சனி, 30 ஏப்ரல், 2011

ஐ.நா.விசாரணை கோரி சென்னையில் மாபெரும் பேரணி

இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்டதை வெளிக்கொணர ஐ.நா.பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னையில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் கோரி, நாடு கடந்த தமிழீழ தேச அரசின் தோழமை மையம் ஒருங்கிணைத்த இந்த பேரணிக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். மாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையில் இருந்து தொடங்கியது. பேரணியைத் தொடங்கி வைத்து பிரபல மீனவர் தலைவர் ஜீவரத்தினத்தின் மகள் பானுமதி பாஸ்கர் உரையாற்றினார்.


பேரணியில் நாம் தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி, தமிழ் தேச விடுதலை இயக்கம், பாரம்பரிய மீனவர் சங்கம், மேலும் பல மீனவர் அமைப்புகள், மாணவர்கள், மகளிர் அமைப்புகள் என பெரும் திரளாய் தமிழர்கள் திரண்டனர்.

ஐ.நா.விசாரணைக்கு டெல்லி அரசே உதவிடு, சர்வதேச நீதிமன்றத்தில் இனப் படுகொலையாளன் ராஜபக்சவை நிறுத்திடு, வேண்டும் வேண்டும் விசாரணை, வேண்டும் வேண்டும் இனப் படுகொலைக்கு தண்டனை, மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து, தமிழக மீனவர்களுக்கு தற்காப்பிற்காக ஆயுதம் கொடு, விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றிடு, ஈழத் தமிழர் வாழ்வுரிமையை அங்கீகரித்திடு எனபது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உழைப்பாளர் சிலை அருகே பேரணி முடிவு பெற்றது. அங்கு, சமீபத்தில் சிங்கள கடற்படையினர் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பேரணியின் நோக்கம் குறித்தும், பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தோழர் தியாகு பேசினார். அவரைத் தொடர்ந்து ஊடகவியலாளரும், இந்திய தெளஹீத் ஜமாத் அமைப்பின் எஸ்.எம். பாக்கர், மனித நேய மக்கள் கட்சி சேப்பாக்கம் வேட்பாளர் தமீம் அன்சாரி, நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக அன்பு தென்னரசன், இயக்குனர் சிபி, கவிஞர் தாமரை, பெரியார் தி.க. பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இதழாளர்கள் கா.அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, எழுத்தாளர் சூரிய தீபன், பாரம்பரிய மீனவர் சங்கத்தின் மகேஷ், ரூபேஷ் குமார், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கபடி மாறன், தென்னிந்திய மீனவர் பேரவையின் தலைவர் ஜெயபாலையன், இந்திய மீனவர் சங்கத் தலைவர் தயாளன், மீனவர் மகளிர் அமைப்பின் தலைவர் சமுத்திரா தேவி உள்ளிட்ட பலர் பேசினர்.

GTV NEWS 30.04.2011_12.00 MIDI

போரின் இறுதி கட்டத்தில் சிக்கியிருந்த மக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த சாட்சிகளின் வார்த்தைகள் கலங்கடிக்கிறது: பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்னெஸ்டி கோரிக்கை

இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டத்தில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளதை ஐ.நா.நிபுணர் குழு உறுதி செய்துள்ள நிலையில்இ அதன் பரிந்துரையின்படி பன்னாட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்துமாறு ஐ.நா.பொதுச் செயலருக்கு சர்வதேச பொது மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி) கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபையின் ஆசியா - பசிபிக் இயக்குனர் சாம் ஜாரிஃபிஇ "போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதை தடுத்து வந்த சிறிலங்க அரசின் மறைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வண்ணம்இ அந்த போரின் உண்மை நிலையை ஐ.நா.நிபுணர் குழு வெளிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

"இலங்கை போரில் இரு தரப்பினரும் செய்த குற்றங்களை வெளிக்கொணர யாருக்கு எதிராக யார் தீங்கு செய்தனர் அதற்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைக்க வேண்டும்" என்று கோரியுள்ள ஜாரிஃபி போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை திட்டமிட்டே சிறிலங்க அரசு குறைத்துக் காட்டியது என்பதும் அவர்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளை சிறிலங்க அரசு தடுத்துள்ளது என்பதும் ஐ.நா.நிபுணர் குழு ஆய்வில் உறுதியாகிவுள்ளது என்று கூறியுள்ளார்.

"போரின் இறுதி கட்டத்தில் சிக்கியிருந்த மக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த சாட்சிகளின் வார்த்தைகள் கலங்கடிக்கிறது. அவர்கள் மரண பயத்தில் இருந்திருக்கிறார்கள் மரணமும் காயமும் அவர்களை பாதித்துள்ளது உண்ண உணவு குடிக்க நீர் மருத்துவ வசதி என்று எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. போர் நடந்த பகுதியில் இருந்த தப்பி வந்தவர்களை இராணுவம் சிறைபிடித்து மோசமான நிலையில் வைத்திருந்தது. விசாரணை ஏதுமின்றி பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நியாயம் கிடைப்பது தடுப்பது நியாயமாகுமா?" என்று ஜாரிஃபி கேட்டுள்ளார்.

காங்கிரஸ் அரசின் கள்ள மவுனம்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும் விவகாரமாகட்டும் அல்லது இலங்கை தமிழர்களை சிங்கள இராணுவம் சிதைக்கும் விவகாரமாகட்டும், இப்போது இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமான பின்னராகட்டும், தமிழர்கள் விடயத்தில் எதுவானாலும் கள்ள மவுனம் சாதிப்பதே மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.

2008 மற்றும் 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய இறுதிக் கட்டபோரின்போது அப்பாவி பொதுமக்கள் மீதும்,பச்சிளம் குழநதைகள் மீதும் எரிகுண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுவதை பார்த்து, போரை நிறுத்தச் சொல்லுமாறு தமிழகம் பதறி துடித்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தமிழகத்திற்கும், கொழும்புக்குமாக அனுப்பி வைத்து போக்கு காட்டியபடியே கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.

2006 ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் 40 க்கும் 40 இடங்களை திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியபோது, அவர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள் சோனியா காந்தி மனதுக்குள் இப்படி ஒரு பழி தீர்க்கும் உணர்வு பதுங்கி கிடந்திருக்கும் என்று! கூடவே காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கி வாக்கு சேகரித்து கொடுத்த கருணாநிதி இப்படி நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி இலங்கை தமிழர்களை கொல்ல துணை போவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்!

ஆனால் 2006 தேர்தலில் வெற்றிபெற்றதுமே சோனியா தெளிவாகவே தனது மனதுக்குள் பூட்டிவைத்திருந்த பழி தீர்க்கும் படலத்தை அரங்கேற்ற திட்டமிட தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது விருப்பத்தை நிறைவேற்ற சோனியா வீட்டு பூஜாரிகள் செய்த முதல் காரியம், எங்கோ ஒரு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தேடி பிடித்து அழைத்து வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆக்கியதுதான்.

இந்த நாராயணன், ஆரம்ப காலம் தொட்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு நபர்.1987- 1990 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டதற்கு,முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.எம்.கே.நாராயணன் இந்திய உளவுத்துறையான 'ரா'வுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த இவரது தவறான ஆலோசனையின் பேரில்தான், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகள் மீது வலுக்கட்டாயமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திணிக்க காரணமாக இருந்தவர்.

