் வீரவரலாறு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எழுதப் பட்டுக் கொண்டி ருக்கின்ற இந்த நேரத்தில் தமிழனத்தின் சாபக்கேடும் உடன் பிறந்தே கொல்லும் வியாதியுமான சாதியத்தை பற்றி இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி எதிர்ப்பாளர்களுடைய பிழைப்புக்கான மூலதனமாக சாதியம் திகழ்கிறது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை குறுகிய சாதிய வட்டத்தக்குள் அடக்கி கொச்சைப்படுத்தி மக்களை பிளவு படுத்த முனையும் வேலைகளும் திட்ட மிட்டு செய்யப்பட்டு வருகின்றன.

மறுபுறத்திலே ஒருவன் தான் இருக்கும் ஊரை மாற்றலாம் தனது பெயரை மாற்றலாம் தனது தொழிலை மாற்றலாம் தனது மதத்தை மாற்றலாம் ஆனால் தனது தாய் தந்தையரையும் தனது பிறப்பையும் அதனால் வரும் சாதிய அடையானத்தையும் மாற்ற முடியாது என்று சொல்கின்ற ஒரு கூட்டமும் ‘சாதியா அது எங்கே இருக்கிறது என்று சிங்களப்பார்வை பார்வை பார்த்து பம்மாத்து விடுகிற ஒரு கூட்டமும் இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது.( சிங்களப் பார்வை என்றால் தமிழர்களுக்கு இனப் பிரச்சனை என்ற ஒன்று இருகக்pறதா என்று முழுப் புசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது.தமிழர் எல்லாம் பொரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.வியாபாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொழும்பில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்டுவது)

2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேரூன்றி நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிற சாதியத்தை நாங்கள் ஒரு 30 வருடப் போராட்டத்தில் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சாதியம் என்பது மாறவில்லை அது அன்று இருந்த வடிவத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது என்று கூறமுடியாது.இன்று அடிமை குடிமை முறை கிடையாது. தீண்டாமை அன்றிருந்த நிலையில் இன்று இல்லை.ஆனால் அது முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

சாதியம் என்பது என்ன? இது எப்போது தோன்றியது? இன்று எங்கள் மத்தியிலே இருக்கக் கூடிய சாதியம் தமிழ் சமூக உருவாக்கத்துடன் தோற்றம் பெற்றதா அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதா என்கின்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்பாத நிலையிலேயே எல்லோரும் சாதியைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.

தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது.செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது.ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை ‘புனிதம் தீட்டு அகமணமுறை’ என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். ‘நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது.நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள் கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும்.எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அiடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்துவருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களான நாங்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.

இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.

இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள்.1920 ம் ஆண்டு இந்த குடிமைமுறை சட்டரீதியாக ஓழிக்கப்பட்டாலும் 1970ம் ஆண்டு வரை அது தேசவழமை என்ற பேரில் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.

கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.

கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும்; தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியல் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த(பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடுகாண முடியாத நிலையிலேயே இருக்கி;றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; என்பதும் தான் தமிழர் மதமாகும்.சிவலிங்கம் என்பது ஆண்பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டுமுறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச் சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது.ஐரோப்பியர்களான தாங்கள் கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கிழ்; வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம்; எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள்.இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள். இன்று சோழர்களும் இல்லை.அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கயமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுளைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை.இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்க்pன்றன.அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.

இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்.

புலம் பெயாந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ‘நான் திருமணம் செய்யும் போது சாதி பார்ப்பது எனது தனிப்பட்ட உரிமை’ என்று கூறுவது தொழில் நிறுவனங்களில் சுவரை வெட்டி கண்னாடி பொருத்தியும் அறைக்கு அறை கமெராக்கள் பொருத்தியும் வேலை செய்பவர்களை எஜமான் பண்ணையார் ஸ்டைல்களில் கண்காணித்து பழைய அடிமை குடிமை முறைக்கு புத்துயிர் அளிப்பது. அதை நிர்வாகச் செயற்பாடாக நியாயப்படுத்துவது. ஒரு மனிதனுக்கு தான் கண்காணிக்கப்படுகிறேன் என்ற உணர்வு ஏற்படும் போது அவனால் சுதந்திரமாகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்முடியாது என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. நடுத் தெருவில் ஆட்களை நிறுத்தி அவர்கள் மீது தமது அதிகாரங்களை செலுத்தி தங்கள் மேலாண்மையை நிலை நிறுத்துவது.ஐரோப்பிய சமூகத்தில் கோட்சூட் போட்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ரை கட்டுவது என்பது பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்வது. சாதி பார்ப்பவர்களை மறைமகமாக தட்டிக்கொடுத்து அவர்களது செயல்களை ஊக்கவித்துவிட்டு மறு புறத்தில் நமது சமூகம் இன்னும் திருந்தவில்லை என்ற பம்மாத்து விடுவது இப்படி எராளமான விடயங்கள் புலம்பெயாந்த சமூகத்தில் நடக்கின்றன. இவற்றுக்கான அடிப்படைகள் எவை. இந்த போக்குகள் எப்படி புலம்பெயாந்த இளைய சமூகத்தை அந்நியப்பட வைக்கின்றன. இவை எப்படி தமிழ் தேசித்துக்கு துரோகம் செய்கின்றன என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

