வியாழன், 6 நவம்பர், 2008

திங்கள், 29 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறு பக்கம் 29

29
அடக்குமுறைக்கு உள்ளாகின்ற ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடுகின்ற போது அதற்கு ஆதரவு வழங்குவதென்பதும் . ஒரு சர்வதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்ற போது அதற்கு ஆதரவு வழங்குவதென்பதும். விடுதலையை விரும்புகின்ற அனைவரினதும் தார்மீக கடமை.
இதில் தனி மனிதர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், அரசாங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அத்தகைய ஆதரவைத் தொடர்ந்து விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கும் இயக்கங்களுக்கும் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தார்மீக அடிப்படையில் வழங்கப்படுகின்ற இந்த ஆதரவை எந்தச் சர்வதேசச் சட்டமும் தடை செய்யவில்லை. ஆனாலும் ஒடுக்குமுறை அதிகரிக்கின்ற கட்டத்தில் இராணுவ ரீதியான ஆதரவு, இராணுவ ரீதியான தலையீடு என்பது நிகழ்கின்ற போது அதுகூட விமர்சனத்திற்குரிய ஒன்றாகத்தான் இருக்கின்றது.
தன்னுடைய நாட்டின் விடுதலைக்காக மக்களின் விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு விடுதலை இயக்கம், இன்னொரு நாட்டிலே இருக்கக்கூடிய தன்னைப் போன்ற விடுதலை இயக்கத்திற்கு உதவி வழங்குவது இயல்பு. அந்த உதவி இராணுவ உதவியாக இருந்தால் கூட அதை சர்வதேசச் சட்டங்கள் தடை செய்தாலும் அதில் நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஒரு சில தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக, இன்னொரு நாட்டின் உளவுப் பிரிவின் தேவைகளுக்காக ஒரு நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க இன்னொரு நாட்டின் விடுதலை இயக்கம் துணை போவதென்பதை எந்த வகையிலும் ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில் ஒரு விடுதலை இயக்கம் அப்படி ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதிமுயற்சிக்கு துணைபோகுமாக இருந்தால் அது ஒரு விடுதலை இயக்கம் என்ற தகுதியை இழந்துவிடும்.
உண்மையில் புளொட் இயக்கம் தான் செய்த உட்கொலைகள் காரணமாகவும் கெரில்லாப் போராட்டத்தை நிராகரித்த ஒரேயடியான இறுதி யுத்தம் என்கின்ற தவறான யுத்த தந்திரோபாயத்தாலும் விடுதலை இயக்கம் என்ற அங்கீகாரத்தை 99வீதம் ஏற்கனவே இழந்திருந்தது.
றோவின் தேவைக்காக மாலைதீவு அப்துல் ஹயுமின் ஆட்சியைக் கவிழ்க்க முனைந்ததன் மூலம் நூற்றுக்கு நூறு வீதம் அது விடுதலை இயக்கம் என்ற தகுதியை இழந்து தான் ஒரு கூலிப்படை என்பதை நிருபித்துவிட்டது புளொட்டின் மாலைதீவு நடவடிக்கை எந்த விதத்தில், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அது புரட்சிகர நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதாலும் இனி எத்தகைய நடவடிக்கைகள் மூலமும் ஒரு கூலிப்படையை புரட்சிகர விடுதலை இயக்கமாக மாற்ற முடியாது என்று தீர்மானித்ததாலுமே புளொட்டில் எஞ்சியிருந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் அதிலிருந்து வெளியேறினார்கள்;
ஆனால் றோ பாலபுத்தரை முன்னிறுத்தி சிறிலங்கா அரசியலில் தன்னுடைய காய் நகர்த்தலுக்குப் பயன்படுத்தக் கூடிய தலையாட்டி அமைப்பாக புளொட்டைப் பயன்படுத்த விரும்பியது. மறுபுறத்தில் சிறிலங்கா இராணுவம் புளொட்டை தங்களது கைக்கூலி அமைப்பாக உருவாக்குவதன் மூலமும் புலிகளின் பெயரால் புளொட்டைக் கொண்டு தமிழ் நாட்டில் சில காரியங்களைச் செய்விக்க விரும்பியதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழ் நாட்டில் புலிகளுக்கிருந்த ஆதரவு சிறிலங்கா இராணுவத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. வடமராட்சி லிபிரேசன் ஒப்பரேசன் மூலம் தாங்கள் அடைந்த வெற்றியை தோல்வியாக மாற்றிய ராஜீவ்காந்தியின் நடவடிக்கை அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ராஜீவ்காந்தியின் நடவடிக்கையை இந்திய இராணுவத்தை திருப்பித் தாக்கியதன் மூலம் புலிகள் எதிர்த்தால்கூட சிறிலங்கா இராணுவம் அதையிட்டு அதையிட்டுப் பெரிதாக சந்தோசப்படவில்லை.
புலிகளை இந்திய இராணுவத்தால் வெல்ல முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். புலிகளின் பெரிய பலமே தமிழ்நாடுதான். அங்கிருந்து தான் ஆயுதங்கள், உணவுப் பொருட்களை எல்லாம் கொண்டு வருகிறார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும்வரை இந்தியா நிச்சயமாக தங்களது விவகாரத்தில் தலையிட்டுக்கொண்டுதான் இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள்.
இலங்கையில் ஏற்படும் நெருக்கடிகளால் இந்திய இராணுவம் திருப்பி அழைக்கப்பட்டால்கூட லிபரேசன் ஒப்பரேசன் போல் தாங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு பெரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் இந்தியா தலையீடு செய்யும் என்று அவர்கள் கணித்தார்கள்.
எனவே புலிகளுக்கும் இந்தியாவுக்குமுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி புளொட் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சில சீரழிவு வேலைகளை செய்விப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் புலிகள் மேல் வெறுப்பை உருவாக்க சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டது
அதாவது முக்கியமான நபர்களை கொலை செய்வது, கொள்ளைகள் அடிப்பது, பொதுமக்களுக்கு எதிரான மோதல்களை உருவாக்கி அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்வது இப்படியான சம்பவங்களையெல்லாம் புலிகள்தான் செய்தார்கள் என மக்கள் நம்பும்படி புளொட்டைக் கொண்டு செய்விப்பதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு புலிகள் மேல் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று வெறுப்பு ஏற்படும்படி செய்ய வேண்டும் என சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டது.இதன்மூலம் எதிர்காலத்தில் தமிழீழப்பிரதேசத்தில் தாங்கள் மேற்கொள்ளும் எந்தப் பெரிய இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தும் தமிழ்நாட்டு மக்கள் பெரிதாக அக்கறை கொண்டு கிளர்ந்தெழுந்தபடி செய்ய வேண்டும் என்றும் விரும்பியது.
பொதுவாகத் தமிழ் நாட்டின் கிராமபபுறத்து மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு PLOT, EPRLF, ENDLF, TELO என்று இலங்கை இயக்கங்களை வேறுபடுத்திப் பார்க்கத்தெரியாது அவர்களைப் பொறுத்தவரை எல்லோருமே விடுதலைப் புலிகள் தான. புளொட் மோட்டார் சைக்கிளை கடத்தினாலும், சங்கிலி அறுத்தாலும், அதை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்கின்ற மக்களும் அங்கே இருக்கின்றார்கள். ரெலோவோ ஈ.பி.ஆர்.எல்.எப்.போ அல்லது இயக்கத்தைவிட்டு ஒதுங்கிய ஆயுதக்குழுக்களோ செய்யும் கொள்ளைகள், கொலைகள், ஆள்கடத்தல்கள் கூட விடுதலைப்புலிகள்தான் செய்தார்கள் என்று நினைக்கின்ற பாமரத்தம் இன்னமும் தமிழ்நாட்டு கிராமங்களிலும் நகரங்களிலும் இருககின்றது. இதையெல்லாம் செய்பவர்கள் யார் என்ற உண்மை தெரிந்தும் கூட அதெல்லாம் விடுதலைப்புலிகளின் வேலை என்று பொதுப்படையாகச் சொல்லி மக்களை திசைதிருப்பி விடுவதற்கென்று பார்பனப் பத்திரிகைகள் வேறு இருக்கின்றன.
எனவே இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் சிறிலங்கா இராணுவத்தின் கூலிப்படையாக வேலை செய்வதற்கென்று வவுனியாவில் நவீன புளொட்டுக்கான முதல் கட்ட ஆயுத விநியோகமும் வவுனியா செட்டிகுளத்தில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகின்றது

காந்தி தேசத்தின் மறுபக்கம் 28

28

உமாமகேஸ்வரனுடைய கொலை எவ்வாறு நடந்தது என்பதற்கு நேரில் பார்த்த சாட்சியம் எதுவும் கிடையாது. அது பற்றி கிடைத்திருக்கக்கூடிய எல்லாத் தகவல்களும் வெறும் ஊகங்கள் என்ற அடிப்படையிலே தான் இருக்கின்றன.

இன்றைய புளொட் தலைமைதான் ஆச்சிராசன், ராபின் உட்பட 6 பேர் கொண்ட குழுதான் அவரைக் கொலை செய்யதாகச் சொல்கிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்பது தெரியாது.
ஏனெனில் உமாமகேஸ்வரன் கொலை முடிந்த கையோடு சென்னை வடபழனி தேசிகர் தெருவில் உள்ள 11ம் இலக்க இல்லத்தில் ஒரு கூட்டம் நடந்ததாகவும் அதில் இன்றைய புளொட் தலைமை உட்பட இன்றைய புளொட் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உமாமகேஸ்வரனின் கொலையை நியாயப்படுத்தி அதற்கான காரணங்களை ஒரு ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து இலங்கையில் எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்குப் போட்டுக் கேட்க ஏற்பாடு செய்து அனுப்பியும் இருந்தார்கள். இந்த ஒலிப்பதிவு நாடா மற்றவர்களின் கையில் அகப்படாத வகையில் வவுனியாவில் வைத்து அதை மாணிக்கதாசன் தீயிட்டுக் கொளுத்தியதாக அறிய முடிந்தது.
உமாமகேஸ்வரன் கொலையுண்டவுடன் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க உடனடியாக யாரும் முன்வரவில்லை. உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டுவிட்டார், அதுவும் ஆச்சிராசன், ராபின் ஆகியோர் தான் அவரை அழைத்துச் சென்று கொலைசெய்தவர்கள் என்ற விடயத்தை மற்றவர்களுக்கு முதலில் சொன்னவர் சாம் முருகேசு என்பவர். இவர் தான் அத்துலத்முதலியின் உதவியுடன் பின்னர் உமாமகேஸ்வரனது சடலத்தைப் பொறுப்பேற்று வவுனியாவிற்கு கொண்டு சென்று அடக்கமும் செய்தார்.

உண்மையில் உமாமகேஸ்வரனுடைய இறுதிக் காலத்தில் அவரை திருடன் என்று விமர்சித்தவர்கள், துரொகி என்று வெறுத்தவர்கள், றோ வுடன் சேர்ந்த அவரை கவிழ்க்கச் சதி செய்தவர்கள் எல்லாம் அவரது சடலம் தீயில் எரிந்து சாம்பலானவுடன் தியாகி என்றும், கொள்கை வீரர் என்றும் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்றும் ஆகா, ஓகோ என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள்.


பொதுவாக ஒரு அமைப்பின தலைவர் இறந்தவுடன் ஆகக்குறைந்த பட்சம் அதன் உயர் அங்கமான பொலிட் பீரோவோ அல்லது மத்திய குழுவோ கூடி ஒரு தற்காலிகத் தலைவரைத் தெரிவு செய்வதே வழக்கம். ஆனால் உமாமகேஸ்வரன் இறந்தவுடன் புளொட்டின் பொலிப் பீரோவோ, மத்திய குழுவோ கூட்டப்படவில்லை. மாறாக மாநாட்டில் இயக்கத்தின் சகல பொறுப்புக்களிலுமிருந்து இடை நிறுத்தி வைக்கபட்ட மாணிக்கதாசன் வவுனியாவில் வைத்து தனக்கு வேண்டிய சிலரின் உதவியோடு தானே அமைப்பின் தற்காலிக தலைவராக தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.


இந்தப் பிரகடனப்படுத்தலுக்கு முன் அவர் அப்போது சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த கொப்பேகடுவாவின் ஆலோசனை பெற்றதாக சொல்லப்படுகின்றது. அதன்பின் அந்தத் தற்காலிகத் தலைவரால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவே அவர்களைச் சேர்ந்தவர்களைக்கொண்ட ஒரு மாநாட்டை நடாத்தி பாலபுத்தரை மாகாணம் பொருந்திய தலைவராக மகுடம் சூட்டியது.


உண்மையில் ஒரு சதி முயற்சி நடந்தால் அதற்கு அடுத்த கட்டம் எவ்வாறு நகர்த்தப்படுமோ அவ்வாறுதான் நகர்த்தப்பட்டுள்ளது. புளொட்டின் புதிய நிர்வாகம் பதவியைக் கைப்பற்றிக் கொண்டவுடன் புதிய நிர்வாகத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்த சாம் முருகேசுவுக்கு அவர் சில இரகசியங்களை வெளியே தெரியப்படுத்தாமல் இருப்பதற்காக அவருக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.


ஆச்சிராசன், ராபின் அகியோரே உமாமகேஸ்வரனை கொலை செய்ததாக சொன்ன சாம் முருகேசுவே உமாமகேஸ்வரனை கொலை செய்த ஆயதத்தை வைத்திருந்ததாகவும் பின்பு அவற்றை புளொட்டின் புதிய நிர்வாகம் அவரிடமிருந்து பெற்று மறைத்துவிட்டதாகவும்; சிலர் சொல்கிறார்கள்.


இதில் எந்தளவு துரம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அதன் பின் சாம் முருகேசு நீண்ட காலம் உயிரோடு இருக்கவில்லை. திடீரென்று மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரைப் புலிகள் கொன்றுவிட்டதாக புளொட் தலைமை சொல்கின்றது. ஆனால் அவர் இரகசியங்களை வெளியே சொன்னபடியால் மாணிக்கதாசன்தான்; புலிகள் என்ற பெயரில் அவரைக் கொன்றது என்று அதேகாலத்தில் புளொட்டைவிட்டு வெளியேவந்த நிறையப் பேர் சொல்கிறார்கள்.


இதேபோல் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு முன் தினம் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரனது நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாப்பாளரான சக்திவேல், உமாமகேஸ்வரனை கொன்றவர்களை பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவரும் ஒரு நாள் கொலையுண்டு போனார். அவரையும் புலிகள்தான் கொலை செய்துவிட்டதாக புளொட் சொல்கின்றது. ஆனால் அது உண்மையில்லை. அவரைக் கொன்றது உண்மையான புலிகள் அல்ல. அது கூட செட்டப் செய்யப்பட்ட புலிகள் தான் என்று சொல்கிறார்கள்.


அடுத்து இன்றைய புளொட் தலைமையால் நம்பிக்கைத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட ஆச்சிராசளை கூட இந்தியாவில் வைத்து கொலை செய்ய மாணிக்கதாசன் முயன்றதாக சொல்லப்படுகின்றது. 1993ம் ஆண்டு சிறிலங்கா அரசின் தேவைக்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இங்கு வந்த மாணிக்கதாசன்; இங்கிருந்த முன்னாள் புளொட் உறுப்பினர்கள் பலருக்குத் தொலைபேசி எடுத்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்த ஆச்சிராசனை தாங்கள் கொன்றுவிட்டதாக அதாவது அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்லியிருந்தார்.


இதைவிட சுவீசில் வசித்து வந்த ராபினும், அவரது மனைவியும், மனைவி வயிற்றிலிருந்த குழந்தையும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள் கூட புலிகள் செய்ததாக மற்றவர்கள் நம்பும் விதத்தில் ஒரு செட்டப்பை உருவாக்கியே செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் சுவீஸ் பொலிசார் அங்கேயிருந்த புளொட் உறுப்பினர்கள் தான் இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.


உண்மையில் இந்தத் தொடர் கொலைகள் உமாமகேஸ்வரன் கொலை பற்றியே சில சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றன. அதாவது இந்தக் கொலையைப் பற்றிய இரகசியங்கள் தெரிந்தவர்கள் கொலைகாரனைக் கண்டுபிடித்து பழிவாங்கப் போவதாக சபதம் செய்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதென்பது இன்றைய புளொட் தலைமைப்பீடம் ஏதோ . ஒன்றை மறைக்க விரும்புகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய புளொட்டில் எத்தனையோ முன்னணி உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர்களும் இருக்க சக்திவேலையும், சாம்முருகேசையும் மட்டும் குறிவைத்துக் கொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கில்லை. அவர்கள் புலிகளால் கொல்லப்படும் அளவுக்கு அவர்களால் தேடப்பட்டவர்களும் அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். புலிகள் அவர்களை கொன்றார்கள் என்பது றோ வுக்காகவும் உமாமகேஸ்வரனது வெளிநாட்டுச் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்வதற்காகவும் தாங்கள் செய்வித்த கொலையை மூடிமறைக்க புதிய புளொட்டின் உயர்பீடம் உருவாக்கிவிட்ட பம்மாத்தே இது என்று நம்பப்படுகின்றது.

புதிய புளொட் என்று இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டவுடன் பழைய புளொட் தானாக கலைந்து போய்விட்டது. புளொட்டின் உண்மையான உறுப்பினர்கள் பலர் முற்றாக போராட்டத்தைவிட்டு ஒதுங்கிவிட்டனர்.


ஆனால் றோவும் சிறிலங்கா இராணுவமும் புளொட் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று விரும்பின. இருபகுதியினரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் வேறு வேறு மட்டத்தில் தொடர்பு கொண்டு புதிய புளெட்டுக்கு உயிர் கொடுக்க முயன்றனர்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் -27

27
முள்ளிக்குள தாக்குதல் முடிந்த பின்பு றோ கூப்பிட்டும் அவர்களிடம் பேசி ஆயுதம் வாங்கி புலிகளைத் திருப்பித் தாக்க மறுத்ததன் மூலம் உமாமகேஸ்வரன் தங்களை ஏமாற்றிவட்டார். இறந்த தங்களது தோழர்களுக்கு துரோகம் செய்து விட்டார். தங்களைய நடுத்தெருவில் விட்டுவிட்டார். என்கின்ற அதிருப்தி மனப்பான்மை அந்தத்தாக்குதலில் பலியானவர்கள் போக எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது.

இந்த அதிருப்தியை மேலும் தூண்டிவிடுவதில் கொழும்பில் தங்கியிருந்த மாணிக்கதாசனும் பாலபுத்தரின் ஆதரவாளர்களும் பெரும் பங்காற்றினர்.