அவ்வளவு ஏன்... இவர் ஒரு விடுதலைப் புலி எதிர்ப்பாளர் என்பதை விக்கிலீக்ஸே அம்பலப்படுத்தியுள்ளது.அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும்,சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசி என்றும், இலங்கை போரில் ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு,போரில் அவர் நடு நிலை வகிக்கவில்லை என தெற்காசியா விவகாரங்களுக்கான அமெரிக்க அயலுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் ஓ பிளேக், தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்ததை கைப்பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

இதன் மூலம் நாராயணன் எந்த மாதிரியானவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இப்படி நாராயணன்கள், சிவசங்கர மேனன்களின் துணையோடு,இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இந்திய காங்கிரஸ் அரசு,இந்திய தமிழர்களுக்காவது உண்மையானதாக இருக்கிறதா அதுவும் இல்லை.அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்று வீசும்போதெல்லாம்,கள்ள மவுனம் கடைபிடிப்பதே வாடிக்கையாகிவிட்டது.

அண்மையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இனிமேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.

ஆனால் அடுத்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் இந்தியாவிட தோற்றுபோனதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை மிகக் கொடூரமாக கொன்று வீசினர் இலங்கை கடற்படையினர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது அவ்வளவு வீராவேசமாக முழங்கிய சோனியாவிடமும், தற்போது அதே கள்ள மவுனம் - தேர்தல்தான் முடிந்துவிட்டதே!

இதையும் மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று அழுத்தம் அதிகமானால் "இனி இதுபோல் நடக்காது: விசாரணை நடத்துகிறோம், வருத்தமளிக்கிறது, கவலை அளிக்கிறது..." என்றெல்லாம்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமும், அதன் அமைச்சரும் கூறுவார்களே தவிர, தவறியும் அவர்கள் வாயிலிருந்து கண்டனம் என்ற வார்த்தையோ அல்லது எச்சரிக்கையை வந்துவிடாது.

அதுவே ஆஸ்ட்ரலியாவில் ஒரு வட நாட்டு இந்தியர் தாக்கப்பட்டாலோ, அல்லது அமெரிகாவில் ஒரு சீக்கியர் அவமதிக்கப்பட்டாலோ சிலிர்த்துக்கொண்டு எழும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஒரு சுண்டைக்காய் நாட்டு கடற்படையினரால் கொல்லப்படுவது தமிழன் என்றால் எளக்காரமாகவும், ஏளனமாகவும் நடந்துகொள்ளும்.

இப்படியான ஒரு நிலையில்தான், இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமாகி அதனை ஐ.நா. நிபுணர் குழுவும் ஒப்புக்கொண்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்னமும் அதே கள்ள மவுனத்தை கடைபிடித்துக் கொண்டே, சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கான கமுக்கமான வேலைகளை தொடங்கியுள்ளது.

இலங்கை மீதான போர்க் குற்றத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், முதலில் அதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும்.ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே உறுதிபடுத்தியுள்ளார்.

ஆனால் இப்போதும் அதே கள்ள மவுனம்தான் இந்திய காங்கிரஸ் அரசிடம். என்ன செய்யப்போகிறது தமிழகம்?
nanry webduniya tamil

புதையலில் கிடைத்த ஐந்தரை கிலோ தங்கத்தினாலான கிரீடம், தங்க மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
புதையலொன்றில் இருந்து கிடைத்த ஐந்தரைக் கிலோ எடைகொண்ட தங்கத்திலான கிரீடம் மற்றும் தங்க மாம்பழம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறையின் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தனியிலையைக் கொண்ட காம்புடனான தங்க மாம்பழம் என்பன உள்ளடங்கிய பிரஸ்தாப தங்கப் புதையல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயினும் அவை சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்டதா அல்லது தங்க முலாம் பூசப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கக் கிரீடமானது ஒரு கிலோகிராமும் நானூற்றி எண்பது கிராம்களும் எடைகொண்டுள்ளது. தங்க மாம்பழம் மூன்றரைக் கிலோகிராம் அளவிலான எடைகொண்டது. தற்போது அவையிரண்டும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பான் கி மூன் அங்கத்துவ நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளிக்கவில்லையென்பதனால் அங்கத்துவ நாடுகளிடம் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கொண்ட நாடுகளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அதி தீவிர கவனம் எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அங்கத்துவ நாடுகளின் பதில் தமக்கு தேவை என்றும் பான் கி மூன் கூறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் நேர்ஸ்கி கூறியுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல்

ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் தலைவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் அரசுத்தலைவர். மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து டுப்லின் நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மகிந்தவை போர் குற்றவாளி என அறிவித்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கும்படி இந்திய ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரை மனுதாரர் தனது மனு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழர்கள் அன்றி வேறு இனத்தவர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் இந்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழர்கள் பிரச்சினையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை எனவும் மனுதாரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: சிறிலங்காவினது அதிகாரிகள் 'கைதுசெய்யப்படமுடியும்'

சிறிலங்கா தொடர்பான ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கையின் விளைவாக சிறிலங்காவினது அலுவலர்கள் கைதுசெய்யப்படமுடியும் என சட்ட வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.

ஐ.நா அறிக்கையின் விளைவாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் சிறிலங்காவினது அதிகாரிகள் கைதுசெய்யப்படவேண்டும் எனக்கோரி அவர்களுக்கு எதிரான பிடியாணையினைப் பெறும் முனைப்புக்களில் தொடர்புடைய தரப்புக்கள் ஈடுபடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

ஐ.நாவினது அறிக்கை வெளிவந்த பின்னர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் சிறிலங்காவினது தலைவர்களுக்கு எதிரான அந்தந்த நாடுகளில் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் குறித்த சில அமைச்சர்கள் அமெரிக்ககக் குடியுரிமையினைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"ஆம், பிற நாடுகளில் குடியுரிமையினைப் பெற்ற இந்தத் தலைவர்கள் அந்தந்த நாடுகளில் வைத்துக் கைதுசெய்யப்படலாம். ஆனால் அந்தந்த நாடுகளிலுள்ள இராசதந்திர செயன்முறைகளே இதனைத் தீர்மானிக்கும்" என மகிந்தவின் நிர்வாகத்தில் குறுகிய காலம் அமைச்சராக இருந்தவரும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினால் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் வாதிடுகிறார்.

"இது சட்டத்திற்கு முரணானதாக இருந்தபோதும், வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினை ஐ.நா செயலாளர் நாயகமே வெளியிடும் அளவிற்கு இந்த வல்லுநர்கள் குழு அதிகாரத்தினைக் கொண்டிருக்கிறது" என்கிறார் விஜயதாச ராஜபக்ச.

சிறிலங்காவிற்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் அதிகாரம் எதுவும் தன்னிடமில்லை என்பதை செயலாளர் நாயகமே ஏற்றுக்கொண்டிருப்பதை விஜயதாச நினைவுபடுத்துகிறார்.

"றோம் சட்டத்தில் சிறிலங்காவும் ஒரு தரப்பாக இல்லை என்பதால் சிறிலங்காவிற்கு எதிரான விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது" என ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் அதிகம்பேர் சிறிலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகவே பலியானதாகவும் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில் அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என வல்லுநர்கள் குழு விரும்புகிறது.

சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கையினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டுமெனில் பாதுகாப்பு சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என இந்தப் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் அனைத்துலக விசாரணைக்கு முகம் கொடுக்க அணியமாக உள்ளனர்: கே.பி.றெஜி

ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில் சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தமிழர் தாயகத்தில் நடந்த கொடுமைகள் பதிவாக்கி வெளியிட்டமை பாராட்டத்தக்கது. தமிழ் மக்கள் மத்தியில் தமக்காக நீதி கிடைக்கும் அவையாக அனைத்துலக சமூகம்இருக்கின்றது என்ற நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளது. அதே வேளை ஐக்கிய நாடுகளும் அனைத்துல சமூகமும் தாம் ஏற்கனவே விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஐ. நா மற்றும் அனைத்துலக சமூகம் மீண்டும் கடந்தகாலத் தவறுகளைச் செய்யக்கூடாது போரின் இறுதிக்கட்டங்களில் தமிழர் தரப்பிற்குப் பெரும் அழுத்தங்களை ஐக்கிய நாடுகளும் அனைத்துலக சமூகமும் இந்தியாவும் செலுத்தின. மேலும்இ சிறிலங்கா அரசின் இனவாதப்பரப்புரைகளைச் செவி மடுத்தன. இதனால் பொதுமக்களின் உயிர் இழப்புக்களைத் தடுக்கமுடியாதநிலையில் ஐக்கிய நாடுகள் சபை இருந்தது. இதனால் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டனர். இதனை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதிக்கட்டங்களிலும் அதன் பின்னரும் அனைத்துலகம்இ இந்தியாஇ ஐக்கிய நாடுகள் சபைபக்கசார்பாக நடந்து கொண்டது போலத் தற்போதும் நடந்து கொள்ள மாட்டாது என எதிர்பார்க்கிறோம். சுதந்திரமானதும் பக்க சார்பில்லாததுமான அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றின் மூலம்விசாரணைகள் தொடங்கப்பட வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் தமிழர்களுக்கான நீதி கிடைப்பதுடன் எதிர்காலத்தில் தமிழர் தாயகத்தின் பாதுகாப்பிற்கும் வழிபிறக்கும்.

விடுதலைப்புலிகள் அனைத்துலக விசாரணைக்கு முகம் கொடுக்க அணியமாக உள்ளனர்:

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் இது தொடர்பாகஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில்எதிர்கொள்ளவே விரும்புகின்றார்கள்.

போரின் இறுதிக் கட்டங்களில் பொதுமக்களை அனைத்துலகப் பாதுகாப்புடன் ஒப்படைக்க அல்லதுஅவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல விடுதலைப்புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத்தின் உறுதிமொழி ஒன்றினைக் கேட்டிருந்தார்கள். ஆனால்அனைத்துலகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சிங்கள அரசிடம் பொதுமக்களைச்செல்ல அனுமதிப்பதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை விடுதலைப்புலிகள் முன்பே அறிந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தது போலத்தான் இறுதியில் எல்லாம் நடந்தது.விடுதலைப்புலிகள் ஏன் மக்களைச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் தயக்கம் காட்டினார்கள் என்பதற்கான காரணத்திற்கும் நியாயத்திற்கும் அதன் பின்னர் சிங்கள அரசு அவர்களைக் கொடூரமாக நடத்திய விதம் சாட்சியாக இருக்கின்றது.

தமிழர் தாயகத்தைப புலம்பெயர் மக்களால் கட்டி எழுப்ப முடியும்:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கவும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்யும் இயல்பு நிலை தோற்றுவிக்கப்படவேண்டும். அனைத்துலக சமூகத்தின் ஈடுபாட்டோடு இயல்பு நிலை தோற்றுவிக்கப் படவேண்டும். அதன் பின்னர்புலம்பெயர்மக்களும் தாயக மக்களும் தமது பிரதேசங்களைத் தாமாகவே கட்டி எழுப்புவார்கள்.அப்படியான சூழலில் சனநாயக முறையில் தமக்கு என்ன தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிப்பார்கள். இதனை அடைய அனைத்துலக சமூகம் வழிசமைக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்:

சிறிலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு சூழலிலும் தமிழ் மக்களிற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.இப்போது இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்த தமிழ் இனம் அனைத்லுகத்திடம் நீதியை வேண்டிநிற்கின்றது. பாரபட்சம் அற்ற சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினைக் கேட்டு நிற்கின்றது.வடக்கு கிழக்கில் சிங்கள அரசின் இராணுவ ஆட்சியினை நீக்கி அங்கு அனைத்துலக கண்காணிப்பின் கீழ் ஓர் இயல்பு நிலையினை உருவாக்குவதற்கு உதவுமாறு அழைப்பு விடுக்கிறது.

தமது பிரதேசத்தைத்தாமே கட்டி எழுப்பக் கூடிய வாய்ப்பு ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றது. தமக்கு எவ்வகையான தீர்வுதேவை என்பதனைத் தமிழ் மக்கள் தீர்மானிப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்தித் தரப்படவேண்டும்.

இவற்றை அனைத்துலகம் செய்து கொடுக்கத் தவறுமேயானால் அல்லது அசட்டையாகஇருக்குமேயானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் எதிர்காலம் பேரிழப்புக்கு உள்ளாகிவிடும். இதனையே 2008 இலும் 2009 இலும் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தெரிவித்திருந்தோம்.

தமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பு முழுமையாகத் தேவை:

நிபுணர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த உலகத் தமிழர்களின் அழுத்தங்கள் அவசியம். குறிப்பாகதமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பே இப்போது அதிகம் தேவைப்படுகின்றது. தமிழ் நாட்டு மக்கள்இ இந்தியா மற்றும் உருசிய நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க முடியும்.எட்டுக் கோடி மக்களின் ஒருமித்த குரலை எந்தவொரு அரசும் இலகுவாகப் புறக்கணிக்க முடியாது.

ஆகவே தமிழகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்இ ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பும்அழுத்தங்களும் இந்தியாவின் தீர்மானத்தினை நிபுணர் குழுவிற்குச் சாதகமாக எடுக்க வைக்க வேண்டும்.இந்திய அரசு மென்மேலும் ஈழத்தமிழர்களுக்குத் கடும்துன்பம் விளைவிப்பதனை நிறுத்தி நேர்மையுடன்செயற்படவேண்டும்.

புலம்பெயர் வாழ் மக்களே:

எமது இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும்இ எமது இனம் இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையே சாட்சி. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகவே பார்க்க முடியும்.

ஆகவே இந்த ஆவணத்தை மையமாக வைத்து எம் இனத்திற்கு நீதியும் விடுதலையும் வேண்டி அனைத்துலக ரீதியாக வெகுசன எழுச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் சம்பந்தப்பட்டோர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.

நன்றி

கே.பி.றெஜி

குற்றாலம் மெயினருவியில் நடமாடும் மர்ம உருவம்?: சுற்றுலா பயணிகள் பீதி

குற்றாலம் மெயினருவி பகுதி கடந்த ஒரு வார காலமாக அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள அருவியை மர்ம உருவம் கடப்பதாக பரவிய தகவல்தான் இந்த பரபரப்புக்கு காரணம்.

ஆஜானுபாகுவான தோற்றத்தில் சிம்ப்பன்சி வடிவில் தோன்றும் இந்த மர்ம உருவம் சில வினாடிகளில் மறைந்து விடுகிறது என்றும், சில நேரங்களில் அருவியின் மையப் பகுதியிலும், சில வேளைகளில் அருவியின் மேல் பகுதியிலும் இது தெரிவதாகவும் புரளி கிளம்பியது.