யாழ் இணையத்துக்காக எழுதியது

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்பரப்பில் அறிமுகப் படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்த வில்லை.அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது.
தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக வைத்துக்கொண்ட பெயராகும்;. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார்.அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும்.ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீPட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் அனைத்து ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்தக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண் பாட்டை கட்டிக் காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது. இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது.
இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவு பட்டுப்போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக்காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக்கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டுவிடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக்கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது..ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை.இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை.சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்த வர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்து வதில்லை. சிறீலங்கா அரசினதும்; அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதி களினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும்.ஈழத் தமிழ் மக்களான எங்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.
தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை நியாயப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள்.தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள்.
தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர்; ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழிழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்க்கத்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது.அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப்போராடவும் இல்லை.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.தீண்;டாமையின் விச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை.அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை.ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை.இந்தியவில் தலத் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கம் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார்.ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்தகொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்குஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக் கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூகமேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்துகொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார்.(அந்தக்காலகட்டத்தில் பைபளை ஆறுமுகநாவலரைப் போல எழிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி எவரும் மொழி பெயர்க்கவில்லை.)சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்க்pய சைவப்பிரகாச வித்தியா சாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஆனால் தான் எழுதி வெளயிட்ட சைவசமயப் பாடப்பத்தகங்களில் எல்லாம் சாதியை வலியுறுத்தி தமிழ் மக்களை பிளவு படுத்தினார்.ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும் .ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக்கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார்.ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல.அவ்வாறே தமிழர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும்ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் சொந்தமாக புதிய நிலங்களை வாங்கும் உரிமையை பெறுவதற்குமாக 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் (மண்ணுக்கான போராட்டங்கள்;1910 ம் ஆண்டும் 1920 ம்ஆண்டும் நடத்திய கற்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுமே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும்.ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல்விதியாகும் .இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது.இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்ப்pட்ட வர்கக்த்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும்.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்து வருகின்றன. தலித்தியம் பேசபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்தம் பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கருத்தியலுடன் இணைக்கின்றார்கள்.தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யியலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யியலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யியல் எப்படி பார்ப்பணிய மெய்யியலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள்.தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றiயும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றஅந்தக்கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள்.இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள்.இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள்.தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டாதது.பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள்.
அடுத்து பெரியார் பற்றி எழுதுகின்றவர்கள் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.பெரியார் என்ன செய்தார்? அவர் சரியா பிழையா என்று விவாதிப்பதற்கு செலவழிக்கும் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தமிழ்தேசியத்தின் பால் ஒன்றிணை ப்பதற்கு என்ன செய்யலாம். அடையாளம் இழந்து தெருவுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு என்ன செய்யலாம். என்றெல்லாம் ஏன் சிந்திக்கக் கூடாது.தமிழகத்திலே 1982 ல் இருந்து இன்று வரை தழிழிழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டி தொட்டிக் கிராமங்கள் எல்லாம் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தவர்கள்-இன்றும் செய்து வருபவர்கள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தினராகும்.தேசியத் தலைவருக்கு தோள் கொடுத்ததில் இருந்து தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான பரப்புரையை தங்கள் சொந்தப் பரப்புரையாக வீடுவீடாக எடுத்துச் சென்று செய்ததில் இருந்து அனைத்து விடயங்களிலும் முன்னணியில் இருந்தவர்கள் திராவிடர் கழகத்தினர்.இன்று வரை தமிழகம் முழுவதும் குறைந்தது திராவிடர் கழகத்தின்; இலட்சக் கணக்கான தொண்டர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் உண்மையான தமிழ்தேசிய ஆதரவை கட்டிக்காத்து வருகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி தமிழ்தேசியத்துக்கு எதிராக இருப்பவர்கள் யார் ?அதை நசுக்குவதற்கு முனைபவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் அத்தனைபேருமே பார்ப்பணியர்கள் என்பதை கண்டு கௌ;வீர்கள.; ‘சோ’ இராமசாமியில் இருந்து ‘இந்து’ ராம் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் ரோவையும் - சவுத் பிளாக் எனப்படும் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பு பிரிவையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பணர்கள் தான் என்பதை கண்டு கொள்வீர்கள்.

1982 ல் இருந்து 1987 வரை தமிழகத்தில் தங்கியிருந்த நான் தமிழகத்தின் பட்டி தொட்டி கிராமமெங்கும் பரப்புரைக்காக சென்றபோது அங்கு பெரியார் என்ற அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன்.பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகத்தின் குப்பனும் சுப்பனும் கட்டியுள்ள கோவணத்தையம் பறிகொடுத்த நிலையில் அம்மணமாகத்தான் இன்றும் இருந்திருப்பார்கள்.இது தான் அங்குள் கிராமங்களின் கள யதார்த்தம்.அது கேரள எல்லையிலுள்ள களியக்காவலையாக இருந்தாலும் சரி கர்நாடக எல்லையிலுள்ள சத்திய மங்கலமாக இருந்தாலும் சரி ஆந்திர எல்லைக்க அண்மையிலுள்ள கும்மிடிப்புண்டியாக இருந்தாலும் சரி நிலைமை என்பது இதுதான்.எங்களுடைய தளத்தில் இருந்துகொண்டு பெரியாரை தூற்றுவதற்கும் விமர்சிப்பதற்கும் இப்போது என்ன தேவை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.பெரியாரும் அவரது திராவிடர் கழகத்தினரும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது தீங்கிளைத்திருக்கிறார்களா? பெரியாரோ அல்லது அவர் வழி நடப்பதாகச் சொல்லும் திராவிட இயகக்த்தினரே சிறீலங்கா அரசுக்கும் பௌத்த சிங்கள பேரின வாதிகளுக்கும் துணை போயிருக்கிறார்களா?பெரியார் மீது உங்களுக்கு எற்படும் இந்தளவு காழ்ப்புணர்வு தமிழ் தேசித்தை ஒடுக்குவதற்கு அல்லும் பகலும் அயாராது உழைக்கும் -சிறிலங்கா அரசுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளையும் மறைமுக ஆயுத உதவிகளையும் வழங்கும் பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்கள் மீது உங்களுக்கு ஏன் வரவில்லை.?

ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பு என்பது புலம் பெயர்ந்த தலித்தியவாதிகள் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்கும் தமிழனத்துரோகிகள் தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவுதத் தளத்தை சிதைப்பதற்கும் தான் பயன்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இன்றைக்கு புலம் பெயர்ந்த நாடுகளிலே 90வீதமான தமிழ் மக்கள் சாதியத்தை கட்டிக்காக்கிறார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு சாதிப் பெருமைகளை வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.தங்கள் பிள்ளகைள் சாதி விட்டு சாதி திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.புலம் பெயர்ந்த தமிழ் இளையோரில் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தினர் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அதை விட ஒரு மடங்கு அதிகமான பகுதியினர் சீரழிந்து போகிறார்கள்.இதுதான் யதார்த்தம்.என்று செல்கின்ற போது இல்லை அப்படிக் கிடையாது என்று சொல்வதன் மூலம்; நாங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறோம்? யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?

சீரழிந்த போகிற இந்த இளைஞர் கூட்டத்தை பார்த்து ஊத்தையங்கள்.காவாலியள் பொறுக்கிகள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லகிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு தெருவுக்கு வருவதற்கு என்ன காரணம் என்று நாங்கள் ஆராயத் தயாரில்லை. அவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்றும் யாரும் சிந்திப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் திருந்தாத கேசுகள் என்று கூறி ஓதுக்கிவிடுகிறோம்.ஏங்களுடைய நோகக்ம் என்ன ஒரு கறிப்பிட்ட பகுதியினர் டொக்கடர் எஞ்சினியர் எகக்வுண்டன் என்று சொல்லிக் கொண்டு ஊரில் போய் இறங்க இன்னொரு பகுதியினர் காவாலிகள் தெருச்சண்டியர்கள் என்று போய் இறங்கும் நிலையை வளர்த்துவிடுவதா?

1998 ம் அண்டு பாரிஸ் நகரத்தில் நான் நேரடியாக இறங்கி தகவல் திரட்டியதில் 116 இளைஞர்கள் சாதியத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை கைவிட்டு பெற்றோரை பிரிந்து தெருவுக்கு வந்ததை கணக்கெடுத்திருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் பெற்றோருக்கம் பிள்ளைகளுக்கமான முரண்பாடு அதிகரிப்பதற்கும் அவர்கள் அடையாளம் இழந்து போவதற்கும் சாதியம் முக்கியமான காரமாக இருக்க்pறது.இதற்கு நூற்றுக் கணக்கான உதாரணங்களை என்னால் கூறமுடியும்.அடுத்து தமிழ் சமூகத்திடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம் என்னவென்றால் ‘நான் பிடித்த முயலுக்க மூன்று கால்’ என்று பிடிவாதம் பிடிப்பது.யதார்த்ததை புரிந்த கொள்ள மறப்பது.அல்லது புரிந்தும் பரியாத மாதிரி நடிப்பது.