எங்களுடைய தோழர்கள் அநியாயமாகச் செத்துப் போனார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. புலிகளைத் தாக்க மாட்டன், இந்தியாவிட்டை போகமாட்டன் என்று உவருக்கென்ன (உமா) கொள்கை வேண்டிக் கிடக்கு. என்று இவர்கள் அதிருப்தி கொண்டிருந்த உறுப்பினர்களைத் தூண்டிவிட்டனர்.

உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை றோ தங்களை வந்து சந்திக்கும்படி சொன்ன செய்தி கிடைத்த உடனேயே அவர்களின் சதித்திட்டம் அவருக்குப் புரிந்துவிட்டது. முன்பு ராஜனை வைத்து தன்னை வீழ்த்த சதி செய்தது போல் தற்போது பாலபுத்தரை வைத்து தன்னை ஒழித்துக்ட்ட அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை அவர் உறுதியாக நம்பினார். கீழ்மட்ட உறுப்பினர்களை அழைத்து றோவிற்காகத் தான் மாலைதீவுத் தாக்குதலை நடத்தினேன் என்று உண்மையைச் சொல்ல அவர் பயந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது.

இந்திய எதிர்ப்பு அது இது என்று கொள்கை பேசிக் கொண்டு EPRLF ENDLF TELO இயக்கங்கள் போல் இந்திய இராணுவத்துடன் ஒட்டி உறவாடி வசதிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பதை துரோகத்தனம் என்று சொல்லிவிட்டு திரைமறைவில் தான் றோ வின் கையாளாக செயற்பட்டேன் என்று சொன்னால் கீழ்மட்ட உறுப்பினர்கள் தன்னுடைய தலைமையை சந்தர்ப்பவாத தலைமையாக நினைத்து வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர் பயந்தது முதலாவது காரணம்.

அடுத்தது மாலைதீவு தாக்குதல் தோல்வியில் முடிந்த காலத்திலும் மகாநாடு நடந்த போதும் உண்மையைச் சொல்லாமல் இருந்துவிட்டு நெருக்கடி வந்தவுடன் உண்மையைச் சொன்னால் மற்றவர்கள் அதை பொய் என்றும் றோவைச் சந்திக்க மறுப்பதற்கு தான் சொல்லும் கட்டுக்கதை என்றும் நினைத்துவிடுவார்கள் என்று எண்ணியது இரண்டாவது காரணமாகும்.

இதனால் பலவீனமான நிலையில் அமைப்பை வைத்துக் கொண்டு புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இயங்க அவர் விரும்பவில்லை. புளொட்டைக் கலைக்க வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அவ்வாறு புளொட் கலைக்கப்பட்டால் வெளிநாட்டுக்குப் போக வசதியுள்ளவர்கள்; போக வசதி இல்லாதவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிப் போக முடியாத வறிய உறுப்பினர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் புளொட்டிற்கென வெளிநாடுகளில் இருந்த நிதியை பயன்படுத்தி அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார்.

வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லாமல் தொடர்ந்து போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புபவர்களை மலையகத்திற்கு அனுப்பிவைக்க அவர் தீர்மானித்தார்.

அதோடு தான் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருப்பதும் பாதுகாப்பற்றது என்று அவர் நினைத்தார். எனவே தனது இருப்பிடத்தை கண்டிக்கு அல்லது மாத்தறைக்கு மாற்ற முடிவு செய்தார்.

இது விடயமாக மலையகத்திலிருந்த கதிரவனிடம் தொடர்பு கொண்டு JVPயினர் மூலமாக கண்டியிலும், மாத்தறையிலும் தான் தங்குவதற்கு ஒரு வீடு பார்க்கும்படியும் இந்தவிடயத்தை மிக இரகசியமாக வைத்திருக்கும் படியும் சொன்னார். அதேநேரம் தான் முன்பு கராச்சிக்கு தனது இருப்பிடத்தை மாற்ற விரும்பிய போது சிங்கப்பூருக்குப் போகப் போவதாக வெளியே வதந்தி ஒன்றை பரவ விட்டது போல தற்போதும் தான் சிங்கப்பூருக்கு போகப் போவதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்.

அவர் தானே உருவாக்கிவட்ட இந்த வதந்தியே அவரது உயிருக்கு உலை வைக்கும் என அவர் அப்போது நினைக்கவில்லை. இந்த வதந்தி வெளியே பரவியவுடனேயே உமாமகேஸ்வரனை ஒழித்து பாலபுத்தரை தலைமைப் பதவிக்கு கொண்டுவர காத்திருந்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிங்கப்பூரில் போயிருந்து கொண்டு இயக்க நடமவடிக்கைகளை கவனிக்கப் போவதாக உமாமகேஸ்வரன் வெளியிட்ட இந்தத் தகவலை இவர்கள் அவர் இயக்கச் சொத்துக்களுடன் மனைவியையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடப் போகிறார். அதற்கு முன் பாலபுத்தர், மாணிக்கதாசன்; உட்பட பத்துப் பேரை கொலை செய்யப் போகின்றார் என்று கயிறு திரித்துவிட்டார்கள்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கப்பூர் செல்வதற்கு உமாமகேஸ்வரன் தங்களிடம் உதவி கேட்டதாகவும், தங்களுக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தாங்கள் இரகசியமாக அந்த ஏற்பாட்டை செய்து கொடுக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கேட்பவர்களுக்கு அவர்கள் நம்பும்படியாக அதி உயர் இரகசியம் ஒன்றை சொல்வது போல் கதை விட்டார்கள்.


உண்மையில் உமாமகேஸ்வரன் ஒரு போதும் சிங்கப்பூரில் சென்று தங்கியிருக்க விரும்பவில்லை. முன்பு இந்தியாவில் பிடிபட்ட ஆயுதங்களைச் சிங்கப்பூரில் வைத்து கப்பலில் ஏற்றியது தொடர்பாகவும் புளொட்டின் பேரில் நடந்த தூள் கடத்தல், அந்நியச்செலாவணி, விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் சிங்கப்பூர் பொலிசாரால் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு நபராக இருந்தார். சிறிலங்கா பொலிசைவிட சிங்கப்பூர் பொலிஸ் ஆபத்து மிகுந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான் சிங்கப்பூர் போவதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தைக் கூட நம்ப வைத்துவிட்டு கண்டியில் அல்லது மாத்தறையில் ஜே.வி.பி.யினரது ஆதரவுடன் ஒரு முஸ்லீம் வியாபாரி போல தங்கியிருக்க விரும்பினார்.

ஆனால் றோவினால் சாவி கொடுத்துவிடப்பட்ட பாலபுத்தரின் ஆதரவாளர்கள் இந்தவிடயத்தில் செய்த கயிறு திரிப்புக்களும் கிளப்பிவிட்ட கதைகளும் உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த ராபின், ஆச்சி, ராஜன் போன்றவர்களைக்கூட அவரைக் கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரப்பட வைத்தது.

இந்த ஆத்திரத்தை தங்களது இலக்கை நோக்கி (உமாவைக் கொல்ல) திருப்பிவிட திட்டமிடப்பட கயிறுதிரிப்பாளர் குழு, முதலில் மலையகப் பொறுப்பாளர் கதிரவனை(திவாகரனை) கொலை செய்யத் திட்டமிட்டது.
ஆனால் மலையகத்திற்குச் சென்று அங்கே வைத்து அவரைக் கொலை செய்ய அவர்களுக்கத் துணிவிருக்கவில்லை. ஜே.வி.பி.யின் பயமிருந்தது. எனவே கொழும்புக்கு அவரை வரவழைத்து அங்கு வைத்து அவரைக் கொல்வதற்கு அவர்கள் காத்திருந்தனர்.

இதற்கிடையில் உமாமகேஸ்வரன் கேட்டுக் கொண்டபடி ஜே.வி.பி.யினரிடம் நடந்த விடயங்களைச் சொல்லி அவருக்குக் கண்டியிலும், மாத்தறையிலும் வீடுகள் பார்த்து எல்லா ஒழுங்குகளையும் செய்து முடித்துவிட்டு இந்தவிடயம் பற்றி உமாமகேஸ்வரனுடன் நேரடியாக கதைப்பதற்காக கதிரவன் நுவரேலியாவிலிருந்து கொழும்புக்கு வந்து கொண்டிருக்கும் போது ரந்தனிகல நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அவர் வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அவரது காலும், கையும் உடைந்துவிட்டன. இது நடந்தத 1989ம் ஆண்டு யூலை மாதம் 12ம் திகதி.

1989 யூலை மாதம் 16ம் திகதி இரவு தெகிவளையில் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்தது. உமாமகேஸ்வரன் பின்பக்க மதிலால் ஏறிக் குதித்து தப்பி ஒடிவிட்டார். மற்றவர்களைப் போல் மனம் மாறாமல் உமாமகேஸ்வரன் மேல் நம்பிக்கையோடு இருந்த அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவரான சக்திவேலை மட்டும் இராணுவத்தினர் கைது செய்து சென்றுவிட்டனர்.

இது ஒரு காட்டிக் கொடுப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது தெரியாது.

மதில் பாய்ந்து ஓடிய உமாமகேஸ்வரன் ஆச்சி ராஜன் மற்றும் ராபின் துணையோடு பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்த அவருக்கு வேண்டிய ஒருவர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.

மறுநாள் 17ம் திகதி காலை தாங்கள் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து வருவதாக சொல்லிவட்டு ஆச்சி ராஜனும், ராபினும் வெளியே சென்றனர்.

அன்று மதியம் ஆச்சி ராஜன் மட்டும் திரும்பி வந்து சாப்பிடப் போக வரும்படி உமாமகேஸ்வரனை அழைத்தான்.

அவர் அவனுடன் வெளியே வந்ததும் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்பிருந்த காலிவீதியால் செல்வது ஆபத்தானது என்றும் பின்புறமாக கடற்கரையோரம் உள்ள வீதி வழியாக செல்லலாம் என்றும் சொல்லி அவரை அழைத்துச் சென்றான்.

அவர்கள் இருவரும் அந்த வீதியில் சிறிது தூரம் சென்ற போது ராபின் உட்பட 5 பேர் அங்கே ஓரிடத்தில் இருந்தார்கள்.

அதைக்கண்ட உமாமகேஸ்வரன் இந்த சனியன்கள் இதில ஏன் நிற்குதுகள் உதுகளுக்குச் சொன்னாலும் விளங்காது என்று பேசிக் கொண்டு அவர்களைக் கடந்து அப்பால் சென்றார்.

ஒரு பத்து மீட்டர் தூரம் அவர் சென்றிருக்கமாட்டார் அதற்குள் முதல்வெடி அவரது முதுகைத் துளைத்தது. ஐயோ என்று அவர் அலற அடுத்தடுத்த வெடிகள் அவரது உடலைத் துளைத்தன. அவர் நிலத்தில் சுருண்டு வீழ்ந்தார். அந்த இடத்திலேயே அவர் கதை முடிந்தது.

பார் தமிழ் தமிழ் என்று பம்மாத்து விட்ட உவன் சாகிற போதும் அம்மா என்று கூப்பிடவில்லை. ஐயோ என்று தான் சொன்னான் என்று அவரை சுட்ட ஒருவன் கத்தினான்

காந்திதேசத்தின் மறுபக்கம் 26

26
உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கு ENDLF இன் மூலமாக ஏற்பாடு செய்திருந்த வசந்தன் உரிய காலத்தில் அதைச் செய்து முடிக்காமல் இழுத்தடித்ததால் அவன் மீதும் ENDLF மீதும் றோ அதிகாரிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எனவே அவர்கள் மாற்று வழி ஒன்றை தேட ஆரம்பித்தார்கள்.

இதற்கென அவர்கள் புளொட்டில் இருந்த உமாமகேஸ்வரன் அதிருப்தியாளர்கள் பலரைக் கொழும்பிலும் தமிழகத்திலும் வைத்து சந்தித்தனர். இந்த அதிருப்தியாளர்களில் பலர் முன்பு பரந்தன் ராசனை வைத்து புளொட்டை உடைத்தது போல் தற்போது பாலபுத்தரை வைத்து புளொட்டை உடைக்க முயலும்படியும் உமாமகேஸ்வரனுடைய தீவிர ஆதரவாளர்கள் மாலைதீவில் மாட்டுப்பட்டு விட்டார்கள் என்றும் தற்போது எஞ்சியிருப்பவர்களும் அதையிட்டு அதிருப்தி கொண்டிருப்பதாகவும் உமாமகேஸ்வரனது தலைமைக்கு எதிராக மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் போது நிச்சயமாக உமாமகேஸ்வரன் தனிமைப்பட்டுவிடுவார் என்றும் றோவிற்கு ஆலோசனை சொன்னதாக நம்பப்படுகின்றது. றோவுக்கு இது சரியான ஆலோசனை என்று படவே அவர்கள் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


இதற்கிடையில் இந்த விடயம் இந்திய வெளியுறுவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் உமாமகேஸ்வரனுக்குத் தெரிய வந்தது. திருமதி இந்திராகாந்தியின் காலத்திலிருந்தே இந்த வெளியுறவுத்துறையில் கடமையாற்றி வந்த இந்த அதிகாரி இலங்கை விவகாரத்தில் தொடர்புள்ளவர். பெரிய அன்பளிப்புக்களைத் தொடர்ந்து வழங்கியதன் மூலம் உமாமகேஸ்வரன் அவரை தனது நண்பனாக்கியிருந்தார். இந்த அன்பளிப்புக்களுக்காகவே அவர் உமாமகேஸ்வரன் விடயத்தில் றோ எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பல தடலைகள் அவருக்குத் தெரிவித்திருக்கிறார். அவை ஒரு போதும் பொய்யானமாக இருந்ததில்லை.

எனவே தான் பாலபுத்தரை முன்வைத்து தன்னை அழிக்க றோ மேற்கொள்ளும் புதிய சதி முயற்சியைவிட்டு அவர் அதிக ஆத்திரமடைந்திருந்தார். றோ தன்னுடைய முயற்சியில் முந்துவதற்கு முன் தான் முந்திக் கொண்டு அவர்களை மூக்குடைபடச் செய்ய அவர் விரும்பினார். அதாவது பாலபுத்தரை உடனடியாகக் கொன்றுவிட அவர் தீர்மானித்தார்.


ஆனால் யாரைக் கொண்டு கொல்வது என்பதுதான் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. தான் வழக்கமாக மற்றவர்களை கொலை செய்ய ஏவிவிடும், ஆசி ராஜன் மூலமோ இதை செய்விக்க அவர் விரும்பவில்லை. இந்தவிடயம் அரசல் புரவலாக வெளியே வந்தால்கூட அப்போதிருந்த சூழ்நிலையில் அது தனக்கு பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்து விடும் என்று அவர் பயந்தார். எனவே இயக்கத்துடன் சம்மந்தப்படாத ஆனால் தனக்கு நம்பிக்கைக்குரிய மூன்றாவது நபர் மூலமே இந்தக் காரியத்தை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

அந்த மூன்றாவது நபர் JVP ஆக இருந்தால் பொருத்தமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்று அவருக்கத் தோன்றியது. அதனாலேயே அவர் கதிரவனை அழைத்து விசய்ததைச் சொல்லி இது பற்றி துஏP தலைவர்களுடன் பேசுவதற்கு சந்திப்புக்கு ஒழுங்கு செய்யும்படியும் சொன்னார்.

துஏP றோவின் மீது கடுமையான விரோத போக்கைக் கொண்டிருந்தது. பாலபுத்தரை றோவின் பிரதான ஏஜெண்டாக அவர்களுக்கு அடையாளம் காட்டி அவர் மூலம் தனக்கும் JVPக்கும் கூட ஆபத்தென்று சொல்லி அவர்களைக் கொண்டு அவரை கொழும்பில் வைத்தோ அல்லது தந்திரமாக நுவரேலியாவிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தோ கொன்று விடலாம் என உமாமகேஸ்வரன் திட்டமிட்டார்.

இது விடயமாக 1989ம் ஆண்டு மேமாதம் 15ம் திகதி நுவரேலியா நகரத்தின் புறநகர் பகுதியான ஹாவ எலியவிலுள்ள ஒரு சிங்கள இடதுசாரி பிரமுகரின் வீட்டில் JVP பொதுச்செயலாளர் உபதிஸ்ஸசம நாயக்காவை சந்திக்க ஏற்பாடாயிருந்தது.

அதற்கிடையில் மே மாதம் 13ம் திகதி உமாமகேஸ்வரன் கொஞ்சமும் எதிர்பார்க்காத பாரிய சம்பவம் ஒன்று முள்ளிக்குளத்தில் நடந்தது.

அன்று புளொட்டினது முள்ளிக்குள முகாம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் சங்கிலி, வசந்தன் உட்பட தமிழ் நாட்டில் புளொட்டினது முகாம்கள் பொறுப்பாக இருந்த பல பொறுப்பாளர்களும் முன்னணி உறுப்பினர்களுமாக 33 பே;h கொல்லப்பட்டனர். இதில் உமாமகேஸ்வரனுக்கு வேண்டியவர்கள் வேண்டப்படாதவர்கள் என்று இரண்டு தரப்பினரும் அடங்கியிருந்ததால் உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை இந்த இழப்புக்களால் ஏற்பட்ட தாக்கம் என்பது ஒன்றையொன்று சம்மந்தப்படுத்துவதாகவே இருந்தது. வசந்தன் உட்பட காலைச் சுற்றி கடிக்க வந்த பாம்புகள் போல் சுலபத்தில் தூக்கி எறியவோ, கை வைக்கவோ முடியாமல் உடனிருந்து தொல்லை தந்து கொண்டிருந்த பலர் இதில் கொல்லப்பட்டுவிட்டது, ஓரளவுக்கு அவருக்கு நிம்மதியைத் தந்தது. சங்கிலி உட்பட அவருக்கு விசுவாசமான சிலரது இழப்பு வருத்தத்தைத் தந்தாலும் புளொட்டைக் கலைத்து விடுவதென்ற தனது முன்னைய முடிவை இந்தச் சம்பவத்தை காரணமாக வைத்து செயற்படுத்த அவர் முடிவு செய்தார்.

ஆனால் முள்ளிக்குளத்தில் அகப்படாது குஞ்சுக்குளம், வவுனியா, கொழும்பு மட்டக்களப்புப் பகுதியில் இருந்த புளொட் உறுப்பினர்கள் மத்தியில் இத்தாக்குதல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உமாமகேஸ்வரனை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அவர் இந்தியா கொடுத்த ஆயுதங்களை மாலைதீவில் கொண்டுபோய் முடக்கியபடியால்தான் முள்ளிக்குள முகாம் வீழ்ந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மறுபடியும் இந்தியாவிடம் சென்று பேசி ஆயுதம் பெற்று புலிகளைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் கொரிக்கை விடுத்தனர்.