கடந்த 25ம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு குற்றாலத்திற்கு வந்த தென்காசியைச் சேர்ந்த ஜோதிடர் ராஜகுரு என்பவர் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்துள்ளார். எதோச்சையாக அவர் குடும்பத்தினரை அருவி முன்பு நிற்கவைத்து படம் எடுக்கும் போது மர்ம உருவம் செல்போனில் பதிவாகி உள்ளது. இதை கவனித்த ராஜகுரு மயங்கி விழுந்து விட்டாராம்.

மர்ம உருவம் குறித்து ஜோதிடர் ராஜாகுரு கூறியதாவது,

தற்ச்செயலாக நான் செல்போனில் படம் எடுத்த போது அந்த உருவம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் நான் மயங்கி விழுந்து விட்டேன். அருவிப் பகுதியில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக முன்பு கூறுவார்கள். எனவே, இதுவும் ஆவியாக இருக்கலாம். நான் மட்டுமின்றி இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இந்த உருவத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு புறம் மர்ம உருவம் நடமாட்டம் பற்றிய தகவலால் குற்றாலம் அருவியில் குளிக்க வருவோர் பீதியில் உள்ளனர். மறு புறம் மர்ம உருவத்தை பார்க்கும் நோக்கில் ஏராளமானோர் குற்றால அருவிக்கு படையெடுத்த வண்ணமும் உள்ளனர்.

திருச்சியில் சூறாவளி: தண்டவாளத்தில் மரம் விழுந்து மின் துண்டிப்பு-ரயில்கள் நிறுத்தம்-பயணிகள் தவிப்பு

திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

இதில் நேற்றிரவு திருச்சி அருகே லால்குடி காட்டூர்-புளியம்பட்டி இடையே மழையால் மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதில் ரயில் பாதையில் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

திருச்சியிலிருந்து செல்லும், திருச்சிக்கு வரும் பல ரயில்கள் நள்ளிரவு முதல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் விடப்பட்டன.

தென் மாவட்டப்பகுதியில் இருந்து கிளம்பிய ரயில்கள் மயிலாடுதுறை மெயின் லைன் வழியாக மாற்றி விடப்பட்டன. இதனால் இந்த ரயில்கள் சென்னை போய்ச்சேர பல மணி நேரம் தாமதமாகும்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15க்குப் பதிலாக 9 மணிக்கு மதுரை வந்ததடைந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வந்தடைந்தது.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கிளம்பி, மினசாரம் துண்டிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. இந்த ரயிலை டீசல் என்ஜின் மூலம் சென்னைக்கு இழுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இது வழக்கமாக காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இன்று இந்த ரயில் பிற்பகல் 3 மணிக்குத் தான் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல விழுப்புரம் குள்ளம்பாடி பகுதியிலும் கன மழையால் ரயில் என்ஜின்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மங்களுர் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேர்ந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

மேலும் சென்னையில் இருந்து புறப்பட்ட தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.

இரவு முதல் தீவிரமாக பணியாற்றிய ரயில்வே என்ஜினியர்கள் முயற்சியால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.

கூட்டமைப்புடனான பேச்சுக்குழுவில் இருந்து மூத்தஅமைச்சர் ரட்ணசிறியை நீக்கினார் மகிந்த

சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுக்கள் நேற்று நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது மாகாணங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் பட்டியல் மற்றும் பொதுவான பட்டியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரப்பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டதுடன் தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசதரப்புப் பிரதிநிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப்பட்டியல் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற தமது நிலைப்பாட்டை அரச தரப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், ஆனால் அதை முழுமையாக ஏற்க முடியாது என்று அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவ்வாறாயின், பொதுப் பட்டியலில் அதிக அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று தாம் கூறியதாகவும், அதற்கு அரசதரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது இந்த விவகாரம் குறித்து மீண்டும் மே 12ம் நாள் பேசுவதென்று இரு தரப்புகளும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளின் விபரங்களை விரைவில் தருவதாக அரசதரப்பு மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், மே 12ம் திகதிக்கு முன்னதாக அது கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும், அரசதரப்பில் அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் பங்கேற்கவில்லை.

கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜின் வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் அரசதரப்புக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசதரப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்புடன் கடைசியாக நடத்தப்பட்ட சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முடிவுக்குள் முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலை

தடுப்பு முகாம்களில் எஞ்சியுள்ள 4092 முன்னாள் போராளிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சின் செயலர் திசநாயக்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“இறுதிக்கட்டப் போரின்போது போது 11,898 முன்னாள் போராளிகள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 6528 பேர் இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களுக்கு 9 புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

அனைவரையும் ஒரேதடவையில் விடுவிக்க முடியாது. கட்டம் கட்டமாகவே விடுதலை செய்ய முடியும்.

அடுத்த மாதம் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

தற்போது தடுப்பிலுள்ள 4092 முன்னாள் போராளிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விடுவர்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் பிளேக் கொழும்பு வருகிறார் - மகிந்தவை சந்திக்கும் திட்டமில்லை

தெற்கு, மத்திய ஆசியப் பகுதிகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

மாலைதீவு மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை அவர் ஏப்ரல் 30 தொடக்கம் மே 5 வரை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 3 ம் நாள் சிறிலங்கா செல்லும் பிளேக் இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார்.

இதன்போது அவர், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

யுஎஸ் எய்ட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக றொபேட் ஓ பிளேக் கலந்துரையாடவுள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்று உள்ளூர்த் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு வரும் பிளேக்கை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தலைமை தொடர்பாடல் அதிகாரி சரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபரை பிளேக் சந்திக்கமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான முழுஅளவிலான விசாரணை நடத்த இந்த பயணத்தின் போது சிறிலங்கா அரசிடம் பிளேக் வலியுறுத்துவார் என்று அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிளேக் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு இந்தமாத முற்பகுதியிலேயே திட்டமிட்டிருந்தார்.

ஆனால் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கூறி அவரது வருகையை சிறிலங்கா அரசு பிற்போடச் செய்திருந்தது.

அதேவேளை, பிளேக்கின் கொழும்பு வருகைக்கு சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்ற அறிக்கையின் பின்னரான சிறிலங்காவின் நிலைமைகளை உளவு பார்க்கவே அவர் கொழும்பு வரவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா வியூகம் - வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கொழும்பில் இரகசிய ஆலோசனை

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா, ஐ.நா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை.

அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதால் அதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கத் தூதுவரின் அழைப்பின் பேரிலேயே அதில் தான் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அறிக்கையை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, செரின் சேவியர், வெலியமுன, சுதர்சன குணவர்த்தன, சுனிலா அபேசேகர ஆகியோரும். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நிபுணர் குழு அறிக்கை: ஜனாதிபதியை கைது செய்ய முடியும். ஜனாதிபதி சட்டத்தரணி

ஐக்கியனாடுகள் அறிக்கையினை வைத்து சிறிலங்கா தலைவர்களை கைது செய்ய முடியும் என இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி விஜெதாஸ பிபிசி இற்கு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது அதனை தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினை வைத்து வெளினாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளினாடுகளுக்கு செல்லும் வேளை கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழு அறிக்கை கொண்டுள்ளது எனவும் பிபிசி சிங்கள சேவைக்கு கூறியுள்ளார்.
இந்த அடிப்படையில் சிறிலங்கா அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் வெளினாடுகள் செல்வது சவாலானதொன்றாகவே காணபப்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ கூறியுள்ளார்

