திங்கள், 2 பிப்ரவரி, 2009

இந்திய ஆளும் வர்கத்தின் முகத்திரையை கிழிப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமை.

சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.
ஆனால் உலகத் தமிழர்களுடைய இந்தப்பேரெழுச்சியையும் ஒன்றுமையும் நாம் துறை சார் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதன் மூலமே மேற்குலகை எம்மை நோக்கி திருப்ப முடியும்.
இந்தியாவின் சந்தைப் பொருளாதர நலனை தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு விரேதமாக மேற்குலகம் மனிதாபிமான அடிப்படையில் எமக்கு உதவுதற்கு உடனடியாக ஓடோடிவரும் என்று நாம் கனவுலகில் மிதக்கக் கூடாது.எங்களுடைய பலமும் அந்தப்பலத்ததை தக்க வைப்பக்காக நாங்கள் செய்யக் கூடிய உயாந்த பட்ச அர்ப்பணிப்பும் தான் தாயகத்திலே அல்லலுறும் உறவுகளை காபபாற்றும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.
இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.
உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல. இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றைக்கு இந்திய ஆளும் வர்க்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்றும் அகிம்மை மக்கள் நலன் மற்றும் விடுதலை உணர்வுகளை மதிக்கும் பண்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்றும் உலக மக்கள் மத்தியில் ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாயையை கலைத்து இந்திய ஆளும் வர்க்த்தின் அதிகார வெறியையும் மக்கள் விரோதப் போக்கையும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான் நமது உடனடிப் பணியாகும்.
அதற்கு தியாகி திலீபன் அன்னை பூபதி ஆகியோருடைய வரலாற்றையும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும் உலக மக்கள் அறியும் படி அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துச் சொல்லவேண்டும்.
இன்று உலக மக்களுக்கு சுலபமாக புரியும் மொழி என்கிற போது அது சினிமா மொழிதான்.எனது உலகத் தமிழர்கள் குறிப்பாக திரைப்படைத்துறை சார்ந்த தமிழர்கள் இனைந்து சர்வதேச தரத்துக்கு எந்தவித புனைவும் இல்லாமல் இந்த மூன்று விடயங்களையும் தனித்தனி பதிவுகளாக்கி படங்களாக்கி உலகப் பெரு மொழிகளில் வெளியிடவேண்டும்
இந்தியா தழுவிய அளவில் செயற்படும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் இந்திய ஆளும் வர்க்கம் ஈழத் தமிழர்களுக்கு செய்த செய்து கொண்டிருக்கிற துரோகத்தை ஏனைய மாநில மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களையும் ஈழத் தமிழப் படுகொலைக்கு எதிரான கூட்டணியில் ஒருங்கிணைக்க வேண்டும்.
அடுத்து ராஜிவ் காந்தி கொலை விடயத்தில் இந்திய ஆளும் வாக்கம் தனது பிராந்திய நலன்களுக்காக உண்மைகளை திட்டமிட்டு மறைத்த விடயத்தையும் இந்தக் கொலை தொடர்பான நியாயமான சந்தேகங்களுக்கு விட தேட முற்படாமல் விடுதலைப்புலிகளை குற்றவாளிகள் ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே செயற்பட்டதையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்த கருணாவை சிறிலங்கா அரசால் விலைக்கு வாங்க முடியும் என்றால் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக அதற்கு எதிரான சக்திகள் ஏன் ராஜிவ் கொலையாளிகளை பயன்படுத்தியிருக்க முடியாது என்ற சந்தேகம் இந்திய மற்றும் உலக மக்கள் மத்தியில் எழும்பும் படி செய்ய வேண்டும்.உலகத் தமிழர்கள் மேற்குலக பெருந் தெருக்களில் ஆர்பாட்டங்கள் பேரணிகளை செய்துவரும் அதே நேரத்தில் மேற்குலக மக்களை எம்பக்கம் ஈhப்;பதற்கான வேலைகளையும் நாங்கள் துறைசார் ரீதியில்; மேற்கொள்ள வேண்டும்.