தயவு செய்து இந்தப் பிரச்சனையை ஆக்க பூர்வமாக விமர்சிப்பதற்கு முன்வாருங்கள்.நிறைய தேடல்களை செய்யுங்கள். நிறைய நூல்களை படியுங்கள்.ஆகக்பூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள். தயவு செய்து இந்தப் பிரச்சனையில் விதண்டாவாதம் செய்ய முற்படடாதீர்கள்.

யாழ் இணையத்திற்காக எழுதியது

சனி, 24 மார்ச், 2007

பகுத்தறிவுப் பரப்புரை

பகுத்தறிவுப் பரப்புரை

பகுதி -01

மூடநம்பிக்கைகள்

பேய் பிசாசுகள் இருக்கின்றனவா?

இரவில் நீங்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுவீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்கின்ற பதில் பேய் பிசாசு என்பதாகும் உண்மையில் பேய் அல்லது பிசாசு இருக்கின்றதா? பேய் அல்லது பிசாசு என்றால் என்ன? இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்!

பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.
விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.

ஒரு மனிதன் மரணம் அடைகின்றபோது மூக்கு மற்றும் ஏனைய துவாரங்கள் வாயிலாக அவன் ஏற்கனவே சுவாசித்த காற்று மட்டும்தான் வெளியேறுகிறது, ஆவி என்றோ உயிர் என்றோ, ஆன்மா என்றோ ஒன்றும் வெளியேறுவதில்லை, ஒரு மனிதனின் கடைசி மூச்சாக வெளியேறும் காற்றை எடுத்து பரிசோதித்தால் அதில் காபனீரொட்சைட்டும், ஒட்சிசன், நீராவி, முதலான வாயுக்கள்தான் இருக்கும்.

ஓரு இயந்திரம் , அல்லது தன்னுடைய செயற்பாட்டுத்திறனை இழந்து விட்ட ஒரு துப்பாக்கி தனது கடைசி செயற்பாட்டுடன் செயலற்றுப்போகும் போது என்ன நடக்குமோ ஒரு மனிதன் இறக்கும் போதும் அதுதான் நடக்கிறது. ஓரு பழுதடைந்த செயலற்று போன இயந்திரத்தின் பாகங்கள் பிரித்தெடுத்து வெறோரு இயந்திரத்திற்கு பொருத்துவதை போலவே இறப்புக்குள்ளாகும் மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், முதலான பல உறுப்புக்கள் , இந்த உறுப்புக்களில் பழுதுள்ள வேறோரு மனிதர்களுக்கு பொருத்தப்படுகின்றன.
ஏனவே மனிதனின் மரணத்தின் போது இயமன் எருமைக்கிடாயில் வந்து பாசக்கயிற்றை விசி உயிரை எடுத்துக்செல்கிறான் , என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகும்.

அப்படி என்றால் ஆவி அல்லது பேய் என்று சொல்லப்படுவ தெல்லாம் என்ன?
இது ஒரு மனப்பயம் அல்லது பிரம்மை என்று சொல்லலாம் ஒரு மனிதன், உயிருடன் இருக்கும்போது நடந்துகொண்ட விதம் பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் இவையல்லாம் மற்றவர்களுடைய மனங்களில் பதிவாகின்றன இந்தப்பதிவுகள் அந்த மனிதன் இறந்தவுடன் நினைவுகளாகின்றன.இறந்த அந்த மனிதனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கும் (குடும்பத்தினர்,உறவினர்,நண்பர்கள்) அந்தமனிதர்களுக்கு தீங்கிளைத்த வர்களையும், அவனது இழப்பை சுலபமாக ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலையிருக்கும் அந்த மனிதனுடைய உடல் எரிந்து சாம்பலாகும் காட்சியை பார்க்காதவர்களுக்கு இந்த நிலை அதிகம் இருக்கும் அவர்களது மூளைக்கலங்கள் அந்த மனிதனின் இழப்பை சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த மனிதன் விட்டுச்சென்ற தடயங்கள் அல்லது அந்த மனிதனைப்பற்றிய நினைப்பு வரும்போது அவன் உயிரோடு தங்களுடன் வாழ்கின்றான், என்றோரு பிரம்மை உருவாகின்றது, இவை தான் பேய் பிசாசுகள் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. பகலில் கடும் வெய்யில் காலத்தில் பரந்த வெளியில் நீங்கள் சென்றால்துரத்தில் தண்ணீர் ஓடுவது போன்ற ஒரு காட்சியை நீங்கள் பார்க்கமுடியும் ஆனால் கிட்டச் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது இதை கானல் நீர் என்று சொல்வார்கள், அதாவது சூரியஒளி தரையில் பட்டு தெறிக்கும்போது இது ஏற்படுகிறது.

இதே போலவே இரவில் காட்டுப்பகுதிகள் மற்றும் வயல் வெளிகள், சதுப்பு நிலங்களில் மங்கலாக சில பொருட்கள் அசைந்து செல்வதைப்போல காட்சிகள் தென்படும்,இவையும், அந்த பகுதிகளில் உள்ள இரவு வெப்பநிலை மற்றும் பனிமூட்டத்தால் இவ்வாறு தென்படுகின்றன.

மொத்தத்தில் பேய் பிசாசு என்பது எங்களுடைய நினைப்பில்தான் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.சில சதுப்பு நிலங்களில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு அந்த தீப்பிழம்புகள் காற்றில் மிதந்து செல்வதுண்டு இதைத்தான் கொள்ளிவால் பேய் என்று சொல்கிறார்கள் இந்தப் பேய் ஆட்கள் கிட்டப்போனால் அடித்து எரித்துக் கொன்று விடும் என்றெல்லாம் கதை சொல்லப்படுவதுண்டு.