ஆனால் உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை புலிகளைத் திருப்பித் தாக்கி பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை. புலிகள் புளொட் முகாமை அழித்ததைத் தவறு என்று நியாயப்படுத்தும் அளவுக்கு புளொட் நேர்மையான முறையில் தமிழ் மக்களுடைய போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்ற உணர்வே அவரிடம் அக்காலகட்டத்தில் இருந்தது. நான் எற்கனவே எழுதியது போல இக்கால கட்டத்திலே அவருக்கு சுடலை ஞானம் ஏற்பட்டிருந்தத. புளொட் என்பது சீரழிந்து போன திருத்த முடியாத அமைப்பு என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதல் பற்றிய செய்தியை அறிந்த றோ காயை சரியாக நகர்த்தி உமாமகேஸ்வரனை வீழ்த்தத் திட்டமிட்டது. அதன்படி உமாமகேஸ்வரன் வந்து தங்களுடன் பேசினால் தாங்கள் புளொட்டிற்கு ஆயுதம் வழங்குவோம் என்ற ஒரு எழுதப்படாத உறுதி மொழியை புளொட்டிற்குள் பரப்பிவிட்டனர். தங்களால் ஏமாற்றப்பட்ட உமாமகேஸ்வரன் ஒரு போதம் தங்களிடம் பேசுவதற்கு வரமாட்டார் என்பது அவர்களுக்கத் தெரியும். ஆனால் அப்போதிருந்த நெருக்கடியான உhலகட்டத்தில் தங்களது கோரிக்கையை அவர் தட்டிக்கழித்தால் நிச்சயமாக புளொட்டிற்குள் உள்ளவர்களே அவரை கொல்லத் துணியுமளவிற்கு நிலைமை வரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.


இதற்காக அவர்கள் பாலபுத்தரை அழைத்துப் பேசியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாலபுத்தரின் நண்பரான லண்டன் கனவான் ஒருவர் உடனிருந்ததாகவும் அறியப்படுகின்றது.

பாலபுத்தர் சென்னையில் பேசிக் கொண்டிருக்கும் போது முள்ளிக்குளம் தாக்குதல் அதிருப்தி கொண்ட உறுப்பினர்களது குழு ஒன்று கொழும்பில் உமாமகேஸ்வரனைச் சந்தித்து அவரை றோவுடன் சென்று பேசி ஆயுதம் வாங்க வேண்டும், புலிகளை எதிர்த்துத் தாக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஏனென்றால் சாதாரணமாக உமாமகேஸ்வரனது முடிவுகளை எதிர்த்து அவருக்கு நேருக்கு நேர் நின்று யாரும் வாதாடுவதில்லை. ஆனால் அன்றைய சந்திப்பில் உமாமகேஸ்வரனை நிர்ப்பந்திக்கும் எதிர்க்கும் குழவின் குரலும் எதிர்பும் பலமாக இருந்தது.

ஆனால் உமாமகேஸ்வரன் அந்த வற்புறுத்தல்களுக்கு பயந்து போகவில்லை. “நீங்கள் கேட்கின்றபடி றோவிடம் வந்து பேசவும் முடியாது, ஆயுதம் வாங்கவும் முடியாது என்றும் புலிகளுக்கு எதிராக பழிக்குப் பழி யுத்தம் ஒன்றை நான் நடத்த தயாரில்லை” என்றும் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.

“அப்படியென்றால் நீங்கள் எங்களை அநியாயமாகச் சாகச் சொல்கிறீர்களா?” என்று சந்திக்க வந்தவர்களை ஆத்திரத்தோடு கேட்டார்கள்.

நான் உங்கள் யாரையும் சாகச் சொல்லிவில்லை நான் சொல்கிறதைக் கேட்டு என்னோடு நிற்கிறவர்கள் நிற்கலாம். அவைக்கு என்னால் பாதுகாப்பு தரமுடியும் மற்றவை இயக்கத்தைவிட்டுப் போங்கோ, புளொட் கலைச்சாச்சு, புளொட் என்று சொல்லிக் கொண்டு ஒருத்தரும் திரிய வேண்டாம். என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு உமாமகேஸ்வரன் அங்கிருந்து போய்விட்டார்.

சந்திக்க வந்த அதிருப்தியாளர்களுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் போய்விட்டது. உமாமகேஸ்வரனை வாய்க்கு வந்தபடி திட்டடினார்கள். மட்டக்களப்புப்பிரிவு தாங்கள் இயங்கப் போதில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. மற்றவர்கள் நாங்கள் பாலபுத்தரை பிடிப்பம், அவரை புளொட்டுக்கு தலைவராக்குவம், உவர் (உமா) என்ன செய்கிறார் பார்ப்பம் என்று கறுவிக் கொண்டனர்.

காந்திதேசத்தின் மறுபக்கம் 25

25
உமாமகேஸ்வரன் ஒரு காலத்தில் சிறிலங்கா பொலிசாரால்; மிகவும் தேடப்படுபவராக இருந்தவர். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின் அத்துலத்முதலியின் ஏற்பாட்டின் பேரில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் சந்தித்துப் பேசிய பின் அவர் மீதான பிடியாணை நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இந்தக் காலகட்டத்தில் அதாவது மாநாட்டுக்கு முன் புளொட் புத்தளம் பகுதியிலிருந்த ஒரு சிறு இராணுவ முகாமைத் தாக்கியிருந்தது. இந்தத்தாக்குதலில் பெறப்பட்ட ஆயுதங்களில் சில கற்பிட்டியிலிருந்து புளொட்டினது மாசுக்கருவாட்டுத் தொழிற்சாலையில் மறைத்துவைக்கப்பட்டது.

இந்த மாசுக் கருவாட்டுத் தொழிற்சாலைக்கு பொறுப்பாக இருந்தவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார். வித்தை காட்டுவதில் வல்லவரான இவர் ஒரு சமயம் வழக்கம் போல வித்தை காட்ட முனைந்த போது அது முஸ்லீம்களுடனான மோதலாக முடிந்துவிட்டது.

அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அந்த மாசுக்கருவாட்டுத் தொழிற்சாலை இருந்த பண்ணையை சோதனையிட்ட கற்பிட்டி பொலிஸ் அங்கு புதைத்து வைக்கபடப்டடிருந்த ஆயுதங்களை எடுத்ததோடு வாத்தியாரையும் கைது செய்து விட்டது.

அதுவரை புத்தளம், வில்பத்து பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களை புலிகள் தான் செய்திருந்ததாக நம்பிக்கொண்டிருந்த சிறீலங்கா பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் அவை புளொட்டின் வேலைகள் தான் என்று தெரிய வந்துவிட்டது.

எனவே கொழும்பு மற்றும் தென்பகுதிப் பொலிசாரும் இராணுவத்தினரும் உமாமகேஸ்வரனைப் பற்றி அக்கறைப் படாவிட்டாலும் புத்தளம் மாவட்ட பொலிசுக்கும் இராணுவத்திற்கும் அவர் மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார்.

உமாமகேஸ்வரனுக்கு பொலிசின் கையில் சிக்கிய போது உண்மையிலேயே இதையிட்டுப் பயம் ஏற்பட்டது. புத்தளம் பகுதி இராணுவ முகாம் தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்த ஒருவரும் அவருடன் பிடிப்பட்டிருந்தார். கை அடையாளங்களை வைத்து அவர்கள் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டால் தான் தப்ப முடியாது என்று அவர் நினைத்தார்.

ஆனால் முஹமட் இப்ராஹிம் என்ற பெயரிலிருந்து உமாமகேஸ்வரனது அடையாள அட்டையைப் பார்த்த பொலிசார் உண்மையிலேயே அவரை ஒரு பெரிய கடத்தல் புள்ளி என்றே நினைத்துவிட்டார்கள். வழக்கமான பொலிஸ் விசாரணைப் பாணியில் அடி உதை கொடுத்து அவர் ஏன் புத்தளம் வந்தார் - முள்ளிக்குளத்தில் யாருடன் அவருக்குத் தொடர்பு புத்தளத்தில் யார் யாரைத் தெரியும் முள்ளிக்குளத்திலிருந்து என்ன சாமான்கள் கடத்துகின்றீர்கள் என்றெல்லாம் துருவித் துருவி விசாரிக்க ஆராம்பித்தார்கள்.


உமாமகேஸ்வரன் வில்பத்துக் காட்டுக் கரையிலிந்த பூக்குளத்தில் புத்தளத்திற்கு படகு ஏறிய போது உடன் வருபவர்களை ஆயுதம் ஏதுவும் எடுத்து வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார். அதனால் அவரை விசாரித்த பொலிசாருக்கு அவர்கள் இயக்க உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் வரவில்லை. இயக்கத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களுடன் தான் வருவார்கள் என்பது அவர்களது எண்ணம். எனவே அவர்கள் இவர்களை முழுக்க முழுக்க கடத்தல்காரர்கள் என்று நம்பி அவர்களை விடுவிக்கப் பேரம் பேசி பெருந்தொகைப் பணத்தை அறவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.

அதற்குள் உமாமகேஸ்வரனுடன் பிடிபட்டிருந்த புத்தளம் இராணுவ முகாம் தாக்குதலுக்குப் பொறுப்பாயிருந்தவரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பொலிசார் எடுத்துவிட்டனர்.

அவர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் னுPடுகு இன் வேட்பாளராகப் போட்டியிட்டவர். அவரை வேட்பாளர் என அத்தாட்சிப்படுத்தி தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல அவர் தன்னுடைய ஆயுதத்தையும் மெய்ப்பாதுகாப்பிற்கு ஆட்களையும் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய கடிதமே அது.

சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உமாமகேஸ்வரன் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வருவதாகவும் தங்களுக்கு எந்தக் கடத்தல் கோஸ்டியையும் தெரியாதென்றும் தங்களை அனாவசியமாக தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயலென்றும் வாதிட்டார்.

பொலிசுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. ஆனாலும் தங்களது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மளனமில்லாமல் Pடுகு என்றால் புளொட் தானே. புளொட் காரரைத் தாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்றார்கள் நிலைமை சிக்கலாய் போவதை உணர்ந்த உமாமகேஸ்வரன் தன்னை ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக் கொள்ளும் தோரணையில் “என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் . நான் கொழும்பிலே பெரிய வர்த்தகர். அத்துலத்முதலியும், பிரேமதாசாவும் என்னுடைய நண்பர்கள். நான் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லித் தனது மணிகூட்டில் பதித்து வைத்திருந்த அத்துலத் முதலியினதும், பிரேமதாசாவினதும் அலுவலக மற்றும் தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்களைத் குறித்துக் கொடுத்தார்.

அவர் பேசியவிதம் தொலைபேசி இலக்கங்களை மனப்பாடம் பண்ணியது போல் வேகமாக குறித்துக்கொடுத்த விதம் இதையெல்லாம் பார்த்து பொலிஸ்காரர்கள் பயந்து போய் விட்டார்கள். ஏதோ பெரிய இடத்து தொடர்புடைய மனிதனைப் பிடித்துவைத்துவிட்டோம் இதனால் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொல்லைகள் ஏதாவது வந்துவிடப் போகின்றது என்று அஞ்சி அவரையும் அவருடன் பிடிபட்டவர்களையும் விடுதலை செய்தனர். தாங்கள் தவறுதலாக அவரை சிறை வைத்ததற்காக தங்களை மன்னிக்க வேண்டும் என்நு உமாமகேஸ்வரனிடம் மன்னிப்புக் கேட்டனர்.

பெரிய கண்டத்திலிருந்து பிழைத்தது போல் ஒரு நிமிடங்கூட அங்கு தாமதிக்காமல் அங்கிருந்த அவருக்குத் தெரிந்த நணபர் மூலமாக கார் ஒன்றை ஒழுங்கு செய்து கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்ததும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புக்களுக்குமான உயர் குழுவின் முதலாவது கூட்டம் கொழும்பு கல்கிசை காலி வீதி வீட்டில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாலபுத்தர், காண்டீபன் (மன்னார்), உமாமகேஸ்வரன் உட்பட கொழும்பு நிர்வாகப் பிரிவிலிருந்து ஆனந்தியும் மலையக அமைப்புக்களின் சார்பில் கதிரவனும் உமாமகேஸ்வரனால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே வசந்தனது குளிசையை விழுங்கியிருந்த பாலபுத்தர் கதிரவனது நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை உமாமகேஸ்வரன் கணக்கில் எடுக்கவில்லை.

மாநாடு முடிந்தது. கொழும்பு திரும்பிய பாலபுத்தர் இரண்டு, மூன்று நாட்களாக மாநாட்டை புறக்கணித்த முக்கியமான மும்மூர்த்திகளுடன் இரகசிய ஆலோசனை ஒன்றை நடத்தியிருந்ததாக உமாமகேஸ்வரனுக்கு ஒரு செய்தி கிடைத்திருந்தது. இதைவிட மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்கு முன்பே றோ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு லண்டன் கனவான் , ஒரு டெல்லி கனவான், ஆகியோருடன் சேர்ந்து உமாமகேஸ்வரனுக்கு எதிராகச் சென்னையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் ENDLF ராஜன் அதற்குப் பின்னணியில் இருந்ததாகவும் தமிழகத்திலிருந்து ஒரு தகவல் அவருக்கு கிடைத்திருந்தது.


இந்த இரண்டு விடயங்களையிட்டும் உமாமகேஸ்வரன் அதிகளவுக்கு அத்திரமும் கவலையும் கொண்டிருந்தார். இது பற்றி மலையகப் பொறுப்பாளர் கதிரவனுக்குச் சொல்லி பாலபுத்தரைக் கொலை செய்து விட்டால் என்ன என்ற ஆலோசனையும் கேட்டார்.

காந்திதேசத்தின் மறுபக்கம் 24

24

புளொட்டினது தள (தமிழீழம்) அமைப்புக்கும் பின்தள அமைப்புக்கும் இடையில் சுழிபுரம் படுகொலைகள், ஒரத்த நாடு படுகொலைகள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985இல் யாழ்ப்பாணத்தில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது.

இது புளொட்டினது முதலாவது தள மாநாடு என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் உமாமகேஸ்வரனது தவறுகள் புளொட்டினது தவறுகள் எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டன. இந்த மாநாட்டிற்கு சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரனது சார்பில் அவரது பிரதிநிதிகளாக சென்று கலந்து கொண்ட வாசுதேவா, கண்ணன் (கேதீஸ்வரன்) ஆகியோர் கூட அங்கே கிளம்பியிருந்த எதிர்ப்புக்களுக்கும், வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் முகங்கொடுக்க முடியாமல் தங்களைக் காத்துக் கொள்ளும் நோக்கில் உண்மைகளை ஒத்துக்கொண்டு உமாமகேஸ்வரனுக்கு எதிராகவும், புளொட்டினது பின் தள செயற்பாடுகளுக்கெதிராகவும் விமர்சனத்தை முன்வைத்தனர். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் அக்கால கட்டத்தில் புளொட்டினது பின்தள நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர்கள். (வாசுதேவா, அரசியல் பிரச்சார செயலர், கண்ணன் படைத்துறை செயலர்).

உமாமகேஸ்வரன் இந்த மாநாட்டின் தீர்மானங்களையோ அல்லது இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட விமர்சனங்களையோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் இயக்கத்தை உடைக்க நினைக்கும் குளப்பவாதிகளின் பொறுப்பற்ற செயல் என்று அவர் அப்போது அதற்கு விளக்கம் சொல்லியிருந்தார். ஆனால் அவரது இந்த உதாசீனப் போக்கு தான் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ள அவருக்கிருந்த வழியை அடைத்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அதே தவறுகளைச் செய்யவும் அமைப்பைத் தொடர்ந்து வழக்கமான தவறுகள் நிறைந்த ஒரு வழிப்பாதையிலே வழிநடத்திச் செல்லவும் வழிவகுத்தது.

குறிப்பாக எண்னாயிரத்துக்கு அதிகமான இளைஞர்களை (மகளிர் பிரிவும் அடக்கம்) பின்தளப் பயிற்சி என்ற பெயரில் தகுந்த வேலைத் திட்டம் எதுவும் இன்றி தமிழக முகாம்களில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருந்த செயல் அவரது தலைமைத்துவத்தின் வழிநடத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

புலிகளினது கெரில்லா யுத்த தந்திரப் பாதையை அடித்து விட்டு ஓடும் போர்முறை என விமர்சித்துவிட்டு பரந்துபட்ட மக்கள் யுத்தப் பாதையே தன் வழி என்று சொன்ன உமாமகேஸ்வரன் மக்கள் யுத்தப் பாதைக்கு வேலை செய்த தள அமைப்புக்களின் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் நிராகரித்ததன் மூலம் கெரில்லா போர் முறையும் அல்லாமல் மக்கள் யுத்தப் பாதையும் அல்லாமல் எதிர்காலம் தொடர்பான ஒரு சூன்ய நிலைக்கு அமைப்பை தள்ளியிருந்தார்.

இந்த சூன்ய நிலை என்பது நாட்டின் விடுதலைக்காக போராடுவதற்கென்று புறப்பட்டு வந்த இளைஞர்களை தங்களுடைய விடுதலைக்கு போராடும் நிலைக்குத் தள்ளியது.

1986ன் நடுப்பகுதியில் உமாமகேஸ்வரனின் தலைமைத்துவத்திற்கெதிரான அதிருப்தி புளொட்டின் தமிழக முகாம்களில் பகிரங்கமாக வெடித்து பல முகாம்கள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றன. பிரச்சினைக்குரிய ஓரத்தநாடு பி முகாமின் சித்திரவதைக் கூடங்கள் தகர்த்தெறியப்பட்டன.


இத்தகைய குழப்ப நிலையை முன்கூட்டியே எதிர்பார்த்து காத்திருந்த றோ புளொட்டை உடைத்து பரந்தன் ராஜனை தலைமைத்துவத்துக்கு கொண்டு வர முனைந்தது. இது தன்னுடைய தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தவிர்க்கமுடியாதபடி பின்தளத்தில் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டிய நிலைக்கு உமாமகேஸ்வரனைத் தள்ளியது. இந்த மாநாடு தஞ்சை மாவட்டம் திருவாரூரில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் புளொட் உமாமகேஸ்வரனின் ஆதரவாளர்கள் அணி, எதிர்ப்பாளர்கள் அணி என்று இரண்டாக பிரிந்தது. எதிர்பார்ப்பாளர்கள் அணியில் ஒன்று சேர்ந்து ENDLF என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த குழப்ப நிலையில் உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கான முயற்சியும் நடந்தது.