பொய்க்குமேல் பொய் கூறி சிறிலங்கா நீண்டகாலம் தப்பிக்க முடியாது - த எகொனொமிஸ்ட்

சிறிலங்கா பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது. மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது.
போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்பதற்கு இலட்சக்கணக்கான பொதுமக்களே சாட்சி. அவர்கள் உள்ளூர் விசாரணைக்குழு முன் தோன்றி தங்கள் கண்ணீர் கதைகளை கூறியுள்ளார்கள். இதனைவிட என்ன ஆதாரம் தேவை.
சிங்கள அரசாங்கம் மிருகத்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியுள்ளது. பொதுமக்களைக்கொன்று உள்ளது. பாதுகாப்பு வலையத்தில் மக்கள் எண்ணிக்கையினை குறைத்து பொய் கூறியது. இதெல்லாம் கண்முன் சாட்சி. ஆகவே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் பொய்களைகூறி தப்பித்துவிடலாம் என நினைப்பது குறுங்கால அரசியல் நோக்கம். இவ்வாறு கூறியுள்ளது எகொனொமிஸ்ட்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்! கோர்டன் வைஸ் செவ்வி

அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதையுமே முன்னாடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயமென கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவிற்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ்.
நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத் தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என நோர்வேயின் Aftenposten நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோர்டன் வைஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அவைக்கு இல்லையெனில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக அதற்கான முனைப்பினை மேற்காள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக Aftenposten நாளிதழில் நேற்று (28.04.2011) வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவத்தினை இங்கே தருகின்றோம்:
சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்கிறார்; சிறிலங்காவிற்கான முன்னாள் ஐ.நா பேச்சாளர் கோர்டன் வைஸ். அண்மைய ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் முடிவுகளும் அவரது கூற்றினை உறுதிப்படுத்துகின்றன.
2009 இன் இறுதி மாதங்களில் போர்க் களத்தில் நடந்தேறியவை தொடர்பான நம்பகமான தகவல்களை ஐ.நா நிபுணர் குழு அறிக்கை கொண்டிருப்பதாக இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற காலம் வரை சிறிலங்காவிற்கான ஐ.நா பேச்சாளராக கடமையாற்றிய கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
பத்து மாதங்களாக ஆவணங்கள் பெறப்பட்டும், சாட்சிகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் பெறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று சுயாதீனமான நீதித்துறை நிபுணர்களினால் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது
சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் பெருமளவு குற்றச்சாட்டுகள் வெற்றி பெற்ற தரப்பான அரசாங்கத் தரப்பை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினாலேயே பெருமெண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
330 000 வரையான ஏழைத் தமிழர்கள் வட பிரதேசத்தின் குறுகிய நிலப்பரப்பு ஒன்றுக்குள் ஒதுங்கியிருக்க, அரசாங்கப் படைகள் அவர்கள் மீது கனரக ஆட்லறிகள் மூலம் தாக்குதல்களை நடாத்தியது. அத்தோடு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோகப் பாதைகள் மீதும் அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் படைகள் பொதுமக்களையும் விடுதலைப் புலிப் போராளிகளையும் படுகொலை செய்துள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அதனைக் கண்டித்தும் உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமை மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர்ப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்துள்ளனர். வெளியேற முயற்சித்த மக்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. இறுதிக் கட்டப் போரில் நடந்தேறியவை தொடர்பாக நான் எவ்வாறான தீர்மானத்தைக் கொண்டிருந்தேனோ, அதே தீர்மானத்திற்கே நிபுணர் குழுவும் வந்துள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத் தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் இலங்கைத் தீவின் இன முரண்பாடு தொடர்பான தனது நூலை கோர்டன் வைஸ் வெளியிட உள்ளார்.
இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகள் வெற்றி கண்டுள்ளது.
இது சிறிலங்காவின் 'Srebrenica -தருணம்' எனக் கூறும் வைஸ் 1995 இல் அங்கு 8000 பொஸ்னிய மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை மேற்கோள் காட்டுகின்றார்.
இந்த ஒப்பீடு சரியானது. ஏனெனில் பொது மக்களை அழிப்பது தொடர்பான முடிவு இரண்டு இடங்களிலும் (Srebrenica - சிறிலங்கா) மூடிய கதவுகளுக்குள் எடுக்கப்பட்டது. அதே போல இரண்டு இடங்களிலும் அழிவுகளைத் தடுக்க அனைத்துலக சமூகம் தவறிவிட்டது என்கிறார் அவர்.
எனவே தீர்மானமான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டாக வேண்டும். எமக்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் இந்த அறிக்கை தருகின்றது. எதையுமே மேற்கொள்ளாதிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது எவ்வாறு நியாயமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றார் வைஸ்.
அனைத்துலக விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு ஐ.நா அறிக்கை, செயலாளர் நாயகம் பான் கீ மூனை கோரியுள்ளது. அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என அதற்குப் பதிலளிக்கையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் அதற்கான செயலை முன்னெடுக்க வேண்டுமென வைஸ் தெரிவித்துள்ளார் என 'ஆப்தன்போஸ்தன்' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
nanry pongutamil inayam

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

கேரளாவில்...

கேரள தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இடதுசாரி கூட்டணி 45 முகல் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 வரையிலான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாமில் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இரண்டுமே சமபலத்தில் உள்ளன. இங்கு ஆட்சியை நிர்ணயிக்கப் போவது பாஜகதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTV NEWS 29.04.2011 NOON 12.00

wedding of Prince William and Catherine Middleton 9

wedding of Prince William and Catherine Middleton8

wedding of Prince William and Catherine Middleton 7

wedding of Prince William and Catherine Middleton6

wedding of Prince William and Catherine Middleton 6

wedding of Prince William and Catherine Middleton 5

wedding of Prince William and Catherine Middleton 4

wedding of Prince William and Catherine Middleton 3

wedding of Prince William and Catherine Middleton 2

wedding of Prince William and Catherine Middleton 1

wedding of Prince William and Catherine Middleton

த‌மிழ‌ர்க‌ளே ‌வீ‌தி‌க்கு வாரு‌ங்க‌ள்‌: ‌கிரு‌‌ஷ்ணசா‌மி அழை‌ப்பு

ராஜப‌க்சவை த‌ண்டி‌க்க ஐ.நா. அ‌றி‌க்கை‌யி‌ன்படி உடனே ‌விசாரணை மே‌ற்கொ‌ள்ள இ‌ந்‌தியா எ‌வ்‌வித‌த்‌திலு‌ம் மு‌ட்டு‌க்க‌ட்டையாக ‌நி‌ற்க கூடாது என எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்யவு‌ம், ஐ.நா.‌வி‌ன் நடவடி‌க்கையை து‌ரித‌ப்படு‌த்தவு‌ம் த‌மிழ‌ர்க‌ளே ‌வீ‌தி‌க்கு வாரு‌ங்க‌ள் எ‌ன்று ‌பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் கிரு‌ஷ்ணசா‌மி அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சுய ‌நி‌ர்ணய உ‌ரிமை‌க்கான போரா‌ட்ட‌த்தை அரை நூ‌ற்றா‌ண்டு கால‌த்‌தி‌ற்கு மேலாக ஜனநாயக ‌ரீ‌தியாகவு‌ம், ஆயுத‌ம் ஏ‌ந்‌தியு‌ம் நட‌த்‌தி வரு‌கிறா‌‌ர்க‌ள். ஈழ‌த்த‌மி‌ழ் ம‌க்களுடைய ‌நியாயமான இ‌ப்போரா‌ட்ட‌ங்களு‌க்கு‌ம் அவ‌ர்களது ‌விடுதலை‌க்கு‌ம் த‌மிழக‌த்‌தி‌லிரு‌ந்து தொட‌ர்‌ந்து ஆதரவு‌க் குர‌ல் எழு‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ந்‌திரு‌க்‌கிறது. எ‌னினு‌ம் ‌மிக மு‌க்‌கியமான காலக‌ட்ட‌ங்க‌ளி‌ல் த‌மிழக‌த்‌தில் ஒ‌ன்று ‌திர‌ண்ட போரா‌ட்டமாக அது அமை‌ந்த‌தி‌ல்லை.