உண்மையில் சதுப்பு நிலத்துக்கு அடியில் இருக்கும் அடர்த்திகுறைந்த வாயுக்கள் அமுக்கம் காரணமாக வெளியில் வரும்போது தீப்பற்றிக் கொள்கின்றன. இந்த தீயை கொள்ளிவால் பேய் என்று நினைத்து பயந்து ஒடுவர் ஓட முற்பட்டால், அந்த தீப்பிழம்பு அவரை துரத்திச்செல்லும் இது எனென்றால் நாங்கள் ஓடும்போது காற்றை கிழித்துக்கொண்டுதான் ஒடுகின்றோம். இவ்வாறு ஓடும்போது எங்கள் முதுகுக்குபின்னால் ஒரு வெற்றிடம் வரும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அருகில் உள்ள காற்று வரும்போது அதில் மிதந்து கொண்டு இருக்கும் இந்த தீப் பிழம்பும் ஓடிவரும் இதைத்தான் கௌ;ளிவால் போய் துரத்துகின்றது என்று கிளைந்து பலர் உயிரிழந்து விடுகின்றார்கள் இந்த உயிரிழப்பிற்கு காரணம் பயத்தினால் வரும் மாரடைப்புத்தான் அடுத்து நாங்கள் சில இடங்களில் சில வீடுகளில் படுத்து உறங்கும் போது அது பகலாய் இருந்தாலென்ன இரவாக இருந்தாலென்ன எங்களுக்கு ஏதோ ஆபத்து வருவதைப்போலவும் எங்களை யாரோ கொல்ல வருவதைப் போலவும் கனவு வரும். நாங்கள் கத்திப் பார்ப்போம் குரல் வெளியே வராது, எழும்பி ஓடப்பார்ப்போம், உடம்பு அசையாது, இப்படி ஒரு விசித்திரமான நிலை உங்களில் பலருக்கும் வந்திருக்கலாம் இவ்வாறு நடப்பது பேயின் வேலை என்றும் இந்தப் பேய்க்கு அழுக்குப் பேய் என்றும் என்றும் நம்மவர்கள் பேரும் வைத்திருக்கின்றார்கள. இரவில் தன்pயாகச் சென்றால் காற்றுக் கறுப்புப்பிடித்து வருத்தம் வரும் என்றும் மோகினிப் பேய் பிடித்துவிடும் என்றும் நமது கிராமங்களில் சொல்லக் கேட்டிப்பீர்கள். குழந்தைகளை இரவில் வெளியில் கொண்டு சென்றாலும் இப்படி சொல்வதுன்டு இரவில் சாப்பாட்டை வெளியில் எடுத்துச் செண்றாலும் பேய் அதிலுள்ள சாற்றை உறிஞ்சி விடும் என்றும் கிராமத்து மக்கள் சொல்வதுன்டு. இதற்காக இரவில் சாப்பாட்டை வெளியில் கொண்டு செல்லும் போது கரித்துண்டு ஒன்;றை (கார்பன் ) அதற்குள் போடுவதுன்டு அல்லது இரும்புக்கம்பி ஒன்றை கூடவே எடுத்து செல்வதுன்டு (இப்படிச் செய்தால் பேய் வராது என்பது அவர்களது நம்பிக்கை ) உண்மையில் நாம் உயிர் வாடுகின்ற இந்தப் புமியில் மேற்பரப்பில் பல்வேறு மின் காந்த அலைகளும், சூரியக் குடும்பத்திலே உள்ள பல்வேறு கோள்களினதும் உப கோள்களினதும் கதிர் வீச்சு சக்தி அலைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கும், அதேபோல மனிதனுக்கு கெடுதி விளைவிக்கக் கூடிய கொடிய வைரசுகளும் பக்டீரியாக்களும் கூடக்காற்றில் அலைந்து கொண்டிருக்கும் சூரிய சக்திக்கு இயல்பாகவே அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் சூடாக்கி விரிவடையச்செய்யும் தன்மை இருக்கிறது பகலில் நாம் நடமாடும் போது சூரியக்கதிர்கள் ஓரளவிற்கு எம்மை பாதுகாக்கின்றன ஆனால் இரவில் அவ்வாறான தன்மைகள் மிகக் குறைவு அதனாலேயே இரவில் காடுகள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள் கடற்கரைகள் என்று பயணம் செய்பவர்களின் உடலில் கதிர்வீச்சுத் தாக்கமும் நோய்க்கிருமிகளின் தொற்றும் ஏற்பட வாய்பும் அதிகமாக இருக்கிறது.

இதனாலேயே இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.அவர்கள் பேய் பிசாசுகளோடு சம்மந்தப்படுத்தி இதைச் சொன்னாலும் இதற்குரிய அடிப்படைக்காரணம் இதுதான்உணவை வெளியில் எடுத்துச்செல்லும் போது கூட இது தான் நடக்கிறது பொதுவாக கரிக்கு (கார்பன் ) அல்லது இரும்புக்கு கதிர்களை உறிஞ்சும் சக்தி இருக்கின்றது, இதனாலேயே அவற்றை உணவில் போட்டு எடுத்துச்செல்லும் வழக்கம் இருக்கிறது.

உணவு பழுதாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இது சொல்லப்பட்டதே அன்றி பேய் பிசாசு சத்தை உறிஞ்சி விடும் கூடிக்கொன்டு வந்துவிடும் என்பதற்காகவல்ல.
மனம் என்ற ஒன்று இருக்கிறதா ?

இந்த பேய் பிசாசுகள் பற்றி பேசுகின்ற போது மனம் என்ற ஒன்று இருக்கிறது தானே என்று ஒரு கேள்வி உங்களுக்கு எழக்கூடும் அந்த மனம் தான் ஆத்மா என்றெல்வாம் நிங்கள் நினைக்கலாம் உண்மையில் மனம் அல்லது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா? மனிதனின் உடல் வேறு , ஆத்மா வேறு. உடல் அழியும் ஆத்மா அழியாது மனிதன் இரவில் உறங்கும் போது ஆத்மா உடலை விட்டு வெளியேறி உலகெல்லாம் சுற்றிவரும் என்று மதவாதிகள் பல கதைகள் சொல்வார்கள் ஆரம்ப காலத்தில் இதயம் தான் மனம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். மனதைத்தொட்டுச்சொல்கிறேன் என்றால் இதயத்தை தொட்டுக்காட்டும் வழக்கம் இருந்து வந்தது. காதலுக்கு அடையாளமாக இதயத்தை அம்பு துழைத்துச்செல்லும் படத்தைக் கான்பிப்பது இன்றும் வழக்கம் இருக்கிறது .

