வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்
எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.

இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது
விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண்டும்.அவர்களுடைய விமானங்கள் வான்பரப்பில் மேலெழுவதற்கு முன்னரே எங்களது ராடர்களில் அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடுவோம். என்றெல்லாம் சிறீலங்கா அரசு செய்த வந்த பரப்புரைகளை குறிப்பாக நாளாந்தம் விடுதலைப்புலிகளின் இழப்புகள் தொடர்பான அரசாங்கம்; வெளியிட்ட எண்ணிக்கைகளை தென்பகுதி சிங்கள மக்கள் நம்பி பால்சோறு பொங்கி கொண்டாடினாலும் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டே பார்த்தன.

ஆனால் ஒரே பொய்யை திருப்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையென நம்பப்பட்டுவிடும் என்கின்கின்ற கோயபல்ஸ் தத்துவத்துக் கிணங்க விடுதலைப் புலிகள் பலவீனப் பட்டுப் போய்விட்டார்கள் என்கின்ற ஒரு மாய பிம்பம் சர்வதேச மட்டத்தில் உருவாகியிருந்தது என்னவோ உண்மை தான்.

தேசத்துரோகக் கும்பல்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் ஆஹா புலியின் கதை முடிந்துவிட்டது.வடக்கின் முதலமைச்சர் நாங்கள் தான்.யாழ்ப்பாணம் வன்னிக்கான அபிவிருத்திட்டங்களுக்கான முகவர்கள் நாங்கள் தான்.இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் கோவில்களை வைத்து மோதல்களை துண்டிவிடலாம். சாதியை வளர்க்கலாம்.ஊர் பிரதேச வேறுபாடுகளை துளிர்விடச் செய்யலாம் என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டார்கள்.போராட்டம் விடுதலை எல்லாம் சாத்தியமில்லை.பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பெற்றுக் கொண்டு அவனுடைய படையினரின் இச்சiயை தீர்ப்பதற்கு இளம்; பெண்களை பிடித்தோ காட்டியோ கொடுக்கலாம்.இது தான் பிழைப்பதற்காக உன்னதமான வழி.இதைவிட்டு தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்பதெல்லாம் மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் காலத்துக்கு பொருந்தாத கோட்பாடுகள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று பெருமையடித்துக் கொண்டார்கள.;

சிறீலங்கா அரசின் கோயாபல்ஸ் பாணியிலான பரப்புரை புலத்திலுள்ள தமிழ் தேசிய பற்றாளர்களிடையேயும் ஒருவித அவநம்பிக்கைணையும் சோர்வையும் தோற்றுவித்தது.

எது உண்மை? எது பொய்;? எதை நம்புவது- எதை நம்பாமல் இருப்பது? ஏன்கின்ற ஒருவித குழப்பான மனநிலையில் தான் புலம் பெயர்ந்த சாதாரண மக்களில் பலர் இருந்தனர்.

இந்தப் பின் புலத்தில் தான் திருகோணமலை துறைமுகம் மற்றும் அங்குள்ள சிறீலங்கா கடற்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலில் முக்கியமான அம்சம் அதை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமாகும்

திருகோணமலை கடற்படைத்தளத்திற்குமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கென அதிஉயர் சக்தி வாய்ந்த ராடார்களையும் அவற்றை கையாள்வதற்கான துறைசார் நிபுணத்துவ பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த துறைமுக பாதுகாப்புக்கென சீனாவும் இந்தியாவும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியிருந்தன. விமானத் தாக்குதல்களை முறிடிப்பதற்கென்று இந்தியாவிலிலும் பாகிஸ்த்தானிலும் சிறப்புப் பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் விமானங்கள் திருமலைத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அவற்றை விரட்டிச் சென்று வானத்தில் வைத்து அழிப்பதற்கென்று திருமலைத் துறைமுகத்தை அண்டிய சீனன்குடா விமானப்படை தளத்தில் தாக்குதல் வானூர்திகளும் தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இவையெல்லாவற்றையும் விட அமெரிக்க இஸ்ரேலிய இந்திய உளவுச் செய்மதிகளின் வான் வழிக் கண்காணிப்பு இந்திய கடற்படை மற்றும் விமானப்படையினரின் ராடார் கண்காணிப்பு உதவி என்று கொழும்புத் துறைமுகத்தை விட அதி உச்சப்பாதுகாப்பு பொறிமுறைக்கு உட்பட்ட ஒரு பகுதியாக இந்த திருகோணமலை துறைமுகப்பகுதி இருந்து வருகிறது .