இத்தகையதொரு குழப்பமான சூழ்நிலையே வில்பத்து மாநாட்டில் தோற்றுவிக்க வசந்தன் குழு முயன்றது. முன்கூட்டியே திட்டமிட்டு உமாமகேஸ்வரன் மீதான அதிருப்தியை கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் பரப்பி மாநாட்டில் பாலபுத்தரின் கையை ஓங்குமாறு செய்யும் போது அதற்கு மாறாக உமாமகேஸ்வரன் ஏதாவது செய்ய முற்படுவார் என்றும் அப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக தன்னிச்சையாக அவர் நடவடிக்கை எடுக்க முற்படும் போது உருவாகும் அதிருப்தி நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அவரைக் கொன்றுவிட அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால் உமாமகேஸ்வரனுக்கு இவர்களது சதித்திட்டம் ஓரளவு முன்கூட்டியே தெரிந்திருந்ததால் நன்கு திட்டமிட்டு பாதுகாப்பு அரசியல் வியூகங்களை வகுத்து அவர்களது முயற்சிகளை முறியடித்துவிட்டார். இது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே அவர்கள் உமாமகேஸ்வரனது மாநாட்டு பாதுகாப்பு வியூகத்தை உடைப்பதற்காக முள்ளிக்குளத்திற்கு புலிகள் வந்த கதையை கிளப்பிவிட்டார்கள். புலிகளை எதிர்கொள்ள சங்கிலி தலைமையில் தனக்கு கவசமாக இருக்கும் பாதுகாப்புக் குழுவில் முக்கியமானவர்களையே முள்ளிக்குளத்திற்கு அவர் அனுப்புவார் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இது வசந்தன் குழுவின் புரளியாக இருக்கும் என்றும் சந்தேகம் வந்தது. உடனே மாணிக்கதாசன் தலைமையில் ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து வசந்தனையும் சேர்த்து முள்ளிக்குளத்திற்கு அனுப்பிவிட்டார்.

முhணிக்கதாசனது பாலியல் விவகாரங்கள் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பிக் கொள்ள மாணிக்கதாசன் கிளப்பிவிட்ட வதந்தி இது என்றே கீழ் மட்ட உறுப்பினர்கள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தன் எதிர்பாhத்தபடி எதுவும் நடக்கவில்லை. முள்ளிக்குளம் சென்ற (புலி எதிர்ப்புக் குழு) அவர்கள் அங்கு புலிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்தனர்.

மாநாட்டு பிரதிநிதிகளில் இந்தச் செய்திபற்றியும், இதைக் கொண்டுவந்தவர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். அப்போது உமாமகேஸ்வரன் குறுக்கிட்டு அதுபற்றி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாட்டை நீண்ட நேரம் நடத்த முடியாதென்றும் விரைவில் தீர்மானங்களை நிறைவேற்றி மாநாட்டை முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாணிக்கதாசன் விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு அவரை இயக்கத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கி ஒரு சாதாரண உறுப்பினர் போல அவர் முகாமில் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடனே மாணிக்கதாசன் அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் என்ற நிலையில் இருந்த தான் சாதாரண உறுப்பினராக முகாமில் இருப்பது தனது மனநிலையைப் பாதிக்கும் என்றும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் தான் முகாமில் தொடர்ந்து இருந்தால் தான் செய்யும் எல்லாக் காரியங்களும் குற்றக்கண் கொண்டே பார்க்கப்படும் என்றும் அதனால் தான் ஒரு சாதாரண உறுப்பினராக கொழும்பில் சென்று தங்கியிருக்க அனுமதி தர வேண்டும் என்று கேட்டர். இதற்கு மாநாட்டு பொதுக்குழு ஆட்சேபம் தெரிவித்தது. அவர் முகாமிலேயே இருக்க வேண்டும் என்று பெரும்பாலனவர்கள் கூச்சல் போட்டனர்.

இதனால் எரிச்சலடைந்த உமாமகேஸ்வரன் இது கூச்சல் போடும் நேரமில்லை புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதும் அந்த நிர்வாகம் கூடி இந்த விவகாரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் சொன்னார். அதன்பின் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக அவர் முன்வைத்த திட்டப்படியே உயர் குழுவுக்கு (பொலிட் பீரோ) மூவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அதில் உமாமகேஸ்வரனும், பாலபுத்தரும், காண்டீபனும்(மன்னார்) தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தத் தெரிவு உமாமகேஸ்வரன் முன்வைத்த அமைப்பு வடிவத்திற்காக நடந்தாலும் பாலபுத்தர் அந்த அமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டது அவருக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. சங்கிலியை அழைத்து வசந்தனை கண்காணிக்கும்படியும் கொழும்புக்குப் போனதும் அவனை தண்டிப்பதற்கான தீர்மானத்தை பாலபுத்தர் மூலமாகவே நிறைவேற்றி அனுப்புவதாக சொல்லிவிட்டு ராபனையும் வேறு மூவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

வில்பத்து காட்டு கடற்கரையில் இருந்து படகு மூலம் புத்தளம் கரையை அவர்கள் அடைந்த போது அங்கே ரோந்து வந்த கரையோர ரோந்து பொலிஸார் கடத்தல் கோஸ்டி என நினைத்து அவர்களை கைது செய்து சென்று புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சிறை வைத்தனர்.

உமாமகேஸ்வரனை பெரும் கடத்தல் புள்ளியாகவும் ராபினையும் மற்றவர்களையும் அவர்களது அடியாட்களாகவும் நினைத்து அவர்கள் விசாரணை நடத்தினர்

காந்திதேசத்தின் மறுபக்கம் 23

23

உமாமகேஸ்வரனுக்கு தமிழ் நாட்டில் ஒரு எஸ்டேட்டும் சுவிஸ் பங்கியில் பெருந்தொகை பணமும் இருப்பதாக 1985லேயே குற்றச்சாட்டு எழுந்தது. அன்று உமாமகேஸ்வரனது விசுவாசிகளாக இருந்த யாழ்ப்பாணக் கனவான்கள் இதில் உண்மை இல்லை என்றும், புளொட்டை உடைக்க நினைக்கும் சூழ்ச்சிக்காராகளின் பொய்ப்பிரச்சாரமே இது என்றும் மறுத்துப் பேசினார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முழுக்க முழுக்க பொய் என்று ஒருபோதும் மறுத்ததில்லை. இயக்கத்தின் எதிர்கால நலன் கருதி இயக்கத்திற்கு வெளிநாடுகளில் (தமிழ் நாடு உட்பட) சில அசையும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல அது தன்னுடையதோ அல்லது தன்னுடைய உறவினர்களதோ பெயரில் இல்லையென்றும் அமைப்புக்கு வேலை செய்யும் மிக நம்பிக்கைக்குரிய சில நபர்களின் பெயரிலேயே இந்தச் சொத்துக்கள் இருப்பதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

அதாவது இந்தச் சொத்துக்களுக்கு ஐந்து பேர் பொறுப்பென்றும் அதில் மூவர் லண்டனிலும் ஒருவர் ஜேர்மனியிலும் ஒருவர் தளத்திலும் (இலங்கையில்) இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களின் பெயரை அவர் சொல்லவில்லை. 1986இல் புளொட் இரண்டாக உடைந்த போது லண்டனில் இயக்கத்தின் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த மூவரில் ஒருவர் நுNனுடுகு பக்கம் சென்றுவிட்டார் என்றும் இயக்கத்தின் சொத்தில் ஒரு பகுதியை அவர் எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் சொன்ன போது அந்த நபர் யாரென்று வெயியே தெரிய வந்தது. மற்றவர்களைப் பற்றி ஊகங்களே இருந்தன.

தற்போது வசந்தன் விவகாரமும் அவர் பாலபுத்தரை முன்னிறுத்தி தன்னுடைய சதி முயற்சியை தொடர்வது தொடர்பாகவும் தனக்கு மிக நம்பிக்கையான இருவருடன் உமா கலந்தாலோசித்த போது பாலபுத்தர் இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்றவரோ நிரந்தர உறுப்பினரோ கிடையாது. வசந்தனது விவகாரத்தை பகிரங்கமாக விசாரணை செய்து மற்றவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தி அவனுக்குத் தண்டனை கொடுத்துவிட்டு பாலபுத்தரையும் அமைப்பிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று அவர்கள் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.


ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வசந்தனது விவகாரத்தை பகிரங்கப்படுத்தினால் அவனுடன் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். விசாரணை என்று வரும் போது வசந்தனுக்கு உடைந்தையாக இருந்தவர்களே அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி தாங்கள் நல்ல பிள்ளைகள் போல் நடித்து தப்பி விடுவார்கள் என்றும் பாலபுத்தரை பொறுத்தவரை அவரை அவ்வளவு சுலபமாக அமைப்பிலிருந்து நீக்க முடியாது. அவரிடம் இயக்கத்;தின் பொறுப்புக்கள் சில இருக்கின்றன. அத்தோடு அவருக்கு இயக்கத்தின் முக்கியமான இரகசியங்கள் சிலவும் தெரியும் என்றும் அவர் அதற்குக் காரணம் சொல்லியிருந்தார்.

பாலபுத்தரிடம் இருந்த பொறுப்புக்களும் அவருக்குத் தெரிந்த இரகசியங்களும் என்னவாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அதையிட்டு உமாமகேஸ்வரன் பயம் கொண்டிருந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். வழக்கமாக தன்னுடைய எதிரிகளை காய் நகர்த்தி ஓரங்கட்டுவதிலும் தயவுதாட்சண்யமின்றி அவர்களை அழித்தொழிக்க முயல்வதிலும் வல்லவர் என்றும் எதிரி முந்திக் கொள்ளுவதற்கு முந்தி தான் முந்திக் கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் பெயர் பெற்ற அவர் பாலபுத்திரனையிட்டு பயங்கொண்டிருந்தது அப்போது ஆச்சரியமாக மட்டுமல்ல புதிராகவும் இருந்தது.


உமாமகேஸ்வரன் திட்டமிட்டபடி 25.03.89 அன்று வில்பத்து வனவிலங்கு சரணாலய விடுதிக் கட்டிடத்தில் புளொட்டின் இரண்டாவது தளமாநாடு ஆரம்பித்தது. அதற்கு முன் சங்கிலிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவே மாநாட்டு மண்டபத்திற்கும் அதைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்றும் மற்றவர்கள் எந்த ஆயுதத்தையும் சிறு கத்தி கூட மாநாட்டு மண்டபத்திற்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ எடுத்துவரக் கூடாதென்றும் கடுமையான உத்தரவு போடப்பட்டது. மாநாட்டு பிரதிநிதிகளை குழுக்களாகப் பிரித்த போது கூட ஒவ்வொரு குழுவிலும் சங்கிலிக்கு வேண்டியவர்கள் இருக்குமாறு பிரிக்கப்பட்டது. வசந்தன் உமாமகேஸ்வரன் குழுவில் போடப்பட்டு அவரது நேரடிக் கண்காணிப்பில் இருக்குமாறு செய்யப்பட்டதுடன் யார் யாரெல்லாம் அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்டதோ அவர்களையெல்லாம் ஒன்று சேராதபடி தனித்தனியாகப் பிரித்து வேறு குழுக்களில் போடப்பட்டது.

புளொட், DPLF, மலையகத்தில் அமைக்கப்படவுள்ள இராணுவ அமைப்பு இந்த மூன்றையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை அமைப்பு ஒன்றை தெரிவு செய்வதும் இராணுவ அமைப்புக்கான கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள், அரசியல் அமைப்பான நுPசுடுகுஇற்கான கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் என்பவற்றையும் தனித்தனியாக வரையறை செய்வதுமே மாநாட்டின் பிரதான நோக்கமாக இருந்தது.

ஒவ்வொரு குழுவும் முதலில் இந்த அமைப்பு வடிவம், அமைப்பு கட்டுப்பாட்டு விதிகள் என்பன தொடர்பாக குழுநிலையில் ஆராய்ந்து அவற்றை உருவாக்கி பின்பு எல்லாக் குழுவும் ஒன்று சேர்ந்து விவாதித்து ஒரு பொது முடிவுக்கு வருவதென அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே வசந்தன் குழு இந்த விடயங்கள் பற்றி வேறு விதமாக பிரசாரம் செய்திருந்தபடியால் குழுநிலையிலேயே விவாதம் சூடுபிடித்திருந்தது. அமைப்பு கட்டுப்பாடு என்ற விடயத்தைப் பெரும்பாலானவர்கள் பின்தள விவகாரங்களுடன் அதாவது ஒரத்த நாட்டு புதைகுழி விவகாரங்களுடன் ஒப்பிட்டு இது அதுக்கே வழிவகுக்கும் என்று கருத்துச் சொன்னார்கள். தலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கவிடக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.


பெரும்பாலான குழுக்கள் உமாமகேஸ்வரனை புளொட்டின் தலைவராகவும் பாலபுத்தரை DPLF கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்து இருவருக்கும் அதிகாரங்களை சமமாக பகிர்வதோடு இவர்களுக்குத் துணையாக மேலும் ஐவர் கொண்டு இந்த அமைப்பே சகல அமைப்புக்களையும் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டிருந்தன. இந்தக் கருத்து வசந்தன் குழு ஏற்கனவே பரப்பியிருந்த கருத்தாகும். அதாவது பாலபுத்தரையும் உமாமகேஸ்வரனையும் சமபலத்தோடும், சம அதிகாரத்தோடும் நிறுத்தும் அதே சமயம் பாலபுத்தரின் கருத்தையும் கையையும் ஒங்கச் செய்யும் வகையில் திட்டமிட்டு 5 பேரை தெரிவு செய்வதன் மூலம் உமாமகேஸ்வரனை தனிமைப்படுத்தி பலமிழக்கச் செய்துவிடலாம் என்பது அவர்களது எண்ணம்.

இந்தக் கருத்து ஒரு தீர்மானக நிறைவேற்றப்பட முன்பே இந்தக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய 5 பேரும் யார் என்பதை வசந்தன் குழு முடிவு செய்துவிட்டது. பாலபுத்தரின் கையை பலப்படுத்தி அவருக்கு வேண்டியவைகளை நிர்வாகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கலாம் என்ற பிரச்சாரத்தை இரகசியமாக முன்வைத்து தாங்கள் சொல்பவர்களையே நிர்வாகத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கீழ்மட்ட உறுப்பினர்களைக் கேட்டிருந்தார்கள்.

இந்த விடயம் உமாமகேஸ்வரனுக்கு வேண்டியவர்கள் மூலமும் சங்கிலியின் மூலமும் மாநாடு தொடங்கிய நேரத்திலேயே அவருக்குத் தெரிய வந்தது. உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை அமைப்பில் தன்னுடைய கருத்தை தான் செய்து முடிக்க நினைக்கும் காரியத்தை மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. மாநாட்டில் குழு பிரிந்த போதே பாதுகாப்பிற்காக சங்கிலியின் ஆட்களை ஒவ்வொரு குழுவிலும் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டது போல தன்னுடைய கருத்தை வலியுறுத்தி பேசி எதிர்கருத்தை முறியடிக்கும் வல்லமை பெற்ற ஒவ்வொருவரையும் அவர் ஒவ்வொரு குழுவில் நியமித்திருந்தார்.

உமாமகேஸ்வரன் 5 பேர் கொண்ட உயர்குழு (பொலிட் பீரோ) ஒன்றை உருவாக்குவதென்றும் அதில் மூவர் புளொட்டிலிருந்து, ஒருவர் DPLFலிருந்து, ஒருவர் செயலதிபர் (தான்) என்ற வகையில் ஒருவர் என மூவர் தெரிவு செய்யப்படுவர்hகள் என்றும் மிகுதி இருவர் மலையக அமைப்பிலிருந்து ஒருவர் கொழும்பு நிர்வாக அமைப்பிலிருந்து ஒருவர் என்ற அடிப்படையில் செயலதிபரால் நியமிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்று திட்டம் தீட்டியிருந்தார். இதைவிட புளொட்டிற்கு தனியான செயற்குழு நுPடுகுஇற்கு தனியான செயற்குழு என்றும் அதில் சொல்லியிருந்தார்.

மாநாட்டின் குழுநிலை விவாதம்; வசந்தனது அமைப்புத் திட்டத்திற்கும் உமாமகேஸ்வரனது அமைப்பு திட்டத்திற்குமான விவாதமாகவும் மாணிக்கதாசனது சுவாரஸியமான பாலியல் விவகாரங்களைப் பற்றிய விவாதமாகவும் சூடு பிடித்துக் கொண்டிருந்த போது முள்ளிக்குள முகாம் பகுதிக்கு புலிகள் வந்துவிட்டதாகவும் அந்த முகாமை அவர்கள் கைப்பற்றினால் அங்கிருப்பவர்கள் மூலமாகத் தகவலறிந்து மாநாட்டு மண்டபத்தையும் அவர்கள் தாக்கக் கூடும் என்ற ஒரு செய்தி வந்தது. அதைக் கேட்ட உமாமகேஸ்வரன் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார்.