பிற்காலத்தில் மனித மூளையில் தான் மனம் இருக்கிறது அது தான் சிந்திக்கிறது செயற்பட வைக்கிறது என்ற கருத்து வலுப்பெற்றது இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்துத்தான் என்றாலும் இந்த மனம் தான் ஆத்மா என்றாலும் இது ஒரு மனிதனின் இறப்புககுப் பின்னும் உயிர் வாமும் என்பதும் மனிதன் உறங்கும் போதும் உடலை விட்டு வெளியேறி தனியாகச் செயற்படும் என்பதும் அப்பட்டமான மூடநம்பிக்கையாகும் மனித மனம் என்று நாங்கள் சொல்வது மனித மூளையின் பகுதிகளையும் செயற்பாட்டுத்திறனையும் மட்டுமே இது ஒரு கணணியின் டேட்டா பேசுக்கு ஒப்பானது. ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாவதிலிருந்து அது வளர்ந்து மூப்படைந்து இறக்கும் வரை அதன் மூளையில் பதிவாகும் அனைத்து விடையங்கள் அனுபவங்கள் செயற்பாட்டுத்திறன்கள் அனைத்தின் தொகுப்பே மனம் என்று வரையறுக்க முடியும். இதை ஒரு மொழிக்கிடங்கு என்றும் இப்போது விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். குழந்தை பிறந்ததிலிருந்தே அதன் மூளையில் பதியப்படும் மொழி (தற்போது தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகள் தகவல்களை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று விஞ்ஞானிகள் நிருபித்திருக்கிறார்கள்) அல்லது மொழிகள் மூலமே உலகைப் பற்றியும் உலகிலுள்ள பொருட்களைப்பற்றியும் அது அறிந்து கொள்கிறது என்றும் மொழி என்;ற ஒன்று இல்லை என்றால் இந்த அறிதலும் சிந்தனையும் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள. ஒரு கணணியை முற்றாக அழித்து விட்டால் அதில் பதித்து வைத்துள்ள அனைத்து விடயங்களும் அழிந்து விடுவதைப்போலத்தான் மனித மூளையும் இறந்து விட்டால் அதிலுள்ள அனைத்துப்பதிவுகளும் செயற்பாடுகளும் (அதாவது மனமும் ) இறந்து விடுகிறது. அந்தக் கணணியிலிருந்து பிரதி எடுக்கப்பட்ட சில பல தகவல்கள் அந்தக் கணணியின் அழிப்பின் பின் நினைவு கூரப்படுவதை,பயன்படுத்தப் படுவதைப்போலத்தான் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளும் செயற்பாடுகளும் நினைவுகள் அல்லது வாழ்க்கையின் அனுபவத் தொகுப்பு என்ற வகையில் நிலைத்திருக்கின்றன. மற்றப்படி மனிதன் இறந்த பின்னர் மனம் உயிர்வாழ்ந்து இன்னொரு உடலில் புகுந்து கொள்வதில்லை.

மறுபிறப்புக் கதைகள் பொய்யா?

சிலபேர் தங்களுக்கு தங்களது முற்பிறப்பின் ஞாபகம் இருக்கிறது என்று கதைவிடுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.சமூகப் பொறுப்பில்லாத சில ஊடகங்கள் விற்பனையை மட்டும் குறியாக வைத்து, இதெல்லாம் அறிவு பூர்வமான உண்மை, என்று பரபரப்புச் செய்தியோ அல்லது கட்டுரையோ வெளியிட்டிருக்கக்கூடும்.தங்களது செய்திக்கு அல்லது கட்டுரைக்கு ஆதாரமாக தன்னம்பிக்கையற்ற புத்தகப் பூச்சிகளான சில அறிவுசீவிகளை (அறிவை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்) துணைக்கழைத்து ஆய்வும் செய்திருப்பார்கள்.இதை எல்லாம் படிக்கும் உங்களுக்கு பெரிய கல்விமான்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள், அதனால் இது உண்மையாக இருக்கும் என்ற சார்புத் தன்மையுடன் கூடிய நம்பிக்கை ஏற்படும்.இந்த நம்பிக்கை உங்கள் மூளையின் அறிவியல் தளத்தை செயற்பட விடாமல் அமுக்கிவிடும்.உண்மையில் ஸ்ரீலங்காவிலே பிரபலமான இரண்டு மறுபிறப்புக் கதைகள் ஊடகங்களிலே பரபரப்பாகப் பேசப்பட்டன.ஓன்று கதிர்காம அழகு ராணி மன்னம் பேரியினுடையது. மற்றது ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்தரிகா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா வினுடையது மக்கள் மத்தியில் எற்கணவே பிரபலமாகியிருந்த இந்த இருவரும் மறு பிறப்பு எடுத்திருப்பதாக கதை விடப்பட்டது.ஸ்ரீலங்காவின் வௌ;வேறு பிரதேசங்களில் பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்களில் மறு பிறப்புக்கள் என்று சிங்கள ஊடகங்கள் எல்லாம் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.இவை எல்லாம் நடந்து இப்போது ஒரு 15 அல்லது 20 வருடங்களாவது இருக்கும்;. அப்போது மறுபிறப்புக்களாக இருந்த அந்தக் குழந்தைகள் இப்போது பெரியவர்களாகியிருப்பார்கள்.இப்போது அவர்கள் மன்னம்பரி ஆகவோ விஜய குமாரதுங்கவாகவோ இல்லாமல் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை.அப்படி என்றால் இந்தக் கதைகள் எல்லாம் பொய்யா? இவை எப்படி உருவாக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் நிச்சயமாக எழக்கூடும்!உண்மையில் ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகி அதன் மூளை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும் போதே தன்னைச் சூழவுள்ள விடயங்களை கிரகிக்க ஆரம்பிக்கிறது.தாயின் சுக துக்கங்கள் சிந்தனைகள் அபிலாசைகள் எல்லாமே குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை மருத்துவ உலகம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கிறது.
அதிலும் அபூர்வமாக சில குழந்தைகள் அவற்றின் மரபணுச் சேர்க்கையில் உள்ள சிறப்புத்தன்மைகள் காரணமாக சிந்திக்கும் கிரகிக்கும் ஆற்றல் மிக்கவையாக உருவாகின்றன.இவ்வாறான குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயோ தந்தையோ அடிக்கடி பேசிக்கொள்ளும் ஒரு விடயத்தை கருவில் இருக்கும் பேதே கிரகித்துக் கொண்டுவிடுகின்றன.ஆவை பிறந்த பின் தமக்கே உரித்தான அறிவுக் கூர்மையுடன் எனக்கு அவரைத் தெரியும் அது இது என்று சொல்லும் போது அதற்குப் பெற்றோரும் உறவினர்களும் கண்காது மூக்கெல்லாம் வைத்து மறுபிறப்புக் கதையை கட்டிவிடுகின்றார்கள் .பின்பு ஊடகங்கள் இதற்கு மெருகூட்டி நம்பத் தக்க ஒரு சான்றாக இதைக் கட்டமைத்து விடுகின்றன.அதுசரி பிரபமானவர்கள் மட்டும்தான் இப்படிமறுபிறப்பு பிறந்வந் கதைப்பது ஏன் என்ற சிந்தித்துப் பாருங்கள் இதெல்லாம் அப்பட்டமான சுத்துமாத்து என்று உங்களுக்குப் புரியும்