ஆனால் வான் புலிகள் இந்த அதி உச்சப் பாதுகாப்பு பொறிமுறையை செயலற்றதாக்கிவிட்டு சர்வ சாதாரணமாக அந்தப் பகுதிக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டுச் பாதுகாப்பாக திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.அதிலும் இரண்டு தடவைகள் 3 மணி நேர இடைவெளி விட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படி இது சாத்தியமானது என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.
முதல் தடவை நடந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டாவது தடவை தாக்குதல் நடந்தாகக் கூறப்படுவது வெறும் ஊகங்களாகவே உள்ளன.முதல் தாக்குலையே தங்களது வழமையான பாணியில் மூடி மறைக்க முடியாமல் மழுப்பிவரும் சிறீலங்கா அரச தரப்பும் அதன் படைத் தரப்பும் இந்த இரண்டாவது தாக்குதல் பற்றி முதலில் மூச்சே விடவில்லை. இரண்டாவது தாக்குதல் நடந்ததோ இல்லையோ ஆனால் மக்கள் மத்தியிலும் பல சர்வதேச ஊடகங்கள் மத்தியிலும் அது நடந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டை அது தோற்;றிவித்திருக்கிறது.இது தாக்குதலில் கிடைத்த பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
இந்தத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கும் போர் வெறி கொண்ட சிங்கள இனத்திற்கும் அவர்களது எஜமானர்களான மகிந்த ராஜபக்ஷ அன் கொம்பனிக்கும் ஒரு முக்கியமான செய்தியை சொல்லி இருக்கிறார்கள். சிறீலங்கா அரசிடம் எவ்வளவு நவீன ஆயுதங்கள் உயர் வலுக்கொண்ட எவ்வளவு கண்காணிப்பு சாதனங்கள் எத்தனை வல்லரசுகளின் படைபல- நிபுணத்துவ உதவிகள் இருந்தாலும் அவர்களின் எத்த இலக்கையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் சென்று தாக்கும் வல்லமை தங்களுக்கு எப்போதும் உண்டு என்பதே விடுதலைப்புலிகன் சொன்ன அந்தச் செய்தியாகும்.
போர் களத்தில் ஆயுத பலமும் ஆள் பலமும் அடிப்படைத் தேவைகள் என்றாலும் அதைவிட முக்கியமானது மனோபலம் என்பதையும் அதையும் விட இலட்சிய உறுதியும் சலுகைகளுக்கு மண்டியிடாத சமரசத்துக்கு இடங்கொடுக்காத வெற்றிகளைக் கண்டு மயங்காத தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத தலைமைத்துவத்தின் திட்டமிடலும் வழிகாட்டலும் முக்கியமானது என்பதையும் அந்த சிறந்த தலைமைத்துவும் எப்போதுமே தமிழர் தரப்புக்கு உண்டென்பதும் இந்தத் தாக்குதல் மூலம் வெளிப்பட்ட மற்றொரு செய்தியாகும்.
அரசியலில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சொந்த வங்கிக் கணக்கை நிரப்புவதற்காகவும் யுத்தத்தை ஒரு வியாபாரமாகவே மேற்கொள்ளும் மகிந்த அன் கொம்பனிக்கு இந்தத் தாக்குதல் உடனடியாக இரண்டுவிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓன்று சர்வதேச அளவிலான நெருக்கடி.மற்றது உள்ளுர் மட்டத்திலான நெருக்கடி.
சர்வதேச மட்டத்திலான நெருக்கடி என்கிற போது மகிந்த அரசு விடுதலைப்புலிகளை சமதரப்பாக ஏற்று பேச்சு வார்த்தை நடத்தவது என்ற முன்னைய அரசின் நிலைப்பாட்டில் இருந்து விலகி அவர்கள் மீது ஒரு தலைப் பட்சமான போரை திணித்து அந்தப் போரை அவர்களின் பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று பறைசாற்றியிருந்தது.விடுதலைப் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று சர்வதேசத்துக்கு கூறிக் கொண்டு தழிழர் தாயகப் பகுதி மீது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை செய்து வந்தது.ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மக்களை கட்டாயமாக இடம்பெயர வைப்பது மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது என்று போர் குற்றங்களாக சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட அனைத்தையும் செய்தது.இதை மூடி மறைப்பதற்கு ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்பூட்டு போட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்து தனது தரப்பு செய்திகள் மட்டும் வெளியே செல்லும்படி பார்த்துக் கொண்டது.சுருக்கமாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு சக்தி.அரசியலில் சமதரப்பாக இருந்து அவர்களுடன் பேச வேண்டிய தேவையோ அவசியமோ தங்களுக்கு இல்லை என்ற பிம்பத்தை மகிந்த அரசு சர்வதேச அளவில் கட்டமைத்து வந்தது.இன்றும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும்.அதன் பின்பு அவர்கள் ஒரு சிறு பயங்கரவாத குழுவாகத் தான் இயங்க முடியும் என்று மகிந்த அன் கொம்பனி கதை விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல் அவர்கள் இத்தனை நாட்களும் திட்மிட்டுச் செய்து வந்த பொய் பரப்புரைகளின் சாயத்தை வெளுக்கச் செய்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்பாக இனியும் கதைவிட முடியாத ஒரு நெருக்கடியையும் யுத்தத்தை நிறுத்தி இனப் பிரச்சனைக்கு தீpர்வு காண்பதற்கு விடுதலைப்புலிகளுடன் பேசியே ஆக வேண்டும் என்று சர்வதேசம் கொடுக்கும் அழுத்தத்துக்கு முகம் கொடுக்கும் நிலையையும் சிறீலங்கா அரசுக்கு இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திலும் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்திலும் ரஷ்யாவால் அண்மையில் அங்கீகரிக்கபட்ட ஒசெத்தியா மற்றும் அப்காசிய நாடுகளில் ஜோர்ஜிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைள் பற்றிய விவாதம் மேற்கொள்ளப்படும் போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் தங்களது விடுதலைக்காக போராடும் தேசிய இனங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் அரச பயங்கரவாதம் பற்றியும் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.இதற்கான முயற்சியில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிலவும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய ஒரு விவாதம் நடைபெறும் பட்சத்தில் சிறீலங்கா அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
உள்ளுரை பொறுத்தவரை கடந்த 4 வருடங்களாக யுத்தத்தை மூலதனமாக வைத்தே மகிந்த அரசு தனது அனைத்து அரசியல் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வந்தது- .சிங்கள மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி பௌத்த சிங்கள பேரினவாத வெறியை ஊட்டி வெற்றி மாயையில்-போதையில் அவர்களை கட்டுப்படுத்தி வைக்கும் மலினமான அரசியல் தந்திரத்தை கையாண்டதுடன் தங்களது அரசியல் பொருளாதார நெருக்கடிகளை யுத்தத்தை நோக்கி திசை திருப்பிவிட்டது.
நவீன ஆயுதங்கள் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடலாம் ஒடுக்கி விடலாம் என்ற மமதையை படையினருக்கு ஊட்டி வந்தது.
கிழக்கில் இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பின் சில பகுதிகளில் இருந்தும் விடுதலைப்புலிகள் தந்திரோபாய அடிப்படையில் பின்வாங்கியதை அவர்களின் பலவீனமாக சித்தரித்து அவர்களது அழிவு நெருங்கிவிட்டது என்று மகிந்த அன் கொம்பனி கொக்கரித்தது.