காந்திதேசத்தின் மறுபக்கம் 22

22
கொழும்பு வந்த சங்கிலிக்கு வசந்தனைக் கொலை செய்ய வேண்டியதன் அவசியத்தை உமாமகேஸவரன் உணர்த்தினர். இந்தக் கொலையை மிகவும் இரகசியமாக செய்ய வேண்டும் என்றும் நுவரெலியாவில் தப்பவிட்டது போல் விடக்கூடாது எனவும் இக்கொலையை புலிகள்தான் செய்தார்கள் என்று நம்ப வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாநாடு வில்பத்து காட்டிலுள்ள (மன்னார் மாவட்டம்) வனவிலங்கு சரணாலய கட்டிடத்தில் நடைபெற இருந்தது. இந்தக் கட்டடத்தில் முன்பு ஒரு சிறிய இராணுவ முகாம் இருந்தது. இது மாலைதீவு சதிப்புரட்சிக்கு முன்னர் புளொட்டினால் தாக்கப்பட்டது. ஏறக்குறைய 10 மைல் சுற்றுவட்டாரத்திற்கு குடிமனைகளே இல்லாத இந்தக் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளும், புளொட்டினருமே நடமாடுவது உண்டு.
இந்திய இராணுவம் கூட அந்தப்பகுதிக்குச் சென்றதில்லை. மாநாட்டுக்கு முன் அப்பகுதி பாதுகாப்பு நிலைபற்றி அறிந்துவர வசந்தனையும், ENDLFவுடன் தொடர்பு வைத்திருந்த மூவரையும் அனுப்புவதென்றும் அதற்கு முன் சங்கிலி தனக்கு நம்பிக்கையானவர்களுடன் அங்கு சென்று காத்திருந்து அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவிட்டு அத்தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்ததாக சொல்வதென்று முடிவு செய்து கொண்டு முள்ளிக்குளத்திற்குப் புறப்பட்டனர்.
ஆனால் அவர்கள் முள்ளிக்குளத்திற்கு போய்ச் சேர்நத போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. தேர்தலுக்கு முன் கிளம்பி தேர்தலுக்குப்பின் அடங்கிப் போயிருந்த மாணிக்கதாசனின் பாலியல் விவகாரம் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் மீண்டும் சூடுபிடித்திருந்தது. மலையகத் தேர்தல் விவகாரம் மலையகத்தில் இரகசிய இராணுவ அமைப்பு கட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு, இந்தியாவிடம் ஒத்துப் போய் அவர்கள் சொல்லியபடி நடந்து அவர்களிடம் ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை போன்ற பல விடயங்கள் அங்கு காராசாரமாக விவாதிக்கப்பட்டது. வசந்தனும் தன்னுடைய ஆட்கள் மூலமாக வெகு தந்திரமாக இந்த விவகாரங்களை அங்கு கிளப்பிவிட்டான்;.
அதைவிட மிக முக்கியமாக உமாமகேஸ்வரனை விட இந்தியாவுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி பாலபுத்தருக்குத்தான் உண்டு என்று சொல்லி போராட்டத்தில் நீண்ட அனுபவமோ, அல்லது போராட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்து ஏற்பட்ட கஸ்ரங்களை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட தகுதியோ இல்லாத லண்டன் கனவானான பாலபுத்தர் அவரது பிறப்பின் தகுதியின் அடிப்படையில் வசந்தன் குழுவினரால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

புளொட்டில் எஞ்சியிருந்த சாதிமான்களுக்கு இவரது முன்னிலைப்படுத்த எந்த நேரமும் உடைத்தவிடக்கூடிய இத்துப்போன பழைய தோணியில் கடலில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு புத்தம்புதிய தோணி ஒன்று கிடைத்ததிற்கு ஒப்பானதாகும். புளொட்டில்லிருந்து பெரும்பாலான யாழ்ப்பாண சாதியக்கனவான்களுக்கும் பயில்வான்களுக்கும் உமாமகேஸ்வரனது தலைமை என்பது வயதாகிவிட்ட வேகமாக ஓடமுடியாத பந்தயக் குதிரையின் நிலையைப் போன்றதாக இருந்தது.
எவ்வாறு நன்றாக ஓடமுடியாத குதிரையை நம்பி எவரும் பணம் கட்டமாட்டார்களோ, எவ்வாறு குதிரையை பந்தயக்காரர்கள் அதனைத் தொடர்ந்து பந்தயக் குதிரையாக வைத்திருக்க மாட்டார்களோ அவ்வாறே இவர்களும் உமாமகேஸ்வரனைத் தொடர்ந்தும் தலைவராக ஏற்றுக் கொள்ளவும் அவர் பின்னால் செல்வதற்கும் தயாராக இருக்கவி;ல்லை.

உமாமகேஸ்வரனை வைத்துக் கொண்டு தங்களது நலன்களைப் பாதுகாப்பது என்பது தொடர்ந்து முடியாத காரியம் என்று அவர்கள் நம்பினார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் வசந்தன் கொலையுணண்டு போனால் அவன் தியாகியாக்கப்பட்டு விடுவதோடு அவன் உருவாக்கிவிட்டுள்ள புரளிகளும் கருத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டுவிடும் என்று சங்கிலிக்குத் தோன்றியது. மாநாடு முடிந்து புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்படும்வரை அவனைக் கொலை செய்யக்கூடாது என சங்கிலி நினைத்தான். இந்த விடயத்தை அவன் உடனடியாக கொழும்பிலுள்ள உமாமகேஸ்வரனுக்குத் தெரிவித்தான்.


வசந்தன் விலாங்கு மீனைப் போலவும் அவனைக் கொல்ல தான் எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் அவன் தப்பி நழுவிச் செல்வது உமாமகேஸ்வரனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அத்துடன் தற்போது பாலபுத்தரை முன்னிறுத்தி அவன் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய சந்தேகம் ஒன்றையும் ஏற்படுத்தியது. வசந்தன் இதுவரைகாலமும் ENDLFஇன் தூண்டுதலிலேயே தன்னைக் கொல்ல முயல்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். தற்போது பாலபுத்தரை அவன் தூக்கிப் பிடிப்பதன் மூலமும் இது றோவின் வேலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.

பாலபுத்தரை றோவின் தொடர்பாளராக நியமித்தது உமாமகேஸ்வரன்தான். ஆனால் அந்தத் தொடர்பின் மூலம் றோவுடன் அவர் கொண்ட அளவுக்கு அதிகமான நெருக்கம் றோவின் மூளையாய் இயங்கும் EPRLR ENDLF TELO அமைப்புக்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்று சொல்லி அவற்றுக்கு வக்காலத்து வாங்கிவந்த விதம் இதெல்லாம் ரோவின் மூளைச்சலவை குழுசையை அவர் விழுங்கிவிட்டார் என்ற சந்தேகத்தை உமாமகேஸ்வரனுக்கு உண்டாக்கியிருந்தது.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அதற்குத் தலைமை தாங்குவதில் உமாமகேஸ்வரன் நிறைய தவறுகளை விட்டிருந்தாலும் றோவுக்காக செய்யப்பட்ட மாலைதீவுத் தாக்குதல் ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை, அத்துலத்முதலியுடன் கூட்டு என்று பல சந்தர்ப்பவாதப் போக்குகளை கடைப்பிடித்திருந்தாலும் புலிகளை எதிர்ப்பது என்ற விடயத்தில் EPRLR ENDLF TELO குழுக்களைப் போல் காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போகவில்லை. அதுபோலவே அந்த மூன்று இயக்கங்களுடனும கூட்டுச் சேரவும் அவர் தயாராக இருக்கவில்லை.


புலிகள் தங்கள் ஆயுத பலத்தைக் கொண்டு தொடர்ந்து போராடியபடியால்தான் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழர்களுடைய பிரதிநிதி அவர்கள் தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவர்களைக் காட்டிக்கொடுக்கும் அல்லது அவர்களை அழிக்க நினைக்கும் முயற்சிக்குத் துணை போவது தமிழ் மக்களுடைய போராட்டத்தையும் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தையும் அழிப்பதற்கு துணை போவதாகும் என்று புலிகளுக்கு எதிராக மற்றைய இயக்கங்களுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட இயக்கத்தின் எல்லா மத்தியகுழு கூட்டங்களிலும் “நீங்கள் ஏன் மற்றைய இயக்கங்களுடன் சேரக்கூடாது” என்ற கேள்வி எழுப்பிய எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் உமாமகேஸ்வரன் தொடர்ந்து இந்தக் கருத்தைக் கூறி வந்திருக்கின்றார்.
அவர் ஜே.ஆருடனும், பிரேமதாசாவுடனும் பேச்சுவர்த்தைக்குச் சென்ற காலத்தில் கூட புலிகள் பலமான நிலையில் இருக்கின்றபடியால்தான் இன்றைக்கு எங்களை சரிசமமாக இருந்து பேசக் கூப்பிடுகின்றார்கள். அவர்கள் பலமிழந்துவிட்டால் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஒரே நாளில் எங்களை நசுக்கி அழித்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.

பாலபுத்தரை பொறுத்தவரை பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைப்பது பாராளுமன்றத்தில் எம.;பி. ஆக இருப்பது, மாகாணசபையில் முதலமைச்சராக இருப்பது அல்லது அமைச்சராக இருப்பது பேச்சுவார்த்தை மேடையின் அமைப்பின் தலைமைப் பிரதிநிதியாய் இருப்பது என்ற அவரது பாரம்பரிய வட்டத்துக்கு அப்பால் அவரால் வரமுடியாது. அவரால் எப்போதும் யாரையாவது சார்ந்திருந்துதான் செயற்படமுடியுமே தவிர அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கோ அல்லது அதற்கு தலைமை தாங்குவதற்கோ முடியாதவர் என்பது உமாமகேஸ்வரனின் கணிப்பு.
1989 பொதுத்தேர்தல் முடிந்ததும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நுPடுகுஇற்கு விழுந்த குறைந்தளவு வாக்குகள் (10800) பாலபுத்தரை சோர்வடையச் செய்திருந்தது. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டும் இந்தியாவில் நிற்கிறோம் என்று மூக்குடைபட்டதை விட போட்டியிடாமல் விட்டிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இதைக் கேள்விபட்டதும் உமாமகேஸ்வரன் “யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு இவ்வளவு வாக்குகள் விழுந்ததே பெரிய விசயம், உவையால அதை நினைத்துப் பார்க்க முடியல்லை. உவையின்ர கவலையெல்லாம் எம்.பி.பதவி கிடைக்கேல்லை” என்பது தான் என்று சாடியிருந்தார். மொத்தத்தில் உமாமகேஸ்வரனைப் பெறுத்தவரையில் பாலபுத்தரால் தனது தலைமைத்துவத்திற்கு போட்டியாக வரமுடியும் என அவர் நம்பவில்லை. ஆனால் அவரையிட்டு வேறொரு விடயத்தில் அவர் பயந்தார்

காந்திதேசத்தின் மறுபக்கம் 21

21

1989 பொதுத் தேர்தல் முடிந்த போது டி.பி.எல்.எப் கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் விழுந்த வாக்குகளை விட நுவரெலியா மாவட்டத்தில் விழுந்த வாக்குகள் அதிகம். தனிப்பட்ட முறையில் அங்கு சந்திரசேகரனுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்தாலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் அவருக்கு விழுந்த வாக்குகள் மாற்றம் வேண்டும் என்பதற்கு விழுந்த வாக்குகளாகக் கருதப்பட்டன.

உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை அவர் இந்தத் தேர்தலை தன்னை பாதுகாத்துக் கொண்டு தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த இந்தியாவைப் பழிவாங்க ஒரு தடுப்புக் கவசமாக பயன்படுத்தியிருந்தார். அதாவது தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் பிரேமதாசாவுடனான உறவைப் பலப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் இரகசியமாக இந்தியப்படை இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து கிளர்ச்சி செய்யும் ஜே.வி.பி.க்கு பயிற்சி கொடுத்து அவர்களது போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் புலிகளும் தெற்கில் ஜே.வி.பி.யுமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்குதல் கொடுத்து இந்தியப்படையை இலங்கையைவிட்டு அனுப்ப முயல வேண்டும் என்று அவர் நினைத்தார்.

மலையகத்தில் சந்திரசேகரனுக்கு இருந்த அதரவு அவருககு புதிய தென்பைத் தந்தது.புளொட் அமைப்பை முற்றாக கலைத்துவிட்டு மலையகத்தில் புலிகள் அமைப்பைப் போல் உறுதியும் கட்டுப்பாடும் மிகுந்த இராணுவ அமைப்பு ஒன்றை உருவாக்குவதுஎன்ற தனது முன்னைய முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க அவர் முனைந்தார்.

இதற்கென முள்ளிக்குளத்தில் மாநாடு ஒன்று கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் புளொட்டினது தவறுகள், செயற்பாடுகள் அனைத்தும் விமர்சிக்கப்பட்டு புதிய அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்குவது தொடர்பாகவும் அந்த அமைப்பிற்கான உறுதியான கட்டுப்பாடுகளை வரையறை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. புதிய அமைப்புக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்ட பின் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கச் சம்மதிப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அமைப்பை விட்டு வெளியே அனுப்பிவிடுவது என்பது உமாமகேஸ்வரனது எண்ணம்.

மாநாட்டின் அறிவிப்பு வெளி வந்து அவரது அந்த எண்ணமும் பேச்சுவாக்கில் வெளியே தெரிய வர தங்களை எப்போதும் உமாமகேஸ்வரனினதும் புளொட்டினதும் பிரதிநிதிகளாகவும், பேச்சாளர்களாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு உலா வந்த சாதிமான்களுக்கு இது அச்சத்தைத் தந்தது.

ஏற்கனவே மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்ததன் மூலம் வரதராசப்பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்த முதலமைச்சர், அமைச்சர் பதவிகள் தங்களுக்கு கிடைக்காமல் செய்ததையிட்டும் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலிலாவது இந்தியாவுடன் சேர்ந்திருந்து போட்டியிட்டு எம்பி பதவியாவது கிடைக்க வழி செய்யாமல் போனதையிட்டும் அவர்கள் உமாமகேஸ்வரன் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்.

அவர் மாநாடு அது இது என்று வைத்து அமைப்புக் கட்டுப்பாடு ஒழுங்கு விதி என்று ஏதாவதைக் கொண்டு வந்து தாக்குதல் போராட்டம் என்று தொடங்கிவிட்டால் அது தங்களுடைய சாதிய பிரதேச நலன்களையும் தங்களுடைய இந்திய இலங்கை அரசியல் தொடர்புகளையும் போராட்டத்தை வைத்து பதவிகளையும் (எம்.பி. அமைச்சர் பதவி) சலுகைகளையும் பெறுவது என்ற தங்களது குறிக்கோளையும் பாதித்துவிடுவது மட்டுமில்லாமல் தங்களையும் சிக்கலில் மாட்டிவைத்து விடுமென்று அவர்கள் பயந்தார்கள். எனவே அவர்களில் ஒருசாரார் மாநாட்டில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக் கொண்வதென்றும் இன்னொரு சாரார் மாநாட்டில் பங்கெடுத்து தங்களுடைய பேச்சு சாதுரியத்தின் மூலம் அடிமட்ட உறுப்பினர்களை தம்வசப்படுத்தி உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுத்துவிடவும் முடிவு செய்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்ளாது ஒதுங்குவதென்று முடிவு செய்தவர்கள் உமாமகேஸ்வரன் அமைப்புக் கட்டுப்பாடு என்ற பெயரில் பேச்சுச் சுதந்திரத்தை பறிக்கப் போகிறார். தவறுகளை விமர்சிக்கும் உரிமையைப் பறிக்கப் போகிறார். தவறுகளை தட்டி கேட்டபவர்களை தட்டப் போகின்றார் என்றெல்லாம் அதற்கு இரகசியமாக வியாக்கியானமும் கொடுத்தார்கள்.

இந்தக் குழுவில் முக்கியமானவர் வாரம் தவறாது கொழும்பிலுள்ள இந்தியத் து+தரகத்திற்குச் சென்று தமிழீழ இராணுவஅரசியல் நடப்புக்களை இந்திய அதிகாரிகளுக்கு (சுயுறு) ஆலோசனை நடத்தி வந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் இன்னொருவர் உமாமகேஸ்வரனது பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டிருந்த இளையான் குடியார். இவரது கதை கொஞ்சம் வேடிக்கையானது.


இயக்கத்தின் கொழும்பு அலுவலக வீட்டுக்கு சொந்தக்காரப் பெண்ணுக்கு மலையகத்தின் கீழ்பகுதியில் ஒரு தோட்டம் (எஸ்டேட்) இருந்தது. அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான இளையான், குடியார் அமைப்புக்காக அல்லாமல் தனிப்பட்ட தேவைக்காக எஜ்டேட்டை பராமரிக்கும் பொறுப்பை எடுத்துவிட்டார். இது உமாமகேஸ்வரனுக்குத் தெரிய வந்த போது இயக்கத்தினால் கிடைத்த அறிமுகத்தை பயன்படுத்தி சொந்த நலனுக்காக அதைச் செய்தது தவறு என்று அவர் கண்டித்துவிட்டார். இதை இளையான் குடியார் எதிர்பார்க்கவில்லை. கொழும்பு அலுவலக வீட்டை வாடகைக்கு எடுத்ததே நான்தான், எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த அந்தப் பெண்ணின் அறிமுகத்தைத்தான் நான் இயக்கத் தொடர்பாக மாற்றினேன் என்பது அவரது வாதம்.

மாநாட்டில் கலந்து கொண்டு உமாமகேஸ்வரனது நோக்கம் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்ற குழுவுக்கு சூத்திரதாரி வசந்தன், உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்து வரும் நிலையில் அவர் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து நடவடிக்கைகளை இறுக்கிவிட்டால் தன்னுடைய நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று அவன் பயந்தான். எனவே தன்னுடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் இயக்கம் தொடர்ந்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சீரழிவு நிலையிலேயே இருக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அதற்கு உமாமகேஸ்வரனுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் எவரையும் புதிதாக தெரிவு செய்யப்படப் போகிற நிர்வாக அமைப்புக்குள் வந்து விடாமல் பார்த்துக்கொண்டு தங்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கக்கூடியவர்களையே அதற்கு தெரிய வேண்டும் என்பது அவன் திட்டம்.

குறிப்பாக மலையகப் பொறுப்பாளரை ஓரங்கட்ட வேண்டும் என்பது அவனது பிரதான பகுதியாக இருந்தது. அவர் மலையகத்தில் உருவாக்க முனைகின்ற அமைப்பு தங்களது நலன்களுக்கு அச்சுறுத்தலாக வரும் என்பது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் உண்மையில் இயக்கத்திற்கு சம்மந்தமே இல்லாமல் இயக்கத்தின் பெயரால் தமிழகத்தில் வசந்தன் தனிப்பட்ட முறையில் நடத்திய கொள்ளைகள் (சங்கிலி அறுப்பு) தாலிக்கொடி (அறுப்பு) வாகனக் கடத்தல்கள் பற்றி உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வந்தபின் தமிழகத்தில் தங்கியிருந்தகதிரவன் அவருக்குத் தெரியப்படுத்திவிட்டதே பிரதான காரணமாகும்.

எனவே வசந்தன் தனிப்பட்ட முறையில் கதிரவன் உட்பட உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமாபன 4 பேருக்கு எதிராக இரகசிய பிரச்சாரத்தை கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் முடுக்கிவிட்டான். அதாவது இந்த நால்வரும் இந்திய எதிர்ப்பென்ற பெயரில் இந்தியாவுடன் சேர்ந்து அவர்கள் சொற்படி நடந்து அவர்களிடம் ஆயுதம் வாங்க விடாமல் தடுக்கிறார்கள் என்றும் நாங்கள் (முகாம் உறுப்பினர்கள்) புலிகளைப் போல் வசதிகள் எதையும் அனுபவிக்காமல் (அவர்களது கண்ணோடடடத்தில் புலிகள் நவீன ஆயுதங்கள் கொண்டு தரிவது மக்கள் மத்தியில் வீரர்களாக மதிக்கப்படுவது வசதியானது) காடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதற்கு புலிகளை எதிர்க்கக் கூடாது என்றெல்லாம் கொள்கை கோட்பாடு பேசும் இவர்கள் தான் காரணம் என்றும் நாங்கள் போராட வேண்டிய இடம் இங்கே இருக்க (வடக்கு கிழக்கு) மலையகத்தில் எதற்காக போராட வேண்டும். சந்திரசேகரன் தேர்தலில் நிற்க எங்களுடைய பணத்தை நாங்கள் ஏன் செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் பிரசாசரம் செய்யப்பட்டது.