பேயாடுவது என்பது என்ன ?
நமது கிராமங்களில் பல இடங்களில் பேயாடும், பேயோட்டும் நிகழ்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேய் பிடித்தவர்களும் பேயோட்டுபவர்களும் கூட சில வேளை உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருப்பார்கள.; உண்மையில் பேய் பிடிப்பது என்பது என்ன? எப்படி இந்த பேயை விரட்டு கின்றார்கள்? பேய் பிடிப்பது என்பது அதிகமான பயத்தினால் வருகின்ற ஒரு விதமான மன நோயாகும். இதற்கு முதற்காரணம் அதிர்ச்சி. ஒருவர் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் போது அவர் ஒருவிதமான பரபரப்புக்கும் பதட்டத்துக்கும் உள்ளாகின்றார். இதையே அவருடன் கூட இருப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் அவருக்குப் பேய் பிடித்து விட்டது பிசாசுபிடித்து விட்டது என்று கூறி அவரை மனநேயாளியாக்கி விடுகின்றார்கள். அந்த நபர் தனக்கு பேய் பிடித்து விட்டது என்ற பயத்தினாலே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகி இருட்டை கண்டு பயப்படுவது சத்தத்தை கேட்டு உருவெடுத்து ஆடுவது முதலான செயல்களில் ஈடுபடுகின்றார். ஆவரது ஆள் மனதில் பதியப்பட்டுள்ள பேய் பிசாசு பற்றிய கற்பனைகள் அவர் உருவந்து ஆடும் போது “டேய் உன்னை என்னசெய்கிறேன் பார் இரத்தக்காட்டேரி வந்திருக்கிறேன்டா சுடலைதாடன் வந்திருக்கிறேன்டா” என்றெல்லாம் பிதற்றவைக்கிறது பேயை விரட்டுவதாக சொல்லிக்கொள்ளும் புசாரிகள் பேயோட்டிகள் ஒரு மனோதத்துவ மருத்துவர் செய்யும் வேலையை மந்திர தந்திர மடை கழிப்பு என்ற பெயரில் செய்கின்றார்கள் பேயோட்டும் சடங்குகளைப்பார்த்தால் எல்லாமே இரவில் தான் செய்யப்படும் உடுக்கடி சாம்பிராணிப்புகை படையல் என்று பேய் பிடித்தவரையும் அவருக்கு பேய் பிடித்துவிட்டது என்று சொல்லி கொள்பவர்களையும் பேய் வந்து விட்டது என்ற ஒரு பயங்கர நிலைக்கு பேயோட்டி கொண்டு வருகின்றார்;.பேய் பிடித்த நபரை சவுக்கால் அடித்தோ வேப்பிலையால் அடித்தோ “டேய் போகப்போறியா இல்லையா” என்று மிரட்டுகின்றார் இந்த மிரட்டலில் உச்சக்கட்டத்தில் “நான் போகிறேன் போகிறேன்” என்று பேய் பிடித்தவரை சொல்ல வைக்கிறார். இதில் மெஸ்மரிசம் எனப்படும் தன்வயப்படுத்தும் விளையாட்டும் அடங்கியிருக்கிறது கடைசியில் கோழி அல்லது ஆட்டை பலியிட்டு சந்தியில் கொண்டுபோய் படையல் படைத்து, கழிப்பு கழித்து ஆலமரத்தில் அல்லது புளிய மரத்தில் ஆணிஅடித்து பேய் பிடித்தவரின் கையில் நூல் அல்லது அச்சரக்கூட்டில் வைக்கக்கூடியதாக இயந்திரம் அல்லது தகடு ஒன்றைக்கட்டியவுடன் இந்தப் பேயோட்டும் சடங்கு முடிந்துவிடும். பேய் பிடித்தவர்களுக்கு தன்னை பிடித்த பேய் ஓடிவிட்டது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அவரது உறவினருக்கும் இதே எண்ணம் ஏற்பட பேய் ஓடியே போய்விடுகிறது .இந்த நம்பிக்கைதான் என்பதுதான் அந்த பேய் பிடித்த நபரை குணப்படுத்துகிறது.

செய்வினை பில்லி சூனியம் என்றால் என்ன ?

நமது கிராமங்களில் அடிக்கடி பில்லி சூனியம் வைத்துவிட்டதைப்பற்றியும் செய்வினை செய்வதைப்பற்றியும் கதைப்பதைக் கேட்டிருப்பீர்கள். இந்தச்செய்வினை பில்லி சூனியம் என்பவற்றை எடுப்பதற்கென்று சில மாயாவிகள் திரிந்து கொன்டிருப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள.; இந்த செய்வினை பில்லி சூனியம் என்பவற்றில் ஒரு தகடு தலைமுடி எலும்பு போன்ற பொருட்களை நிலத்துக்குள் புதைத்த நிலையில் எடுப்பதையும் நீங்;கள் பார்த்திருக்கலாம்உண்மையில் பில்லி சூனியம் செய்வினை என்பது என்ன ? இவை கூட ஒரு வகை மனோ வியாதியுடன் சம்மந்தப்பட்ட மூடநம்பிக்கையாகும். எதிராளி ஒருவரின் காலடி மண் தலைமுடி அவர் பாவித்த உடை அல்லது ஏதாவது ஒரு பொருளை எடுத்து மடை செய்து கெட்ட ஆவிகளை அவற்றின் மேல் ஏவிவிட்டால் அவரை அழித்து விட்டால் என்பது இந்த பில்லி சூனியம் செய்வினை என்பவற்றின் சாராம்சமாகும் நல்ல செழிப்புடன் இருந்த ஒரு குடும்பம் திடீரென்று நெடிந்து போய்விட்டால் அல்லது ஒரு குடும்பத்தில் திடகாத்திடமாக இருந்த ஒருவர் திடீரென்று இறந்து விட்டால்அல்லது தீராத நோய் வாய்ப்பட்டால் இதெல்லாம் பில்லி சூனியம் செய்வினை செய்த வேலை என்று கதைகட்டி விடுவார்கள் இன்று நல்ல நிலையில் ஓஹோவென்று கோடிக்கணக்கான இலாபத்துடன் இயங்கும் கம்பனிகள்அவற்றின் பங்குச்சந்தை சரிந்து விட்டால் பாரிய நட்டத்தை சந்தித்து மூடப்படும் நிலைக்கு ஆளாகி விடுகின்றன சாள்ஸ் நோய் போன்ற நோய்கள் திடீரென பரவி எதிர்பாராத விதமாக பலர் இறந்து போவதை நாங்கள் பார்க்கின்றோம்

இதேபோல தான் ஒருவர் வியாபாரத்தில் நொடிந்து போவதும் நோயில் இறப்பதும் ஏன் என்று விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால் அதற்கு நம்பத்தக்க காரணங்கள் இருக்கும். ஆனால் சமூகத்தில் இருக்கும் ஏமாற்றும் பேர்வழிகள் இதெல்லாம் செய்வினைகள் பில்லி சூனியம் என்று சொல்லி பிழைப்பு நடத்துகின்றார்கள் பெரும்பாலும் இந்த பிழைப்புவாதிகள் தாங்களே கொண்டுபோய் தகடுகளையும் எலும்புகளையும் தலைமுடியையும் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளில் புதைத்துவிட்டு அவர்கள் வீட்டில் செய்வினை இருப்பதாகவும் பில்லி சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகவும் கதைகட்டி விடுகின்றார்கள்.தந்திர வித்தை தெரிந்த சில மாயாவிகள் கண்முன்னாலேயே சில தந்திரங்களை நிகழ்த்திக் காட்டுவதுண்டு.நடைமுறையில் இது சாத்தியம் என்றால் இராணுவ முகாம்களை அழிப்பதற்கு நூற்றக்கணக்கான போராளிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையே!ஒரு சில மந்திரவாதிகளை அனுப்பினால் போதுமே!