கு‌றி‌ப்பாக 2009ஆ‌ம் அ‌ண்டு ஈழ‌த்த‌மி‌ழ் ம‌‌க்களு‌க்கு எ‌‌திராக இல‌‌ங்கை அரசு ச‌ர்வதேச உத‌வியுட‌ன் கடு‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தியபொழுது போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்வத‌ற்கு ஈழத‌்‌தி‌ல் இரு‌ந்து எழு‌ந்த அபய‌க்குரல‌் த‌மிழக‌த்‌தி‌ல் அர‌சியலு‌க்கு அ‌ப்பா‌ற்ப‌ட்டு செ‌ன்றடைய‌‌வி‌ல்லை. மு‌‌ள்‌ளிவா‌ய்‌‌க்கா‌லி‌ல் 30 ஆ‌யிர‌ம் பே‌ர் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டது, மரு‌த்துவமனைக‌ள் ‌மீது கு‌ண்டு‌வீ‌சி தா‌க்‌கியது, ‌விசாரணை‌யி‌ன்‌றி வெ‌ள்ளைவே‌ன்க‌ளி‌ல் த‌மி‌ழ் இளைஞ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்டு காணாம‌ல் ஆ‌க்க‌ப்ப‌ட்டது, ‌ஒரு ‌சில ம‌ணி நேர‌ங்க‌ளி‌ல் 14 ஆ‌யிர‌ம் அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் கட‌ல் ‌நீரு‌க்கு‌ள் அமு‌க்‌கி கொ‌ல்ல‌ப்ப‌ட்டது போ‌ன்ற ‌‌நிக‌ழ்வுக‌ள் அனை‌த்துமே அ‌ப்பொழுதே தம‌ி‌ழ்நா‌ட்டு ம‌க்களு‌க்கு த‌ெ‌ரியு‌ம்.

எ‌னினு‌ம் ஈழ த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு எ‌திரான இ‌ந்த கொடூர தா‌‌க்குதலை ‌நிறு‌த்துவ‌த‌ற்கு த‌மிழக‌த்‌தி‌‌லிரு‌ந்து 7 கோடி தம‌ி‌ழ் ம‌க்களு‌ம் ஓர‌ணி‌யி‌ல் ‌திர‌ண்டிரு‌ப்‌பி‌ன் ல‌ட்ச‌க்கண‌க்கான ஈழ தம‌ி‌ழ் ம‌க்க‌ள் கா‌ப்பா‌ற்ற‌ப்பட‌்டிரு‌ப்பா‌ர்க‌ள். த‌மி‌ழ் ஈழ‌ம் எ‌னு‌‌ம் கனவு‌ம் ‌நிறைவே‌றி இரு‌க்க கூடு‌ம். ஆனா‌ல் த‌மிழ‌க‌த்‌தி‌ல் நட‌ந்தது அ‌த்தனையு‌ம் உபயோகம‌ற்ற வகை‌யி‌ல் க‌ட்‌சிக‌ளினுடைய அடையாள உ‌ண்ணா‌விரத, ஆ‌ர்‌ப்பா‌ட்ட, பேர‌ணிகளாக அமை‌ந்தது.

த‌மிழ‌ர்க‌ளி‌ன் இ‌ந்த ஒ‌‌ற்றுமைய‌ற்ற த‌ன்மையை இ‌ந்‌திய அரசு‌ம், இல‌ங்கை அரசு‌ம் ந‌ன்கு பய‌ன்படு‌த்‌தி கொ‌ண்டன. அ‌த‌ன் ‌விளைவு, ஓ‌ர் இனம‌் மு‌ற்றாக அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டது. 50 ஆ‌ண்டு கால போரா‌ட்ட‌‌ம் ‌‌பி‌ன்னடைவை‌ச் ச‌ந்‌தி‌த்தது. இர‌ண்டு வருட‌ங்களு‌க்கு ‌பிறகு ஈழ‌த்‌தி‌‌ல் நட‌ந்த அ‌த்தனை ‌நி‌க‌ழ்வுகளு‌ம் ச‌ர்வதேச போ‌ர் ‌‌வி‌திமுறைகளு‌க்கு மாறானவை எ‌ன்று ஐ.நா அ‌றி‌க்கை தெ‌ளிவு‌படு‌த்‌தியு‌ள்ளது.

‌லி‌பியா‌வி‌ல் 6 ஆ‌யிர‌ம் பொது ஜன‌ங்க‌ள் மரணமெ‌ய்‌தினா‌ர்க‌ள் எ‌ன்பத‌ற்காக ‌‌லி‌பியா‌வி‌ன் கடா‌பி ஐ.நா படைகளா‌ல் சு‌ற்‌றி வளை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌‌கிறா‌ர். எ‌கி‌ப்து அ‌திப‌ர் முபா‌ர‌க் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர். ராஜ‌பக்சவை கு‌ற்றவா‌ளி கூ‌‌ண்டி‌‌ல் ‌நிறு‌த்த‌ப்பட வே‌ண்‌‌டு‌ம், த‌ண்டி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்ற உண‌ர்வு எ‌ங்கோ வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்க‌க் கூடிய அ‌ந்‌நிய தேச ம‌க்க‌ளிட‌த்‌திலேயே கூட எழு‌ந்து ‌வி‌ட்டது. ஆனா‌ல் தொ‌ப்பு‌ள் கொடி உறவு கொ‌ண்ட 7 கோடி தம‌ி‌ழ் ம‌க்க‌ளிட‌த்‌தி‌ல் ஒரு‌மி‌த்த குரலாக இ‌ன்னு‌ம் எழ‌வி‌ல்லை.

ஐ.நா.‌வி‌ன் அ‌றி‌க்கையை‌க் ‌கிழ‌ி‌த்தெ‌றி‌ந்து கு‌‌ப்பை‌யி‌ல் போட வ‌லியுறு‌த்‌தி ராஜப‌க்ச மே 1ஆ‌ம் நா‌ள் கொழு‌ம்‌பி‌ல் போ‌ர்‌க்கோல‌‌ம் பூண‌ப்போ‌கிறா‌ர். ஈழ‌த் த‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்ற தா‌ன் முடிய‌வி‌ல்லை. குறை‌ந்தப‌ட்ச‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்த ராஜப‌க்சவு‌ம், கூ‌ட்டா‌ளிகளு‌ம் த‌ண்டனை‌யி‌லிரு‌ந்து த‌ப்‌பி‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌‌ள்ள வே‌ண்டு‌ம்.