இந்த அரசியல் பம்மாத்துக்கள் பேரினவாதத் திமிர் இராணுவக் கொக்கரிப்புகள் எல்லாவற்றுக்கும் முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை இந்தத் துறைமுகத் தாக்குதல் மூலம் சிங்களப் போர் வெறியர்களுக்கும் சிங்களப்படையினருக்கும் மகிந்த அன் பிறதேர்சுக்கும் விடுதலைப்புலிகள் தெட்டத் தெழிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் மகிந்த அன் கொம்பனிக்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது இந்த தாக்குதலில் பின்னர் இந்தக் கொம்பனியின் நிறைவேற்ற இயக்குனர்களில் முக்கியமானவரான கோத்தபாய ராஜபக்ஷ நடத்திய ஊடகர் மகாநாட்டில் வெளிப்பட்டது.
அனுராதபுர விமானப்படைத்தள தாக்குதல் நடந்த போது இது விடுதலைப்புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. நாங்கள் படைத்துறையில் எற்கனவே நவீன தொழில் நுட்பத்தை கொண்டிருக்கிறோம். இன்னும் அதை நவீனப்படுத்தி விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்போம். இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து வெற்றிவாகை சூடுவோம் என்று திமிராகப் பதிலழித்திருந்தார்.
ஆனால் இந்தத் திருமலைத் துறைமுக தாக்குதலுக்குப் பின்னர் கருத்துரைத்த அவர் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்களை உலகின் எந்த நாட்டாலும் கண்டுபிடிக்க முடியாதென்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு கால எல்லை வகுப்பது முட்டாள் தனமானது என்றும் கூறியுள்ளதை ஒப்புநோக்கினால் இந்தத் தாக்குதல் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதாவது அவர்கள் கடந்த நான்கு வருடகாலமாக திட்டமிட்டு கட்டி எழுப்பி வந்த அரசியல் இராணுவ மூலோபாயத்தில் விடுதலைப்புலிகள் ஒரே ஒரு தந்திரோபாயத் தாக்குதல் மூலம் ஒரே இரவில் மிகப் பெரிய சறுக்கலை எற்படுத்தி விட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால் சிறீலங்காவின் மொத்தப் படைபலத்தின் அதி உச்ச திரட்சியை கூட்டி பாதுகாத்து வந்த ஒரு தளத்தை விடுதலைப்புலிகளின் வான் படை வெற்றிகரமாக தாக்குவிட்டு தங்களது தளத்துக்கு திரும்ப முடியும் என்றால் அவர்களால் குடாநாட்டிலோ வன்னியிலோ தென் தமிழீழத்திலுள்ள எந்தப்படைத்தளத்தின் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தமுடியும் என்பதும் தென் பகுதியில் உள்ள எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பதும் உணர்த்தப் பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி மகிந்த அன் கொம்பனியின் தடைகள் மூடி மறைப்புக்களைத் தாண்டி போர் களத்திலுள்ள படையினரையும் போர் வெறியில் வெற்றி மாயையில் மதிமயங்கியிருக்கும் சிங்கள மக்களையும் எட்ட ஆரம்பித்திருக்கிறது.கொழும்பு ஊடகங்களில் இந்தத் தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப்புலிகள் தற்போதைய தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு திரும்பும் போது நிச்சயமாக அதன் தாக்கத்தை அதன் உக்கிரத்தை போர் வெறி கொண்ட சிங்களம் அறுவடை செய்யும்.
அப்போது ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியபடி வன்னிக் காடுகள் மட்டுமல்லாது தென் தமீழக்காடுகளும் யாழ்ப்பாணக் குடாநாட்டு உவர்நிலங்களும் நவீன ஸ்டாலின் கிராட்டுகளாக உருவெடுத்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புதை குழிகளாக மாறும்.அன்று தமிழீழத் தனியரசு மலரும்