நூல்கட்டுவது தாயத்துக் கட்டுவது நல்லதா?
பல பேர் கோவில் பூசையில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த நூல் அல்லது தாயத்து என்று சொல்லி அவற்றை கையில் அல்லது கழுத்தில் கட்டியிப்பதையும் கண்டிருப்பீர்கள்.(சிலர் அரைநாண் கொடியில் கட்டுவதுண்டு) சில வேளைகளில் நீங்கள் கூட அவற்றைக் கட்டியிருக்கலாம். இவற்றைக் கட்டினால் கெட்ட ஆவிகள் அணுகாது, நோய்கள் வராது. ஆபத்துக் களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், முக்கியமாக உயிருக்கு ஆபத்து வரும் போது இவற்றின் சக்தியால் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று இவற்றைக் கட்டுபவர்கள் நம்புகின்றார்கள்.நடைமுறையில் ஒரு எறிகணை, ஒரு விமானக் குண்டு,அல்லது ஒரு கைக்கண்டு உங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்கும் போது,நான் நூல் கட்டியிருக்கிறேன் தாயத்துக் கட்டியிருக்கிறேன் “எனக்கு ஒன்றும் நடக்காது” என்று சொல்லிக் கொண்டு நீங்கள் அதன் அருகே போய் நின்றால் சிதறிப் போய் விடுவீர்கள்.இதுதான் யதார்;த்தம். இதிலிருந்து தப்புவதற்கு ஓடிச்சென்று தற்காப்பு நிலை எடுப்பது தான் அறிவு பூர்வமான செயற்பாடு.மற்றப்படி நூல் தாயத்து என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே.முற்காலத்தில் பயமும் மூடநம்பிக்கைகளும் நம்மவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.இதை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு தான் இந்த நூல் கட்டுவது, தாயத்துக் கட்டுவது என்பதெல்லாம்;.ஒரு இடத்தில் பேய் பிசாசு இருக்கிறது என்று கதை பரவிவிட்டால் அந்த இடத்திற்கு ஒருவரும் போக மாட்டார்கள்.எனவே மக்களை அங்கே போக வைப்பதற்கு இப்படி நூல் தாயத்து மகிமைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.கோளைகளாகவும் பயந்த சுபவம் உள்ளவர்களாகவும் இருந்த சிலரை தாயத்துக் கட்டடினால் வீரம் வரும் என்று சொல்லி அவர்களிடமிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கிய பல கதைகளை நமது புராணங்களில் நீங்கள் படித்திருக்லாம்.ஆனால் அன்று நம்பி;க்கையை வளர்ப்பற்கு அறிமுகப்படுத்தப் பட்ட இந்தப் பழக்கம் இப்போது மூடநம்பிக்கையின் அடையாளமாகிவிட்டது.
சம்பிரதாயங்களும் சடங்குகளின் வகைகளும்

நமது சமூகத்தில் இருக்கக் கூடிய சடங்குகளை பொதுவாக மகிழ்வுச் சடங்குகள் அல்லது மங்கலச் சடங்குகள்,துயரச் சடங்குகள் அல்லது அமங்கலச் சடங்குகள் என்று இரண்டு வகைப்படுத்ததலாம். திருமணம்,குழந்தை பிறப்பு, வீடு கட்டுதல் குடி போதல்,தொழில் தொடங்குதல் முதலானவை தொடர்பாகச் செய்யப்படும் சடங்குகள் மகிழ்வுச் சடங்குகளாகவும்,மரணம், மற்றும் மரணத்தின் பின்னான மறு உலக வாழ்க்கை தொடர்பாகச்; செய்யப்படும் சடங்குகள், அமங்கலச் சடங்கு களாகவும் கருதப்படுகின்றன.

சடங்குகள் உருவானது எப்படி?

நாடோடிகளாகத் திரிந்த மனிதர்கள் இயற்கையை வென்று தங்களது தனித்துவத்தை நிலைநாட்டத் தெரியாமல் தங்களுக்கு அச்சத்தரக்கூடியது என நம்பிய விடயங்களில் இருந்த தப்பிப்பதற்காக சில செயல்களைச் செய்தார்கள். உதாரணமாக பலி கொடுப்பது. அதாவது கடவுளின் அல்லது தேவதையின் அல்லது ஒரு கெட்ட ஆவியின் சீற்றத்தை தணிப்பதற்காக வேள்வி நடத்துவது,படையல் வைப்பது என்பவற்றைக் குறிப்பிடலாம்;. பின்னர் இயற்கையை வெல்லப் பழகி நிலத்தை தங்களது உடமையாக்கி,சிறு சிறு கிராமங்கள் என்ற அடிப்படையில் குழுக்களாக வாழ ஆரம்பித்த போது அப்போது அரசு அல்லது அரசாங்கம் என்ற ஒன்று இருக்கவில்லை. அவ்வாறு அரசு தோன்றாத நிலையில் மக்களுடைய இருப்பை ஒழுங்கு படுத்துவதற்கான சட்டங்களும் இருக்கவில்லை.எனவே தங்களது நாடோடி வாழ்வுக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களை ஒருங்கிணைத்து அதை தங்களது குழு அல்லது சமூக நடைமுறையாகக் கொண்டு வந்தார்கள்.குழுத் தலைவர்கள் அல்லது குழுத்தலைவியால் கடைப்பிடிக்கப்பட்ட இத்தகைய நடைமுறைகள் பின்னர் அரசு தோன்றிய போது பண்பாண்டுக் கூறுகள் என்ற புதிய வடிவத்தை எடுத்து நிலைபெற்றவிட்டன.