ராஜப‌க்ச த‌ண்டி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் மா‌ண்டு போன த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌நீ‌ண்ட கால த‌மி‌ழ் ஈழ கனவு‌ம் அவ‌ர்க‌ள் மறை‌ந்தது போலவே ம‌ண்ணோடு ம‌ண்ணா‌கி போ‌ய்‌விடு‌ம். இ‌னியு‌ம் ஒரு கண‌ம் கூட கால‌ம் தா‌ழ்‌த்து‌வ‌ற்கு த‌மி‌ழ் ம‌க்க‌ள் இட‌ம் அ‌ளி‌‌த்து‌விட‌க் கூடாது. த‌மி‌ழ் ம‌க்க‌ள் அனைவரு‌ம் ஓ‌ர‌ணி‌யி‌ல், ஓ‌ர் உண‌ர்‌வி‌ல் ‌திரள வே‌ண்டு‌ம்.

த‌மி‌‌ழ்நா‌ட்டி‌ல் த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் வா‌க்குகளை பெ‌ற்று த‌ங்களை தே‌சிய அள‌விலு‌ம், மா‌நில அள‌விலு‌ம் அடையாள‌ப்படு‌த்‌தி கொ‌ள்ள‌க் கூடிய கா‌ங்‌கிர‌ஸ், ‌பா.ஜ.க., ‌தி.மு.க. அ.இ.அ.‌தி.மு.க., இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட், ம.‌தி.மு.க., பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி, பா.ம.க., தே.மு.‌தி.க., பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி, ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், ம‌னித நேய ம‌க்க‌ள் க‌ட்‌சி, சம‌த்துவ ‌ம‌க்க‌ள் க‌ட்‌சி, அ‌கில இ‌ந்‌திய பா‌ர்வ‌ர்டு ‌பிளா‌க், இ‌ந்‌திய குடியரசு க‌ட்‌சி, கொ‌ங்கு இளைஞ‌ர் பேரவை, கொ‌ங்குநாடு மு‌ன்னே‌ற்ற கழக‌ம், இ‌ந்‌திய ஜனநாயக க‌ட்‌சி, பெரு‌ந்தலைவ‌ர் ம‌க்க‌ள் க‌ட்‌சி என அன‌ை‌த்து அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌ம், த‌மி‌ழ் இன உண‌ர்வாள‌ர்களு‌ம், சமுதாய இய‌க்க‌ங்களு‌ம், தொ‌ண்டு ‌நிறுவன‌ங்களு‌ம், வ‌ணிக தொ‌ழி‌ல் ‌நிறுவன‌ங்களு‌ம் அர‌சிய‌ல் மனமா‌ட்ச‌ரிய‌ங்களு‌க்கு அ‌ப்பா‌ற்ப‌‌ட்டு உலகமே ‌விய‌க்கு‌ம் வ‌ண்ண‌ம் ஒரு‌ங்‌கிணை‌ந்த போரா‌ட்ட‌த்தை நட‌த்த மு‌ன் வர வே‌ண்‌டு‌ம்.

சா‌தி, மத, இன, க‌ட்‌சி மா‌ட்ச‌றிய‌ங்களை மற‌ந்து 7 கோடி த‌மிழ‌ர்களு‌ம் த‌‌‌மிழ‌ர்களாக எழுவத‌ற்கு இதுவே தருணமாகு‌ம். ராஜப‌க்சவை த‌ண்டி‌க்க ஐ.நா. அ‌றி‌க்கை‌யி‌ன்படி உடனே ‌விசாரணை மே‌ற்கொ‌ள்ள இ‌ந்‌தியா எ‌வ்‌வித‌த்‌திலு‌ம் மு‌ட்டு‌க்க‌ட்டையாக ‌நி‌ற்க கூடாது என எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்யவு‌ம், ஐ.நா.‌வி‌ன் நடவடி‌க்கையை து‌ரித‌ப்படு‌த்தவு‌ம் த‌மிழ‌ர்க‌ளே ‌வீ‌தி‌க்கு வாரு‌ங்க‌ள்'' எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அனை‌த்து‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்களு‌க்கு‌ம் த‌னி‌த்த‌னியே பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி சா‌ர்பாக கடித‌ம் எழுத‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையின் அதிர்வலைகள் - செய்தித்துளிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் சிறிலங்காவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போர்க்குற்ற அறிக்கையின் அதிர்வலைகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு இது.

உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்களுக்கும் உளவியல் ரீதியான ஊக்கத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும், சிறிலங்காவின் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க.

“மேற்கு நாடுகளின் ஆதரவுடன் பான் கீ மூன் நிபுணர்குழுவை நியமித்ததானது ஐ.நாவின் சாசனங்களை மீறுகின்ற செயலாகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சம்பந்தப்பட்ட சரத் பொன்சேகாவையோ அல்லது வேறெவரையோ எந்தவொரு வெளிநாடு நீதிமன்றத்திலும் சிறிலங்கா அரசாங்கம் நிறுத்துவதற்கு அனுமதியாது.

நாடு முழுவதற்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இந்த அறிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.“ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போர்க்குற்ற அறிக்கையை ஆழமாக ஆராய முடியாது

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு படித்துப் பார்க்கும் என்றும், ஆனால் அதிலுள்ள விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராயமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்றை சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிசிலனைக்காக அனுப்பி வைத்துள்ளது.

“இந்த அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்று படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆனால் குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் நிலை இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 216 பக்கங்களைக் கொண்ட ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை இன்னமும் படித்து முடிக்கவில்லை“. என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக பனிப்போர்

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சிறிலங்காவுக்கு எதிராக பனிப்போர் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதாக பிரான்சுக்கான சிறலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

“ சிறிலங்காவில் பொம்மை நிர்வாகம் ஒன்றை அமைக்க பிரிவினைவாதிகளும் அவர்களின் அனுதாபிகளும் முனைகிறார்கள்.

அது தனிநாடு அமைக்கும் தமது நோக்கத்தை அடைவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

நிபுணர்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தாமதிக்கும்படி ஐ.நாவிடம் சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

ஆனால் அதையும் மீறி ஐ.நா பொதுச்செயலர் இந்த அறிக்கையை வெளியிட்டு விட்டார்“ என்றும் தயான் ஜெயதிலக குற்றம்சாட்டியுள்ளார்.

பான் கீ மூனும் நேட்டோவுமே மேற்குலகின் ஆயுதங்கள்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனையும், நேட்டோவையும் மேற்கு நாடுகள் தமது ஆயுதங்களாகப் பாவித்துக் கொள்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் மானெல் மல் அமைப்பின் அமைப்பாளரான, சட்டநிபுணர் எல்.எல்.குணசேகர.

“மேற்குலக நாடுகள் உலகமே தமக்குச் சொந்தம் என்று தான் நினைக்கின்றன. ஆயுதங்களைக் கொண்டு அவை உலகத்தை அழிக்கின்றன. ஈராக்கில் சதமாமை வீழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்றன.

ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும், பஹ்ரெய்னிலும் இதற்கு உதாரணங்கள் உள்ளன.

மேற்குலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஏனைய நாடுகள் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்“ என்றும் எஸ்.எல்.குணசேகர மேலும் கூறியுள்ளார்.

பான் கீ மூனை சாடுகிறது இன்னர் சிற்றி பிரஸ்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இதுவரை பாதுகாப்புச் சபையிடமோ அல்லது பொதுச்சபையிடமோ கோரிக்கை விடுக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் தகவல் விசனம் வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையிலும், இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று குற்றம்சாட்டியுள்ளது.

எனினும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான கொலம்பியாவைச் சேர்ந்த நெஸ்டர் ஒசோரியோ, இந்த நிபுணர் குழு அறிக்கையை தான் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது ஓர் வழக்கமான நடவடிக்கையே என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு எந்தக் கோரிக்கையும் பாதுகாப்புச் சபைக்கு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

மகிந்தவும் ரணிலும் கூட்டறிக்கை விட்டால் போதும்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக ஐதேக இன்னமும் முறைப்படியான அறிக்கையை வெளியிடாதிருப்பது கவலை தருவதாக கூறியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க.