முள்ளிக்குளத்தில் வசந்தனது நடவடிக்கை இவ்வாறு இருக்க கொழும்பில் உமாமகேஸ்வரன் மகாநாடு தொட்குவதற்கு முன்பே அதாவது தான் மாநாட்டிற்கு முள்ளிக்குளத்திற்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வசந்தனைக் கொன்றுவிடத் தீர்மானித்தார். அவனது கொலையை புலிகள் செய்தது போல் மற்றவர்கள் நம்பும்படி செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்காக மலையகத்திலிருந்த சங்கிலியை உடனடியாக கொழும்பு வரும்படி அறிவித்திருந்தார்

காந்திதேசத்தின் மறுபக்கம் 20

20
ஹட்டன் நகரத்தில் சந்திரசேகரனது பிரச்சாரக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எப்.பினது பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு வடக்கு கிழக்கு முதலமைச்சர் என்ற பந்தாவுடன் மெய்காவற்படை, கூலிப்படை சகிதம் வரதராஜப்பெருமாள் வந்திருந்தார். அவரைப் பார்க்கவென்று ஓரளவு கூட்டம் கூடியிருந்தது. வசந்தனும், சந்திரனும் கூட அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கே செல்லும் போது புளொட்டில் இருந்த வேறு இருவரை அவர்கள் பார்த்தார்கள். ஒருவர் புளொட்டின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஈஸ்வரன், மற்றவர் வசந்தனுக்கு சமகாலத்தில் பயிற்சி பெற்ற முகுந்தன் என்பவர். இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே புளொட்டை விட்டு விலகி ஒதுங்கியிருந்தார்கள்.

ஈஸ்வரன் பல மாதங்களாகவே கொட்டகலை பகுதியில் தங்கியிருந்து ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முகுந்தன் ஏன் மலையகத்திற்கு வந்தான் என்பது தெரியாது. ஆனால் வசந்தனுக்கும், சந்திரனுக்கும் சிந்தனை வேறு திசையில் சென்றது. அதாவது அவர்கள் இருவரும் சங்கிலியையும், உமாமகேஸ்வரனையும் கொல்லவே (அப்போதுதான்) மலையகம் வந்திருப்பதாக கதைகட்டிவிட்டு உமாமகேஸ்வரனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்லி தாங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக நம்பவைத்து அவரைக் கொன்றுவிடலாம் என்றும் பழியை அவர்கள் இருவர் மீதும் போட்டுவிடலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.

உமாமகேஸ்வரனுடன் ராபின் மட்டுமே கொழும்பிலிருந்து வந்திருந்தான். ஏற்கனவே சங்கிலியுடன் பாதுகாப்புப் பணிக்கென்று அவனையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர்.

எனவே, ஈஸ்வரனையும், முகுந்தனையும் கொலை செய்ய வேண்டும் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் வகையில் எடுத்துச் சொல்லுவது சங்கிலியையும் அவனுடன் இருந்த மற்ற இருவரையும் அதைச் செய்து முடிக்கும் வேலைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது உமாமகேஸ்வரனுக்கு ராபினுடன் சேர்ந்து தாங்களும் பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்று சொல்லி உடனிருந்து அவரையும் ராபினையும் கொலை செய்வது என்பது அவர்கள் திட்டமாக இருந்தது.

எனவே உடனேயே அவர்கள் அவசரஅவசரமாக தலவாக்கலவுக்குத் திரும்பி சந்திரசேகரனது தேர்தல் அலுவலகமான பஞ்சலிங்கம் ஸ்டோரில் வந்து உமாமகேஸ்வரனையும், சங்கிலியையும் தேடினார்கள்.

சங்கிலி அவர்கள் இருவரையும் இரகசியமாக பிடித்து தட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஜே.வி.பி. பயிற்சி முகாம் பகுதிக்குச் சென்று விட்டான். மற்றவர்களை கதிரவன்(திவாகரன்) பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை கவனி;க்க அழைத்துச் சென்றுவிட்டார்.
அங்கு யாரையும் காணாத நிலையில் அவர்கள் அங்கிருந்த சந்திரசேகரனின் உதவியாளரான ராஜாவிடம் உமாமகேஸ்வரனும் சிவாவும் (சங்கிலியின் மலையகப் பெயர் அவன்தான் சங்கிலி என்பது யாருக்கும் தெரியாது) எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியுமா? என்று அவர்கள் கேட்டனர்.

தங்களது கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு வந்தவர்கள் என்ற வகையில் மட்டுமே அவர்களைப் பற்றி அறிந்திருந்த ராஜா சிவா எங்கே போனார் என்று தெரியாது. உமா நேற்றே கொழும்புக்கு போய்விட்டதாக சிவா சொன்னாரே உங்களுக்குத் தெரியாதா? என்றார்.

அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகப் போய்விட்டது. அடே எல்லாப் பிளானும் வீணாப் போச்சு என்று சலித்துக் கொண்டனர். தங்களது திட்டம் தெரிந்துதான் அவர் கொழும்புக்கு போனார் என்று சிந்திக்க அவர்களது அறிவுக்குத் தோன்றவில்லை.

இனி மலையகத்தில் நின்று பிரயோசனம் இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு சங்கிலி அல்லது கதிரவன் வந்தால் தாங்கள் கொழும்புக்குப் போவதாக சொல்லும்படி சொல்லிவிட்டு பஸ் ஏறினார்கள்.

ஈஸ்வரனும், முகுந்தனும் உமாவை தட்ட காத்திருந்த செய்தியை அவசரமாக தெரிவிக்க வந்தவர்களைப் போல அவர்கள் கொழும்பு அலுவலகத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் அங்கு வந்திருந்த செய்தியையும், கொண்டு வந்த செய்தியையும் ராபின் மூலமாக அறிந்த உமாமகேஸ்வரனுக்கு தான் சொன்ன வேலையை ஒழுங்காக செய்யாமல் தப்பிவிட்டதற்காக சங்கிலி மீது கோபம் ஏற்பட்டது. உடனடியாகவே தொலைத்தொடர்பு நிலையம் மூலமாக (கொழும்புக்கும், மலையகத்திற்கும் தனியாகத் தொலைத் தொடர்பு நிலையம் புளொட்டிற்கு இருந்தது) சங்கிலியுடன் தொடர்பு கொண்டு அவனை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். அவன் தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நேரத்தில் நீங்கள் இங்கே இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் உங்கே வந்துவிட்டார்கள். அவர்களைத் தந்திரமாக இங்கே திரும்பி அனுப்பி வையுங்கள் என்று உமாவுக்குச் சொன்னான்

உமாமகேஸ்வரனுக்கு அவர்களை மீண்டும் அங்கே திரும்பி அனுப்ப ஏனோ மனம் இடந்தரவில்லை. சங்கிலி கோபத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்து முடித்தால் மலையக வேலைகள் பாழாகிப் போய்விடுவதோடு சங்கிலியும் மாட்டுப்பட நேரும் என அவர் பயந்தார். எனவே உடனேயே அவர்கள் இருவரும் மலையகத்திலிருந்து கதிரவனிடம் சொல்லாமல் திரும்பி வந்தது தவறு என்றும் அதற்கான விளக்கத்தை எழுதி கொழும்பு அலுவலகப் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு முள்ளிக்குளம் முகாமுக்கு உடனடியாக திரும்பிப் போகும்படி கடிதம் எழுதி அனுப்பினார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வசந்தனுக்கும், சந்திரனுக்கும் தாங்கள் சொன்ன ஈஸ்வரன் கதையை உமாமகேஸ்வரன் நம்பவில்லை என்று தெரிந்தது. எனவே அவர் எழுதியுள்ளபடி முகாமுக்குச் சென்று வேறொரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து உள்ளுக்குள் இருந்தே அவரை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணினார்கள். முகாமுக்குச் செல்லாமல் கொழும்பில் நின்றால் நிச்சயமாக அவருக்கு தங்கள் மேல் சந்தேகம் வரும் என்று அவர்கள் பயந்தார்கள்.

வசந்தனைப் பொறுத்தவரை தன்னுடைய திட்டம் இன்னமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். தான் தமிழகம் சென்று திரும்பிய விடயம் கூட அவருக்குத் தெரியாது என்றே அவன் நினைத்திருந்தான். அவர் சொல்லியபடிதான் இரகசியமாக யாழ்ப்பாணம் போனதாகவும் அங்கே புலிகளுக்கு தெரியாமல் பல இடங்களுக்குச் சென்று புளொட்டின் முன்னாள் ஆதரவாளர்களைச் சந்தித்து தேர்தலில் DPLFகுக்கு வோட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டதாகவும் கதையளந்திருந்தான்.

உமாமகேஸ்வரன் இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதவர் போல நடந்து கொண்டார். வசந்தன் விடயத்தை அவர் கையாண்ட விதம் என்பது அவரது 80களின் தொடக்க கால நடவடிக்கைகளுக்கும், இறுதி கால நடவடிக்கைகளுக்குமுள்ள வேறுபாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

80களின் நடுப்பகுதிவரை அதாவது பின்தளக்காலத்தில் உமாமகேஸ்வரனுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால் தனிப்பட்ட முறையில் ஒருவர் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று தெரிந்துவிட்டால் அவரை நீண்ட காலம் உயிரோடு விட்டுவைக்க. அவர் விரும்பவில்லை. (உ-ம் சந்ததியார், சிவனேஸ்வரன் கொலைகள்) இதை சிலர் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பலவீனம் என்று சொல்லுவார்கள். சிலர் இது அராஜகம் என்று சொல்வதுண்டு. அவரது விசுவாசிகளே இது தலைமைத்துவத்துக்குரிய சாணக்கியம் என்று வாக்காலத்து வாங்குவதுண்டு. எது எப்படியோ பிள்தளக் காலத்தில் உமாமகேஸ்வரனது மறுபக்கம் என்பது இப்படித்தான் இருந்தது.

இந்த மறுபக்கத்தை பயன்படுத்தத் தெரிந்து கொண்ட குடாநாட்டு பயில்வான்கள் கூட்டம் (புளொட்டுக்குள் இருந்த) உமாமகேஸ்வரனுக்காக உமாமகேஸ்வரன் பெயரால் உமாமகேஸ்வரன் சொன்னதாக சொல்லிக் கொண்டு பல திருவிளையாடல்களை நடத்தினர். சுழிபுரம் கொலைகள் முதற்கொண்டு ஒரத்த நாட்டு (தமிழ் நாடு) புதைகுழிகள் வரை அதில் அடக்கம். இதில் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டது10 என்றால் செய்யப்பட்டது 100.

தான் சைட் அடித்த தமிழ்நாட்டுப் பெண்ணை தனக்குக் கீழே இருந்த ஒருவன் காதலித்துவிட்டான் என்பதற்காகவே அவனைப் புலிகளின் உளவாளி என்று முத்திரை குத்தி உமாமகேஸ்வரனின் உத்தரவு என்ற பெயரில் ஒரத்த நாட்டு சவுக்கு மரத்திற்கு உரமாக்கிய சம்பவம் மக்கள் யுத்தத்தின் மகத்தான வரலாறு.


உமாமகேஸ்வரன் தன்னுடைய தவறுகளுக்கு அந்தப் பயில்வான்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தன்னுடைய பெயரால் அந்தப் பயில்வான்கள் செய்த தவறுகளை அவர் தட்டிக் கேட்க முடியாமல் போனார். அதன்மூலம் அந்தத் தவறுகளுக்கு அவரே காரணகார்தாவாகவும் ஆனார்.

80களின் பிற்பகுதியில் புளொட்டில் ஏற்பட்ட உடைவைத் தொடர்ந்து வந்த தோல்விகள், புளொட்டின் சீரழிவுத் தன்மை இவையெல்லாம் உமாமகேஸ்வரனை முழுமையாக மாற்றிவிட்டது என்று சொல்லா விட்டாலும் கொஞ்சம் மாற்றியது. எதிராளிகளை அவர் விட்டுப்பிடிக்க ஆரம்பித்தார். பயில்வான்கள் சுயமுடிவுகள் எடுப்பதை இயன்றவரை தவிர்க்க முயற்சித்தார்.

காந்தி தேசத்தின் மறுபக்கம்-19

19
சந்திரசேகரன் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட மினி பஸ்கள், வான்கள், கார்கள் சகிதம் பெரும் ஆரவாரத்துடன் தலாவாக்கலயிலிருந்து நுவரெலியா கச்சேரிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய புறப்பட்டுச் சென்ற பின்பு ஒரு அரை மணி நேரம் கழித்து கார் ஒன்றில் ஜே.வி.பி.சகாக்கள் சகிதம் அவ்வழியால் சென்ற சங்கிலி தற்செயலாக நானுஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்த கடையில் சிகரட் வாங்க நிறுத்திய போது அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது அவனுக்ககுச் சந்தேகம் வந்தது.

அவன் தான் சங்கிலி என்று அவர்கள் அறியா விட்டாலும் அவனது வாட்டசாட்டமான தோற்றத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக அங்கிருந்து நழுவ முயற்சித்தனர். உடனேயே சங்கிலி அவர்களை மடக்கிப் பிடித்து எத்தனிக்க அவாகள்; தங்கிளிடமிருந்த பிஸ்டலை எடுத்து அவனைச் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தனர். அதற்குள் உசாரான சங்கிலியும் அவர்களைவிட வேகமாக தன்னுடைய பிஸ்டலை எடுத்து லோட் பண்ணி அவர்களை சுட்டுவிட தீர்மானிக்க அங்கே ஒரு துப்பாக்கிச் சமரே நடக்க இருந்தது. நல்ல வேளையாக காரிலிருந்த ஜே.வி.பி காரர்கள் பாயந்து வந்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் மடக்கி இழுத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டனர்.


கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்த இந்தச் சம்பவம், அங்கிருந்த மக்களுக்கு திகில் நிறைந்த சினிமா படக்காட்சி ஒன்றைப் போலவே இருந்தது. அதிலும் இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நானுஓயா பொலிஸ் நிலையம் 300 மீட்டர் தொலைவிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பின்பு அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி ஜே.வி.பி.யினரின் மறைவிடம் ஒன்றுக்குக் கொண்டு சென்று விசாரித்ததில் முதலில் தாங்கள் சந்திரசேகரனைக் கொல்வதற்காக இ.தொ.கா.வைச் சேர்ந்த கந்தசாமி நாயுடுவால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனச் சொன்னார்கள். பின்பு கொஞ்சம் கவனித்து விசாரித்த போது தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்திரசேகரனுக்கும், இ.தொ.க.வுக்கும் உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி சந்திரசேகரனை கொலை செய்வதன் மூலம் இ.தொ.க. உடைக்க அவர்கள் மட்டக்களப்பிலிருந்து அவர்களது தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக உண்மையைச் சொன்னார்கள்.

இதற்கிடையில் உமாமகேஸ்வரனுக்கு யாழ்ப்பாணம் போசவதாகச் சொல்லிவிட்டு தமிழகம் சென்றிருந்த வசந்தன் அங்கே சென்று ஈ.என்.டி.எல்.எவ் பிரமுகர்களைச் சந்தித்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக ஆலோசனையும், நிதி உதவியும் பெற்றுக் கொண்டு கொழும்புக்கு திரும்பி வந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள அஜந்தா ஹோட்டலில் தங்கியிருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தமிழகத்தில் பேசியதன்படி ஈ.என்டி.எல்.எப். காரர்கள் 9 மி.மீ பிஸ்டல் ஒன்றைக் கொண்டு வந்து வசந்தனுக்குக் கொடுத்ததாகச் கொல்லப்படுகின்றது.

ஆயுதம் கைக்கு வந்து சேர்ந்ததும் அவன் வவுனியாவில் தங்கியிருந்து பிரசார வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனது சகாவான சந்திரனை இரகசியமாக கொழும்புக்கு வரவழைத்து உமாமகேஸ்வரனது நடமாட்டங்களை கண்காணிக்கச் செய்தான். கொழும்பில் உமாமகேஸ்வரனுக்கு காவலாக அவரது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களான ராபின், ஆச்சிராசன், சக்திவேல் ஆகியோர் ஒரு கவசம் போலட இருந்ததால் அவர் மலையகத்திற்குச் செல்லும் போது அதை அறிந்து பின் தொடர்ந்து சென்று வழியில் வைத்தோ அல்லது மலையகத்தில் வைத்தோ அவரைக் கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.

இது இவ்வாறு இருக்க யாழ்குடா நாட்டில் னுPடுகுன் சார்பில் தேர்தலில் போட்டியிட கரவை கந்தசாமியைத் தவிர வேறு எவரும் முன்வராத காரணத்தால் இயக்க உறுப்பினர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதிலும் குடாநாட்டில் தேர்தல் பிரசாரம் எதுவும் செய்ய முடியாத நிலையில் மலையகத்திலேயே தேர்தல் வேலைகளுக்கும், தேர்தல் பிரசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க உமாமகேஸ்வரன் தீர்மானித்தார்.


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் அனைத்து மினி பஸ்களும், சுழற்சி முறையில் தோட்டப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மினிபஸ் ஓட்டுனர்களோ, உரிமையாளர்களோ புளொட்டின் மீதான அபிமானத்தின் காரணமாக அங்கு செல்ல முன்வரவில்லை. வவுனியாவிலுள்ள புளொட் தடைமுகாமைத் தாண்டி யாழ்ப்பாணம் சென்றுவர வேண்டுமே என்ற பயத்தின் காரணமாகவே மலையகத்திற்கு வந்திருந்தனர்.

தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது உமாமகேஸ்வரன் மலையகத்திற்கு வந்திருந்தார். அவருக்கும் சந்திரசேகரனுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கென தனக்கு நம்பிக்கையான சிலரை சங்கிலி மலையகத்திற்கு அழைத்திருந்தான்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்களும் தேர்தல் வேலை செய்ய வவுனியாவில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டு சந்திரனும், வசந்தனும் கூட மலையகம் வந்தனர்.

அவர்களுக்கு மலையகம் என்பது, புதிய இடம், சந்திரசேகரனுக்கு இருந்த இளைஞர் ஆதரவும் எழுச்சியும் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. தலவாக்கல நகரத்தில் மினிபஸ்சில் வந்து அவர்கள் இறங்கியதைத் தெரிந்து கொண்ட சங்கிலி உடனேயே உமாமகேஸ்வரனுக்கு அதை அறிவித்தான்.


அவர்கள் அங்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று ஜே.வி.பி.யினருக்குப் பயிற்சி வழங்கும் பகுதியில் வைத்துக் கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டார்.

தான் அதைப் பார்த்துக் கொள்வதாக உமாமகேஸ்வரனுக்குச் சொன்ன சங்கிலி நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் ஒருத்தருக்கும் தெரியாமல் கொழும்புக்கு உடனே போய்விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொன்;னது சரி என்று படவே உடனடியாக அன்றிரவே யாருக்கும் தெரியாமல் கொழும்பு திரும்பினார்.