மங்கலச் சடங்குகள்

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மங்கலச் சடங்குகள் என்று பார்த்தால் குழந்தை பிறப்பு ,சாமத்தியச் சடங்கு,திருமணச் சடங்கு, தொழில் சடங்கு என்பவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.பொதுவாக இந்தச் சடங்குகளின் நோக்கம் தாங்கள் நடத்த இருக்கும் செயற்பாடுகள் அல்லது தங்களுக்கு இயற்கையாக நடைபெறும் செயற்பாடுகள் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவித கேடுகளும் நேர்ந்துவிடக்கூடாது என்பதாகும்.கெட்ட ஆவிகள், தீமை செய்யும் தேவதைகள் போன்றவை தங்களது மங்கள நிகழ்வுகளை கெடுத்துவிடும், என்கின்ற பயம் ஆரம்ப காலம் தொட்டே மனிதர்களிடம் இருந்து வருகிறது.நமது கிராமங்களில் எந்தவிதமான மங்கள நிகழ்வுகள் நடந்தாலும் மாட்டுச்சாணத்தை ஒரு கைபிடி அளவுக்குப் பிடித்து அதில் ஒரு அறுகம் புல்லை வைத்து ,அதை பிள்ளையார் என்று உருவகப்படுத்தி, அதற்குப் பூசை செய்துவிட்டே அடுத்த நிகழ்வை ஆரம்பிப்பதைப் பார்க்கலாம்.விக்கினங்களை தீர்ப்பவர் விநாயகர் அதாவது பிள்ளையாரை வைத்துப் பூசை செய்துவிட்டு செயலை தொடங்கினால் அவர் அந்தச் செயலுக்கு இடையூறு வராமல் காப்பாற்றுவார் என்பது மக்கள் மத்தியிலே காலாகாலமாக பதிந்து போயுள்ள ஒரு நம்பிக்கையாகும்.இப்போது நாங்கள் ஒரு நிகழ்வை நடத்தும் போது அந்த நிகழ்வில் கலந்து கௌ;பவர்களின் முக்கியத்வத்தைப் பொறுத்து, அந்த நிகழ்வுக்கு எப்படிப் பாதுகாப்பு வழங்குவது என்பது பற்றித் தீர்மானிக்கிறோம்.அதற்குரிய ஆட்களை அதற்குரிய கருவிகளுடன் அவர்கள் எங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்த இடத்துக்கு அனுப்புகிறோம்;.இதிலேயும் நாங்கள் அனுப்புகின்ற ஆட்கள் அந்த நிகழ்வுக்கு இடையூறு வராமல் பாதுகாப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.இதே வேலையைத் தான் மாட்டுச் சாணத்தில் உருவாக்கிய பிள்ளையாரும் செய்கிறார்;.அதாவது அவர் செய்வார் என்று மக்கள்; மனதிலே ஏற்படுகின்ற நம்பிக்கை, தாங்கள் செய்கின்ற நிகழ்வுக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிடுமோ என்ற பயத்தைப் போக்கிவிடுகிறது.அதற்காக நமது தேசியத் தலைவர் கலந்து கொள்கின்ற ஒரு பொது நிகழ்வுக்கு மாட்டுச் சாணத்தில் ஒரு பிள்ளையாரை பிடித்து வைத்து விட்டு எல்லா பாதுகாப்பையும் அவர் கவனித்துக் கொள்வார் என்று இருந்துவிட முடியாது.சடங்குகள் எல்லாமே நம்பிக்கையை பெரும்பாலும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

வளைகாப்பு

இது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எட்டாவது மாதத்தில் செய்யப்படும் ஒரு சடங்காகும்.தமிழகத்தில் பொது வழக்கமாக இருக்கும் இது, நமது தாயகத்திலும் பல இடங்களில் வழக்கில் இருந்தது.குறிப்பாக இறுக்கமான இந்துத்துவக் கட்டமைப்பு உள்ள இடங்களில் இந்தச் சடங்கு இடம்பெற்றவந்தது.இப்போது பெரும்பாலும் இது அருகிக் கொண்டு வருகிறது.கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி புதுப்புடவை கட்டுவித்து,வீட்டின் நடுக்கூடத்தில் அல்லது பொது இடத்தில் இருத்தி, உறவினர்கள் எல்லாம் சேர்ந்து கை நிறை காப்பு அணிவித்து பல்வேறு விதமான தின்பண்டங்களை வைத்துப் படைத்து ஊட்டிவிடும் இது ஒரு பெரிய சடங்காகும்.இந்தச் சடங்கைச் செய்தால் தாயின் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல ஆரேக்கியமாக வளரும்,பிரசவம் சுபப் பிரசவமாகும் என்றெல்லாம் இதை செய்யும் மக்கள் நம்புகிறார்கள்;.இதைச் செய்யாவிட்டால் தாய்க்கும் சேய்க்கும் கேடு நிகழ்ந்துவிடும் என்ற பயமும் மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.விஞ்ஞானமும் மருத்துவமும் வளராத அந்தக் காலத்தில் பிரசவம் என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு மறுபிறப்பு மாதிரியே இருந்தது.அதாவது ஒரு பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் மறுபிறப்பு பிறந்ததற்கு சமம் என்று கருப்பட்டது. ஏனெனில் அந்தக்காலத்தில் அந்தளவுக்கு பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. பிரசவத்தின் போது தான் இறந்து விடுவேனோ? இந்தக் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்கப் போகிறேன்? ஏன்கின்ற பயம் பொதுவாக எல்லா கர்ப்பிணிப் பெண்களிடமும் இருந்தது.ஏனெனில் பல கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது இறந்ததை அவள் பார்த்திப்பாள் அல்லது உறவினர்கள் சொல்லக் கேட்டிருப்பாள்.இந்தப் பயம் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதித்து அவளையும் நோயாளியாக்கிவிடுகிறது. இதைப் போக்கி அந்தப் பெண்ணின் மனதில் தன்நம்பிக்கையை வளர்ப்பது தான் இந்தச் சடங்கின் முக்கிய நோக்கமாகும்.மருத்துவமும் அறிவியலும் அதிவேகமாக வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் இந்தக்hலத்தில் இந்தச் சடங்கு செல்வச் செருக்கையும் போலிக் கௌரவத்தையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு பகட்டுச் சடங்காக மாறிவிட்டது.

ஏணைத் துடக்கு அல்லது தொட்டில் துடக்கு

ஒரு குழந்தை பிறந்து அதை ஏணையில் அல்லது தொட்டிலில் போடும் வரையுள்ள காலத்தை துடக்குக் காலம் என்று சொல்வார்கள்;.சதாரண மக்களுக்கு இது 31 நாட்களாகவும் சில ஆளும் வர்கத்தினருக்கு 15 நாளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்தக் காலத்தில் குழந்தையின் இரத்த உறவினர்கள் மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் கோவில்களுக்கச் செல்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது.மற்றவர்களும் இந்த துடக்கு வீட்டுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டு;ம் என்றும் அவ்வாறு தவர்க்க முடியாத காரணங்களால் செல்பவர்கள் வீட்டுக்கு வந்ததும் குளித்து முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது.இப்போது இந்த துடக்கு சம்மந்தமான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் செயற்பாட்டுத் தன்மையை இழந்துவருகின்றன.உண்மையில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் சின்னம்மை பெரியம்மை வயிற்றோட்டம், கொள்ளைநோய்(பிளேக்) போன்ற தொற்று நோய்களும் அதிமாக இருந்தன. இவற்றுக்கான தடுப்பு மருந்துகளும் அப்போது பெரிய அளவுக்கு இருக்கவில்லை.பிறந்த குழந்தையை வெளியில் கொண்டு செல்வதும், குழந்தையின் இரத்த உறவினர்கள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்குச் சென்றுவிட்டு வந்து குழந்தையுடன் இருப்பதும்,வெளியாட்கள் அதிகளவுக்கு குழந்தை பிறந்த வீட்டுக்குச் செல்வதும் நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதனாலேயே இந்த நடைமுறை ஆரம்ப காலத்தில் கொண்டுவரப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் மதவாதிகளும் அதிகார வர்க்கமும் இதை ஒரு வரட்டுச் சம்பிரதாயமாக்கி தீட்டு என்ற தீண்டாமை வட்டத்துக்குள் இதை தள்ளிவிட்டதால் இது ஆரம்பகால சமூக நோக்கிலிருந்து வழுவிட்டது.
(தெடரும்)