இது தெரியாமல் அவர் அங்கு தான் தங்கியிருப்பதாக நம்பிக் கொண்டிருந்த வசந்தனையும் சந்திரனையும் தனது நம்பிக்கைக்குரியவர்கள் போலப் பேசி தலவாக்கல, ஹட்டன் பகதியில் நடந்த இரண்டு கூட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பை அவர்களுக்கே கொடுத்தான். அடுத்தபடியாக ஜே.வி.பி.பகுதிக்கு அவர்களை தந்திரமாக அழைத்துச் சென்று அங்கே வைத்து அவர்களைக் கைது செய்து கொலை செய்து விடுவதென்பது சங்கிலியின் திட்டம்.

வசந்தனதும் சந்திரனதும் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அன்றிரவே உமாமகேஸ்வரனை அங்கேயே வைத்து கொலை செய்துவிட்டு தேவைப்பட்டால் சங்கிலியையும் கூடக் கொலை செய்துவிட்டு வாகனமொன்றைக் கடத்திக் கொண்டு தப்பிச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.

சனி, 20 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் 18

18
மலையகத் தமிழர்களை வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத் தோனி என்றெல்லாம் இழிவு செய்து அவர்களது வாக்குரிமையைப் பறித்து அவர்களை வாக்குச்சீட்டு அரசியல் மூலம் நாடற்றவர்களாக்கி சிங்கள இனவாதிகளுக்குப் பக்கபலமாக நின்ற யாழ்ப்பாணத்து லண்டன் கனவான்களினதும், சாதிய பயில்வான்களினதும் வழிவந்த பாலபுத்தர் அன் கொம்பனியினுடைய எதிர்பிபனால் மலையகத்தில் தேர்தல் வேலைகளோ கதிரவன் செய்த அரசியல் வேலைகளோ ஒன்றும் தடைப்பட்டுப் போய்விட வில்லை.

கதிரவனைப் பொறுத்தவரை வடக்குக் கிழக்கில் அமைப்பை உருவாக்கிய மக்கள் யுத்தக் கனவான்கள் செய்த தவறை அலையகத்தில் செய்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மலையக இளைஞர்களுக்கு ஆயுத ஆசை காட்டி வடக்குக் கிழக்கு கூலிப்படைகளாக அனுப்பக் கூடாது என்பதில் அவர் கண்டிப்புடன் இருந்தார். மலையக இளைஞர்கள் மலையகத்திலேயே போராட்டத்தை உருவாக்க வேண்டும். மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அவர்கள் தாங்களே தலைமை தாங்கிப் போராட வேண்டும் என்பதிலும் மலையகத்தின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தலைமை தாங்கக் கூடிய வெகுசன அமைப்புக்கள் மூலமாக இளைஞர்களது எழுச்சியை ஒழுங்கமைத்து ஒரு படிமுறை வளர்ச்சியூடாகவே புலிகளைப் போல் கட்டுப்பாடும், இரகசியம் காக்கும் தன்மையும் மிக்க அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதிலும் அவர் கருத்துடன் இருந்தார்.

வடக்குக் கிழக்கு மக்களாகிய நமக்கு நமது தாயகம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு பிரதேசம் இருக்கின்றது. ஏங்களுக்கென்று சொந்த நிலம் இருக்கின்றது, எங்களில் 80 வீதமானவர்களுக்கு சொந்த சேமிப்புக்கூட இருக்கின்றது. சிறிலங்கா அரசின் இராணுவ வன்மறைகளால் நாம் சொந்த பிரதேசங்களைவிட்டு விரட்டப்பட்டாலும் மீண்டும் சுமுக நிலை ஏற்படும் போது நாங்கள் எங்கள் சொந்த இடங்களுக்குப் போய் இது எங்கள் மண், இது எங்கள் வீடு என்று உரிமை கொண்டாடக் கூடிய நிலை எங்களுக்கு இருக்கின்றது.


ஆனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை அவ்வாறானதல்ல. அவர்கள் பிரித்தானியர்களால் கூலிகளாக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகளாகின்றது. அவர்கள் கண்டி சீமைக்கு வந்த போது ஆங்கிலேயரின் கைக்கூலிகளான கங்காணிகள் புழுகித் தள்ளியது போன்று வழமான வசதியான வாழ்க்கை காத்திருக்கவில்லை. கொட்டும் மழையிலும் பழக்கமே இல்லாத கடும் குளிரிலும் கொலரா, மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்களின் கடும் கொடூரத்தாலும் அவர்கள் பட்ட கஸ்டம் எழுத்தில் எழுதி மாழாது. அடர்ந்த காடாக இருந்த மலையகம் இன்று தேயிலைத் தோட்டங்களாகவும் இறப்பர் தோட்டங்களாகவும் மாறி பொன்விழையும் பூமியாகக் காட்சி தருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒவ்வொரு தேயிலைச் செடிக்கும், ஒவ்வொரு இறப்பர் மரத்திற்கும் பின்னால் தோட்டத் தொழிலாளர்களது இரத்தம், உழைப்பு, வியர்வை உயிர், உடல் எல்லாமே இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டுமல்ல வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி உயிரைக் கொடுத்து உடலை உரமாக்கித் தான் அந்தத் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த காலத்தில் இன்று பெரிய பணக்கார நாடுகளாகவும் வல்லரசுகளாகவும் இருக்கும் மேற்குலக நாடுகளே கடன்கார நாடுகளாக இருந்தன.

இன்று பிச்சை கேட்டு நிற்கும் இலங்கை அன்று கடன் கொடுத்த நாடாக இருந்தது. இரண்டாவது உலக யுத்த நடவடிக்கைக்கு நிறைய இறப்பர் தேவைபட்ட போது இலங்கை அதை கொடுக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கிலாந்து நாடு அவ்வாறு இலங்கையிடமிருந்து இறப்பரை கொள்வனவு செய்த வகையில் இலங்கையிடம் கடன்பட்ட நாடாக இருந்தது. இவ்வாறு இலங்கைக்கு கொடுக்க வேண்டிய பணம் ஸ்டேலிங் நிலுவைக் கணக்கு என அழைக்கப்பட்டது.

வெள்ளைக்கார எஜமான் இந்த நாட்டைவிட்டுப் போன பின்பு அவனது இடத்தை சுவீகரித்துக் கொண்ட டி.எஸ்.சேனநாயக்காவின் கூட்டமும் யாழ்ப்பாணத்து திருச்செல்வம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் குழுவும் மலையக மக்கள் இரத்தம் சிநத்தி உழைத்த அந்தப் பணத்தைக் கொண்டு அரிசியும், மாவும் இறக்கி வயிறு முட்டச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டுதான் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி அவர்களை ஒரு இனச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் திட்டமிட்டு மிகப்பெரிய அநீதியை இழைத்தது.


பின்னாளில் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் கூட இந்த அநீதியை எதிர்த்து ஒப்புக்காக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தாரே அன்றி இதை எதிர்த்து மாபெரும் அரசியல் போராட்டம் நடத்தவோ பறிக்கப்பட்ட வாக்குரிமையை மீண்டும் பெற்றுக் கொடுக்கவோ அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை. இது இந்திய வம்சாவழித் தமிழர் பிரச்சினை இது எமது போராட்டத்திற்கு தேவையில்லாத களம் என இவர்கள் விட்டுவிட்டார்கள்.


வெள்ளைக்கார எஜமான் நயவஞ்சகமாக எமது தேசியத்தை நசுக்கி எமது ஆட்சியுரிமையைப் பறித்து எம்மை தான் தன்னுடைய நலனுக்காக உருவாக்கிய சிறிலங்கா என்ற சிறை கூட்டத்துக்குள் அடைத்துவிட்டு அதை காவல்காக்கும் நிறுவனமாக பாராளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்கிய போது அந்தச் சிறையை உடைத்து தமிழர் தேசியத்தையும் , தமிழர் ஆடசி உரிமையையும் விடுவித்து உறுதி செய்வதற்குப் பதில் அந்தச் சிறையை காப்பதற்கு காவலாளிகளாகச் செல்ல ஓட்டப் போட்டி நடாத்திக் கொண்டிருந்த இவர்களுக்கு இது ஒரு தேவையில்லாத களம் தான்.

2000 வருடத்திற்கு முன் இந்தியாவிலிருந்து வநற்த விஜயனின் வாரிசுகள் தாங்கள் என்று சொல்லும் சிங்களவர்களை இலங்கையர்கள் என்று அழைத்த இவர்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன் அவுஸ்ரேலியாவிற்கும், தென்னாபிரிக்காவுக்கும் சென்ற வெள்ளையர்களின் அவுஸ்ரேலியர்கள் என்றும், தென்னாபிரிக்க வெள்ளையர்கள் என்றும் அழைத்த இவர்கள் 150, 200 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த அப்பாவித் தோட்ட தொழிலாளர்களைத் தங்களுக்குச் சமமாக இலங்கைத் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதற்கும் அழைப்பதற்கும் இவர்களுக்கு மனம் வராமல் போனதற்கு அடிப்படைக் காரணம் சாதி, தமிழ் நாட்டில் நிலவிய மிகக் கொடுமையான சாதிய அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்களே கண்டிச் சீமைக்கு போனாலாவது தங்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்று நம்பி புலம் பெயர்ந்து வந்தார்கள் என்பது இவர்களுக்குத் தெரியும்.

மறுபக்கம் இவர்களை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று இலங்கைத் தமிழர்களில் இருந்து பிரிந்து பெருமைப்படுபவர்கள் இவர்களது தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். இவர்களில் 99 வீதமானவர்களுக்கு இலங்கைப் பிரசா உரிமையும் உண்டு. இலங்கையிலும் வீடுகள் சொத்துக்கள் உண்டு. இந்தியாவிலும் வீடுகள் சொத்துக்கள் உண்டு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழர் பழமொழியின்படி இயங்கும் இவர்களுக்கு இந்த மக்கள் ஒரு வியாபாரப் பொருள்தான். இந்த வியாபாரப் பொருட்களுக்குப் இவர்கள் இட்ட வியாபார சின்னம் தான் (வுசயனந ஆயசம) இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்ற இந்த அடையாளச் சின்னம் அழிந்து இலங்கைத் தமிழர்கள் என்ற பொதுக் குறியீட்டுக்குள் அவர்கள் வந்துவிட்டால் இவர்களுக்கு திருச்சிக்கும், தஞ்சாவூருக்கம்,புதுக்கோட்டைக்கும் செல்வம் அனுப்ப வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.

உண்மையில்இலங்கை மண்ணிலே பிறந்து வளர்ந்த குப்புசாமிக்கும், சுப்பிரமணிக்கும் தமிழ் நாட்டு மண் என்ன நிறம் என்று கூடத் தெரியாது. பாட்டன் முப்பாட்டன் காலத்துடனேயே அவனது தமிழகத் தொடர்பு அழிந்து போய்விட்டது. பலருக்கு அங்கே உறவினர்கள் கூடக் கிடையாது. 200 வருட காலம் இலங்கையிலேயே அவர்கள் இரத்தம் சிந்தி உழைத்தார்கள். அவர்களது உழைப்பினால் பலர் கோடீஸ்வரர்களானார்கள். இலங்கை மக்களுக்கு அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இலவச அரிசியும் உணவு மானியமும் கிடைத்தது. அவர்களது உழைப்புத் தந்த அந்நியச் செலவாணியினால் கொழும்பு நகரத்தில் மாடமாளிகைகள் எழுந்தன. ஆடம்பர சொகுசுக் கார்கள் ஓடின. பஜிரோ ஜீப்புக்கள் வந்து இறங்கின. ஆனால் பாவம் இதற்கெல்லாம் காரணமாயிருந்த இந்த மக்களுக்கென்றுதான் ஒன்றுமேயில்லை. அவர்கள் குடியிருக்கும் நிலம் அவர்களுக்குச் சொந்தம் இல்லை. நாளைக்குச் சாப்பிட வேண்டுமானால் இன்றைக்கு அவர்கள் வேலை செய்துதான் ஆக வேண்டும்.
தோட்டத்துரை அவர்களை வேiலியிலருந்து நிறுத்தி லயத்தைவிட்டு விரட்டிவிட்டால் பஞ்சப் பரதேசிகளாக அவர்கள் நடு வீதிக்குத்தான் வரவேண்டிய நிலை ஒரு போதும் அவர்கள் தாங்கள் வேலை செய்த தோட்டத்திற்குச் சென்று இது எங்களது தோட்டம், இது நாங்கள் குடியிருந்த நிலம், இது நாங்கள் குடியிருந்த லயம் என்று உரிமை கொண்டாட முடியாது.

உண்மையில் தோட்டத்துரை அல்லது தோட்ட நிர்வாகம் என்ற சில தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களால் தீர்மானிக்கப்படக்கூடிய நவீன கொத்தடிமைகளாகத்தான் அவர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயிருந்த தொழிற்சங்கங்கள் இன்னொரு துரைத்தனத்தைத்தான் அங்கே உருவாக்கியிருந்தன. அமைச்சர் தொண்டமானினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரஜா உரிமையும், வாக்குரிமையும் அடிப்படையில் அந்த மக்களது பொருளாதார அரசியல் சமூக அடக்கு முறைகளைத் தகர்க்கவில்லை. மாறாக சிறையில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு ஒப்பானதாகவே அவை இருந்தன.

இந்தப் பின்னணியில் நடக்க இருந்த 1988 பொதுத் தேர்தலை மாற்றத்தை விரும்பும் மலையக மக்களின் தொகையை அறியும் கருத்துக் கணிப்பாக கொள்ள கதிரவன் திட்டமிட்டார். சந்திரசேகரன் தேர்தலில் நிற்பார் என்று தெரிந்தவுடனேயே அங்கே பெரும் பரபரப்பும், பெரிய எதிர்பார்ப்பும் குறிப்பாக இளைஞர்களிடையே உருவாகியது. தேர்தல் மனு தாக்கல் செய்த அன்றே அந்த கரைபுரண்ட உற்சாகத்தை அறிய முடிந்தது.

அதேநேரம் சந்திரசேகரனை கொல்வதற்கு ஒரு சதி முயற்சி நடந்தது. நுவரெலியாவில் தேர்தல் மனு தாக்கல் செய்து விட்டு தலாவாக்கலைக்கு திரும்பி வரும் சமயத்தில் நானு ஓயா பாலத்தில் வைத்து சந்திரசேகரனை சுட்டுக் கொல்ல இரு இளைஞர்கள் காத்திருந்தார்கள்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-17

17
புளொட்டின் ஜாதியக் கனவான்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் உமாமகேஸ்வரன் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உறுதியான போக்கை கடைபிடித்து அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில், அவர் ஒரு பார்வையாளர் என்ற வகையிலேயே இந்த விடயத்தில் நடந்து கொண்டார்.

சிகரெட் பிடித்தது குற்றம் என்று சொல்லி முகாமிலிருந்த சாதாரண உறுப்பினர் ஒருவனுக்குத் தண்டனை கொடுத்த பொறுப்பாளர் ஒருவர் தான் சிகரட் பிடித்துக் கொண்டே அந்தத் தண்டனை வழங்கியதையும், ஒருபுறம் முகாமுக்குச் சென்று தோழர்களே பிரச்சினையை தட்டிக் கேளுங்கள், நாங்கள் அடக்குமுறைக்கு பணிந்துவிடக்கூடாது என்றெல்லாம் வீரமுழக்கம் செய்துவிட்டு தன்னிடத்தில் (உமா) வந்து நல்;ல பிள்ளைகளாக வேசம் போட்டவர்களையும் அவர் ஒருபோதும் கணக்கிலெடுக்கவே இல்லை.

6 மாதம் பயிற்சி, அது முடிந்தபின் கையில் ஆளுக்கொரு ஆயுதம் என்று நம்பிக் கொண்டு பின்தளம் சென்ற இளைஞர்கள் பயிற்சியுமின்றி, சாப்பாடுமின்றி, நல்ல உடுப்புக்கூட இன்றி பஞ்சப் பரதேசிகள் போல அனுபவித்த துன்பத்தை வார்த்தையில் சொல்வது கஸ்டம். பசிக் கொடுமையில் நாய்களையும், இலைகுழைகளையும் அவர்கள் சாப்பிட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கைக்கான தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் அவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இனவிடுதலைக்கு பங்கெடுக்க வந்த அவர்களது விடுதலை உணர்வு ஓரத்து நாடு புதுக்கோட்டை, தேனி சவுக்குத் தோப்புக்குள்ளும், மலைகளுக்குள்ளும் முடக்கப்பட்டதும், மழுங்கடிக்கப்பட்டதும் தற்செயலாக நடந்த- தலைமைத்துவத்தின் இயலாமையினால் நடந்த விடயமாக எனக்குத் தோன்றவில்லை.

ஈழப்போராட்டத்தின் மகத்தான இளைஞர் சக்தி போராட்டத்திற்கு கிடைக்கக் கூடிய பொருளாதார உதவி, இது இரண்டையும் திட்டமிட்டு முடக்க வேண்டும், திசை திருப்ப வேண்டும், சீரழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையில் தெரிந்துகொண்டே செய்த ஒரு பெரிய துரோகத்தனம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும். இதற்கு உமாமகேஸ்வரன் மட்டும் தான் காரணம் என்று யாராவது சொன்னால் அது சுத்தப் பம்மாத்து.
உமாமகேஸ்வரனின் பெயரைச் சொல்லி இந்தியப் பயிற்சியின் பெயரைச் சொல்லி புளொட்டுக்கு ஆள் சேர்த்த அனைவரும் இதற்குப் பொறுப்பு. புளொட்டினது அமைப்பாளர்கள் அனைவருமே ஜாதியக் கனவான்கள் என்பதும், போராட்டம் கூர்மையடைந்தால் அல்லது போராட்டத்தை கூர்மையடைச் செய்யக்கூடிய புலிகள் போன்ற அமைப்புக்கு இளைஞர்கள் சென்றால், அது யாழ் குடாநாட்டின் சாதிய அமைப்பையும், சாதிய ஒடுக்குமுறையையும் தகர்த்து தங்களது சாதிய தர்பார் ஒழிந்து போகச் செய்துவிடும் என்று இவர்களுக்குத் தெரியும். மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இராணுவத்தை எதிர்த்து புலிகள் நடத்திய கெரில்லா தாக்குதலை இவர்கள் நையாண்டி செய்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத மக்கள் போராட்டம் பற்றிப் பேசியதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

புளொட்டிலிருந்த பலசாலிகளினதும், மூளைசாலிகளினதும் மோதலினாலும், உமாமகேஸ்வரனது தவறான தலைமைத்துவத்தாலும் புளொட் உடைந்து சிதைந்து போனது என்பதைவிட இந்த அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இருந்த சமூக நோக்கம் ஒன்றுக்காகவே இது நிகழ்ந்ததாகச் சொல்லலாம்.
அதாவது இளைஞர் சக்தியை தேக்கிவைத்து அவர்களை மோசமான அதிருப்திக்கு உள்ளாக்கி தேவைப்பட்ட போது புதைகுழிக்கும் அனுப்பி அவர்களது உணர்வுகளைச் சிதறடித்து இனி அவர்கள் போராட்டத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவிடாமல் செய்துவிட்ட நிகழ்வு, தனி ஒர் தரப்பினருக்கு மட்டும் பொதுவானதல்ல. ஒரு அமைப்பு தவறென்றால் அல்லது அமைப்பின் தலைமை தவறென்றால அதை எதிர்த்து நடக்கின்ற உட்கட்சிப் போராட்டம் அந்த அமைப்பை திருத்துவதாக, தலைமையை திருத்துவதாக அல்லது மாற்றுவதாக இருக்க வேண்டும். இவை ஒன்றுமே சரியில்லாது போனால், ஒரு சரியான அமைப்பை நோக்கி பிழையான அமைப்பிலுள்ள உண்மையான உணர்வுள்ள போராளிகளை வரவழைப்பதுதான் ஒர் சரியான உட்கட்சிப் போராட்டத்தின் கடமை. அதைவிடுத்து போராளிகளை போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடும்படி சிதறடித்ததும் உள்ளதைவிட இன்னொரு மோசமான அமைப்பில் (நுNனுடுகு) போய் சேர்ந்து, இந்திய நலனுக்காக உழைக்கும்படி செய்ததும் தான் புளொட்டின் உட்கட்சிப் போராட்டக் கனவான்கள் செய்த வேலை.


உடைந்து, சிதைந்தது போக புளொட்டில் எஞ்சியிருந்த பிரிவு அமைப்பைவிட்டு வெளியே போனால் ஒன்றுமே செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்த பின் தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களையும், மிகவும் ஏழைப்பட்ட வெளிநாட்டுக்குச் செல்ல வசதியில்லாத குடாநாட்டவர்களையும், உடல் பலத்தின் மூலம் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட சாதியப் பயில்வான்களையும் மட்டும் கொண்டதாக இருந்தது. இது ஒரு அமைப்பு என்ற நிலையில் இருந்தது என்பதைவிட ஒரு கொள்ளைக் கோஸ்டி என்ற நிலையில் தான் இருந்தது. இயக்கத்துக்காக தாலி அறுப்பது, சங்கிலி பறிப்பது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்களை கடத்தி வைத்து பணம் பறிப்பது, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்களை கடத்தி வந்து நிறத்தையும் இலக்கத்தகடுகளையும் மாற்றி விற்பது இவைதான் 1985ற்குப் பின் எஞ்சியிருந்த புளொட்டின் போராட்ட நடவடிக்கைகளாக இருந்தன. தமிழகப் பொலிசாரின் கணக்கின்படி 1985 டிசம்பரில் இருந்து 1987 மார்ச் மாதம் வரை 32 தாலி, சங்கிலி அறுப்க்கள், 16 வீடு புகுந்து கொள்ளைகள், 4 ஆள் கடத்தல்கள் 63 வாகனக்கடத்தல்கள் புளொட்டினால் மட்டும் தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் ஒரு 7 அல்ல 8 சம்பவங்களைத் தவிர மிகுதி உமாமகேஸ்வரனுக்குத் தெரியாமல் நடந்தவை. ஆனால் இயக்கத்தின் பெயரால் இயக்கத்துக்காக நடந்தவை.


1988 கேரளாவில் தங்கியிருந்த கதிரவனை இலங்கைக்குத் திரும்பி வரும்படி அழைத்த உமாமகேஸ்வரன் அவரை வவுனியாவிற்குச் சென்று அங்குள்ள கிராமங்களில் அமைப்பை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். சீரழிந்து போன அமைப்புக்காக பொய் சொல்லி ஏமாற்றி மக்களைத்அணி திரட்டவும் அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் குழுக்களாக பிரிந்திருந்து கொண்டு தங்களது வீரதீர பராக்கிரமங்களுக்காக கொள்ளையும், கொலையும், ஆள் கடத்தலும் செய்து கொண்டிருக்கும் சாதியப் பயில்வான்களின் கூலிகளாக்க கதிரவன் மறுத்துவிட்டார்.


சீரழிந்து போய்க்கிடக்கும் புளொட் அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதென்பது கருகிப் போன பயிருக்கு தண்ணீரும் உரமும் போடுவதைப் போன்றது. அங்கே பயிருக்காக போடப்படும் உரத்தையும், தண்ணீரையும் பயிர்களைப் போல தோற்றமளிக்கும் களைகள் தான் உறிஞ்சிக் கொண்டு செழித்து வளர்ந்து பயிர் நிலத்தையெ பாழாக்கிவிடும். அதைப்போலவெ புளொட்டுக்கு புத்துயிர் அழிக்கும் போது அதிலுள்ள பிரதேச சாதி குழு நலன்கள் மிகுந்த சீரழிவாதிகள் தான் பயன்பெற்று இனத்தையே சீரழித்துவிடுவார்கள். பட்டம் பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும் இவர்கள் அப்பாவி இளைஞர்களை விலை பேசியே விற்றுவிடுவார்கள். என்று கதிரவன் உமாமகேஸ்வரனுக்கு எடுத்துச் சொன்னார்.

உமாமகேஸ்வரன் மற்ற விடயங்களில் எதிர்மாறாக இருந்தாலும் அரசியல் விடயங்களில் கதிரவனுடைய ஆலோசனையைக் கேட்பதுண்டு. புளொட்டினால் ஒரு போதும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு பவனி வரும் அதன் பிரதேச மாவட்டத் தலைவர்கள் எல்லோருமே பிழைப்பு வாதிகள் தான். குறைந்தபட்சம் இனவிடுதலையை வென்றெடுக்காவிட்டாலும் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமலாவது இருக்க வேண்டும். உண்மையில் நாங்கள் என்ன செய்கின்றோம். புலிகளை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் அரசாங்கத்துக்குத்தான் நாம் உதவி செய்து கொண்டிருக்கின்றோம் புலிகள் போராடுகின்றபடியால் தான் அரசாங்கம் எங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. புலிகள் அழ்க்கப்பட்டால் நாங்களும் அழிக்கப்பட்டுவிடுவோம் மனச்சாட்சியின்படி நாங்கள் சிந்தித்துப்பார்த்தால் எங்களுடைய ஆட்களது புலி எதிர்ப்பு என்பது அவர்களது சாதிய பிரதேச நலன்கள் புலிகளின் போராட்டத்தால் பாதிக்கப்படுவதால் ஏற்பட்ட வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும்,

புலிகள் வடக்கு கிழக்கில் போராடட்டும் அதில் நாங்கள் தலையிட வேண்டாம். எங்களுக்கு உண்மையில் இனவிடுதலையில் அக்கறை இருக்குமானால் நாங்கள் மலையகத்தில் சென்று போராடுவோம். சிறிலங்கா அரசாங்கத்தில் பொருளாதார அத்திவாரமாக இருப்பது மலையகம் தான். வடக்கு கிழக்கில் புலிகள் போராட மலையகத்தை நாம் ஆட்டம் காண வைத்தால் நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தால் சமாளிக்க முடியாது. இது தமிழீழ போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் உமாமகேஸ்வரனுக்கு நிலைமையை விளக்கினார் கதிரவன்.

உமாமகேஸ்வரனுக்கு அது சரியென்றுபட்டு அதுக்கு ஒத்துக்கொண்ட போது கதிரவன் சில நிபந்தனைகளை விதித்தார். முதலாவது மலையக மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது அங்கேயே அவர்களிடமிருந்தே ஒரு தலைமையை உருவாக்க வேண்டும். புளொட் என்ற அமைப்பிற்கும் மலையகத்திலே உருவாக்கப்போகின்ற அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் தொடர்பும் கூட இருக்கக்கூடாது. அந்த அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் புளொட்டுக்குக் கிடையாது. இந்த நிபந்தனைகளை உமாமகேஸ்வரன் ஏற்றுக் கொண்ட பின்பே கதிரவன் மலையகம் சென்றார்.
இந்தப் பின்னணியிலேயே மலையகத்தில் ;சந்திரசேகரன் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்ற நிபந்தனை முன்வைத்து டி.பி.எல்.எப்.இல் போட்டியிட முன்வந்த போது உமாமகேஸ்வரன் தடையேதும் சொல்லாமல் அதற்கும் சம்மதம் கொடுத்தார்.

ஆனால் யாழ்ப்பாண சாதிமான்கள் சும்மா இருப்பார்களா? நாங்கள் போராட வேண்டிய இடத்தை விட்டுவிட்டு தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபர்களுக்காக எங்களுடைய சக்தியை செலவழிக்கிறோம் என்று சீறி எழுந்தனர். அவர்களில் முதன்மையானவர் பாலபுத்தர், மலையக மக்களைப் பற்றியோ தமிழீழத்தில் அரசினதும் சாதிமான்களினதும் அடக்கு முறைகளால் மக்கள் அனுபவித்த துன்பத்தை எழுத்தில் கூட படித்திராத இந்த லண்டன் கனவான் இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியது தற்செயலானதல்ல. புளொட்டின் சாதிய பிரதேச வெறிகொண்ட பிரிவினரின் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் அது

காந்தி தேசத்தின் மறுபக்கம்16

16

19ம் நூற்றாண்டில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய பிரித்தானியரின் கைக்கூலியான கண்காணிமார் ஆள்பிடித்த போது தமிழகத்தில் தென்மாவட்டங்களான தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டிரந்த கொடும் பஞ்சத்தினாலும் அதைவிடக் கொடுமையான சாதிய அடக்குமுறைகளாலும் அல்லல்பட்டு வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் கண்டிய சீமை கதையை பரப்பினார்கள். அதாவது கஸ்டமில்லாத வேலை, கை நிறையச் சம்பளம் ஆளுக்கொரு வீடு, அப்பிளும், திராட்சையும் நிறைந்த காணி சொந்தம் என்று அவர்கள் பரப்பிய கதையை நம்பி மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆள்பிடிக்கும் நிலையங்களின் முன்னால் வரிசையில் நின்றார்கள்.

இதைப் போலவே 1983, 84 காலப்பகுதியில் புளொட்டினத அமைப்பாளர்களும் பின்தளக் கனவு எனற ஒரு கதையை தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டார்கள். அதாவது ஆறுமாதம் ஆயுதப் பயிற்சி அதன்பின் கைகளில் ஆளுக்கொரு ஆயுதம் , ஆயுதம் வந்தபின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட்டம். போராட்டம் முடிந்ததும் அனைவருக்கும் சமத்துவமான சமதர்மத் தமிழீழம் என்றெல்லாம் இவர்கள் செய்த பிரசாரம் இளைஞர்களுக்கு பின் தளம் செல்லும் ஆசையைத் தூண்டி அவர்களை படகுகளுக்காக கடற்கரையில் வந்து காத்திருந்து முண்டியடிக்கும்படி செய்தது.

1983 நவம்பர் மாதத்திலிருந்து 1984 டிசம்பர் வரை மட்டும் 6000 முதல் 8000 இளைஞர்கள் வரை இந்த அமைப்பாளர்களது பின்தளக் கனவில் மயங்கி படகேறி தமிழகம் சென்றார்கள். இக்காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள் கூட படகுகளில் குடாநாட்டுக்கரைகளில் இருந்து இளைஞர்கள் தமிழகம் கொண்டு செல்லப்பட்டார்கள. ஒரு படகில் 25 பேர் முதல் 30 பேர் வரையிலும் சில சமயங்களில் 40 பேர் என்ற கணக்கிலும் ஆட்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். சில சமயங்களில் படகிற்கு ஆட்கள் குறைந்த போது கடற்கரைக்கு வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்களை தமிழ் நாட்டுக்குப் போனால் சினிமா நடிகர்களைப் பார்க்கலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றிஅனுப்பிய சம்பவங்களும் உண்டு. இப்படி ஏமாற்றப்பட்டு வந்து தமிழக பயிற்சி முகாம்களில் மாட்டுப்பட்டு பின் தங்களின் கதையைச் சொல்லி அழுதவர்கள் நிறையப் பேர் உண்டு.

உண்மையில் இந்த ஆள்பிடிப்பாளர்கள் என்னதான் மாக்கிசம், மக்கள் ஜனநாயகம் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் செய்தாலும் தங்களை முற்போக்குவாதிகளாகச் சொல்லிக் கொண்டாலும் றோவின் ஏற்பாட்டின் பெயரில் இந்திய இராணுவம் வழங்கவிருந்த ஆயுதப்பயிற்சியை அடிப்படையாக வைத்தே இந்த ஆள் பிடித்தலைச் செய்தார்கள். இங்கே குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான அம்சம், இந்தியா தனது பார்ப்பனிய நலனுக்கு அப்பால் தமிழீழம் உருவாக ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிந்து கொண்டே இந்த ஆள்பிடித்தலை இவர்கள் செய்ததுதான்.

அதாவது இவர்கள் இந்த மாபெரும் ஆள்பிடித்தலை செய்த காலத்திலேயே இந்தியாவினுடைய முகமூடியை கிழிக்கும் வங்கம் தந்த பாடத்தையும் வெளியிட்டுவிட்டார்கள். (வங்கம் தந்த பாடம் என்பது இந்தியா வங்காள தேசத்தின் விடுதலைப் போர்க்காலத்தில் உதவி செய்யச்சென்று, செய்த உபத்திரங்களைச் சித்தரிக்கும் நூல்)

மறுபுறத்தில் உமாமகேஸவரனைப் பொறுத்தவரை, புளொட்டின் பார்ப்பணிய மூளைகள், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்று பிரகடனப்படுத்திய அளவுக்கு அவருக்கு ஒன்றும் மாக்சிசம் தெரியாது. வர்க்கக் குணாம்சத்தில் கூட மாக்கிசத்திற்கு எதிரான குட்டி முதலாளித்துவக் குணாம்சங்களே அவரிடம் மிதமிஞ்சி இருந்;தன. மாக்சிச முலாம் பூசிய அவரது பேச்சுக்களும் கொள்கைத் திட்டங்களும் குட்டி முதலாளித்துவ தலைமை அல்லது பார்ப்பனிய தலைமைகளுக்கு இருக்கக்கூடிய வெறும் வாய்ச் சவாடல்களாகவே இருந்தன. அவரை இயக்கத்தின் தலைவர் என்பதை விட இயக்கத்தின் இணைப்பாளர் என்று சொல்வதே பொருத்தமானது.


அதாவது மாக்சிசம் பேசுபவர்கள் மாக்சிசம் பேசுங்கள், ஆத்மீகம் பேசுபவர் ஆத்மீகம் பேசுங்கள், இந்தியாவை எதிர்ப்பவர்கள் எதிருங்கள், ஆதரிப்பவர்கள் ஆதரியுங்கள், அரஜாகம் புரிபவர்கள் அரஜாகம் புரியுங்கள், கொலை செய்பவர்கள் கொலை செய்யுங்கள், கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடியுங்கள் ஆனால் எல்லோரும் புளொட் என்ற நாடகக் கம்பனியின் நடிகர்களாக இருந்து அவரவர்களுக்குரிய பாத்திரத்தை ஒழுங்குமுறை தவறாமல் செய்யும்படி பார்த்துக்கொள்ளும் இயக்குனராக அதாவது ஒரு சமரசவாதியாகவே இருந்தார். அந்தச் சமரசவாதம் என்பது ஒரு சீரழிந்த தன்மையே. இது ஒரு விடுதலை இயக்கத்திற்கு இருக்க முடியாத ஒன்றும் கூட, இதுவே உமாமகெஸ்வரனதும், புளொட்டினதும் அழிவுக்கும் அடிப்படைக் காரணம் எனலாம்.

புளொட்டில் ஏற்பட்ட சீரழிவுகளிலும், முரண்பாடுகளிலும் மிக முக்கியமானது. தங்களது உடல்பலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்ட பிரிவினரும் மூளைபலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாளப் பழக்கப்பட்ட ஆள்பிடிக்காரர்களும் (அமைப்பாளர்கள்) இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையே இதை ஒரு உட்கட்சிப் போராட்டம் என்று சொன்னால் அது உட்கட்சிப் போராட்டம் என்ற அர்த்தத்திற்கே இழுக்காகும்.

புளொட்டின் உட்கட்சிப் போராட்டத்தின் சூத்திரதாரிகள் என்று சொல்லப்படும் கனவான் எவரும் புளொட் என்ற ஒரு தவறான அமைப்பை உருவாக்கியதில் தங்கள் பங்கு என்ன என்பதை சுயவிமர்சனம் செய்ததில்லை. அரைகுறை வைத்தியன் ஒருவன் அப்பாவி நோயாளியை தன்னுடைய வளர்ச்சிக்கு பலி கொடுப்பது போல் இவர்கள் அப்பாவி இளைஞர்களை பின்னால் இருந்து தூண்டிவிட்டு விட்டு தாங்கள் எப்போதும் நல்ல பிள்ளைகள் போல் தங்களைத தற்காத்துக்கொண்டு எட்டி இருந்து கொண்டார்கள்.

எப்போதும் தங்கள் உடல் பலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்ட அராஜகப் பிரிவினர் இந்த அப்பாவி இளைஞர்களது மனக்குமுறல்களை, கோரிக்கைகளை இயக்க விரோத நடவடிக்கைகளாகப் பார்த்து அவர்களைக் கொன்று புதைகுழிக்குள் அனுப்பிய போது மூளைபலம் கொண்ட பிரிவினர் அவர்கள் அந்தத் துர்ப்பாக்கிய நிலையை அடைவதற்கு தாங்களும் அவர்களை அமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் என்ற வகையில் காரணமாக இருந்தவர்கள் என்பதை மறைத்து தாங்கள் நடத்திய உட்கட்சிப் போராட்டத்தின் அனுபவங்களான சுயவிளம்பரப்படுத்தி சுயலாபம் தேடிக்கொண்டனர்.

உண்மையில் இந்த இரண்டு பகுதியினருக்குமிடையில் நடைபெற்ற சமூக ஆளுமையை பங்குபோடுவதற்கான பலப்பரீட்சையில் பலியாகிப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்தம் வந்த அப்பாவி இளைஞர்கள் தான்.

புளொட்டின் புகழ்பெற்ற ஓரத்த நாடு டீ முகாமில் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த ஒரு புதிய ஜட்டியை காரணமாக வைத்து அவருடன் ஒன்றாக நாட்டிலிருந்து பின்தளப்பயிற்சிக்கு வந்த ஆறு பேர் புலிகளின் உளவாளிகள் என்ற பேரில் புதைகுழிக்குள் அனுப்பப்பட்ட விடயம் என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல. இந்த அறுவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தவளைகளையும், பாம்புகளையும், குரங்குகளையும் கொன்று விஞ்ஞானப் பரிசோதனை செய்வது போல இந்த ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் புளொட்டின் ஜாதியக் கனவான்களின் உட்கட்சிப் போராட்ட பரிசோதனைகளுக்கு பலிக்கடா ஆக்கப்பட்டார்கள் என்ற அருவருக்கத்தக்க உண்மையையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.