“ இந்த அறிக்கையை எதிர்ப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அதிகாரபூர்வமான அறிக்கையைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையைக் கண்டித்து ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டாலே 75 வீதமான பிரச்சினைகள் தீர்ந்து விடும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுதிவைக்கவில்லை: அறக்கட்டளை உறுப்பினர்கள்

சத்ய சாய்பாபா தனக்கு பின் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை, மேலும் அறக்கட்டளை தொடர்பாக உயில் எதுவும் எழுதிவைக்கவும் இல்லை என்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சாய்பாபா இறந்த பிறகு அறக்கட்டளை சொத்துக்களை உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சாய் அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் அளி்க்கும் வகையில் சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. சக்ரவர்த்தி, தொழிலதிபர் வேணு சீனிவாசன், பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர், சார்டட் அக்கௌண்டன்ட் நாகானந்த் ஆகியோர் பேசினர்.

பாபாவுக்கு பணிவிடை செய்பவர் தான் சத்யஜித். அவர் ஒன்றும் அறங்காவலரோ, வாரிசோ கிடையாது. பாபா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அறக்கட்டளையின் அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது, அறக்கட்டளை பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்த வாரம் கூடும் அறங்காவலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதாக வரும் செய்திகள் உண்மையில்லை. அவை அறப்பணிக்களுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாபா இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டி வாங்கியதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவர் இறந்த பிறகே அது பெங்களூரில் இருந்து வாங்கபப்ட்டது என்றனர்.

வன்னி மக்களின் தொண்டன் 'கிளி பாதர்' நினைவுகூரப்பட்டார்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காகவே தனது வாழ்வினை அர்ப்பணித்த கிளி பாதர் என அறியப்பட்ட 'மக்களின் மதகுரு' மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினத்தினை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள கிறிஸ்தவ மற்றும் சமூக செயற்பாட்டளார்கள் நினைவு கூர்ந்தனர்.

கடந்த ஏப்பிரல் 23ம் நாளன்று நாட்டினது வடக்குப் பகுதியிலுள்ள கருணாரத்தினம் அடிகளாரினது பங்கில் திரண்ட கிறீஸ்தவ மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அவரை நினைவுகூர்ந்ததோடு அவரது பணியினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதென உறுதிபூண்டனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கிலுள்ள குக்கிராமமான வவுனிக்குளத்திலுள்ள வேளாங்கன்னி மாதா தேவலாயலத்தில் கிளி பாதரின் நினைவாக சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

ஏப்பிரல் 20 2008 அன்று தேவாலயமொன்றில் ஞாயிறு பூசையினை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லாவி வவுனிக்குளம் வீதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கிளி பாதர் என மக்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் கருணாரத்தினம் அடிகளார் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரே இந்தக் கொலையினைப் புரிந்ததாகப் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்.

"துணிவும், பலம் மற்றும் மனித நேயம் ஆகியவற்றைத் தன்னகத்தேகொண்ட உதாரண புருசராக அவர் திகழ்ந்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அவர் தனது வாழ்வினைக் கழித்தார். இவரது மறைவு நாட்டினது தெற்கு மற்றும் வடக்கிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என இந்த நிகழ்வில் பங்குகொண்ட கொழும்பு மறைமாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் உரிமைச் செயற்பாட்டாளரான மதகுரு திறான்சி பெனாண்டோ கூறுகிறார்.

"போரின் போது அவர் மக்களுடன் இருந்தார். இடம்பெயர்ந்த மக்களிடம் அவர் அதியுச்ச பரிவினைக் காட்டினார். இவர்களது வாழ்க்கைதரத்தினை மேம்படுத்தும் வகையில் இவர் ஓய்வின்றி உழைத்தார்" என அவர் தொடர்து தெரிவித்தார்.

சுதந்திரமாகச் செயற்பட்ட உள்ளூர் மனித உரிமைக் காண்காணிப்பு அமைப்பான வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற ஒன்றைத் தோற்றுவித்த கருணாரத்தினம் அடிகளால் அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகாலப் போரின் போது கத்தோலிக்க மதகுருமார் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

1984ம் ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபையின் மதகுரு ஜோர்ச் ஜெயரத்னசிங்கமும் அவரது முஸ்லீம் சாரதியும் கொல்லப்பட்டனர். 1985ம் ஆண்டு மதகுரு பஸ்தியான் சுட்டுக்கொல்லப்பட்டார். 1988ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு சந்திரா பெர்னாண்டோ படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

1990ம் ஆண்டு மதகுரு ஜோன் காபேட் காணாமற்போயிருந்தார். 1997ம் ஆண்டு மதகுரு எஸ். செல்வராசா கடத்தப்பட்டிருந்தார். 2006ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு பாக்கியரஞ்சித் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்;. 2008ம் ஆண்டு பறிதொரு கிளைமோர் தாக்குதலில் கருணாரத்தினம் அடிகளால் கொல்லப்பட்டார். 2009ம் ஆண்டு பிரான்சிஸ் யோசப் அடிகளால் காணாமற்போயிருக்கிறார். 1983ம் ஆண்டு கத்தோலிக்கக் அருட்சகோதரி மேரி அன்னிதா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

சிறிலங்காவில் ஐ.நாவின் தோல்வி தொடர்பாக வெளிவரும் உண்மை

ஆயிரக்கணக்கான தமிழர்கள் படைத்தரப்பினரால் நடாத்தப்படுகின்ற தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள், காணாமற் போதல்களும், பாலியல் வல்லுறவுகளும் சித்திரவதைச் சம்பவங்களும் மலிந்த பூமியாக தமிழர் தேசம் மாறிவிட்டது.

அவுஸ்ரேலியா நோக்கி படகுகள் மூலம் வரும் அகதிகளில் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்குக் காரணம் இதுதான்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட theage.com என்னம் ஊடகத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் Dr Sam Pari தெரிவித்துள்ளார். அதனை மொழியாக்கம் செய்தவது தி.வண்ணமதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் வாழுகின்ற தமிழர்களுக்கு எதிராக சாட்சியமற்றதொரு போர் தொடுக்கப்பட்டிருந்தது.

செப்ரெம்பர் 2008ம் ஆண்டு ஐ.நா அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட சிறிலங்கா அரசாங்கம் கொடூரமானதொரு படை நடவடிக்கையினை முன்னெடுத்தது.

விடுதலைப் புலிகளுடனான போரையே தாங்கள் முன்னெடுத்ததாகவும் பொதுமக்கள் எவரும் பாதிக்காத வகையிலேயே தாங்கள் படை நடவடிக்கையினை முன்னெடுத்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்ற போதும், கிடைக்கப்பெறுகின்ற ஒளிப்படங்கள், சலனப்படங்கள் மற்றும் ஊரிலுள்ள எங்களது உறவுகளுடனான தொலைபேசி உரையாடல்கள் என்பன வேறுபட்ட கதையினையே கூறி நிற்கின்றன.

படுகாயமடைந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இறந்த பொதுமக்களின் உடலங்களை உள்ளடக்கிய ஒளிப்படங்களை நாங்கள் பேரச்சத்துடன் பார்க்கிறோம்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது. ஏன் அகதிகள் முகாம்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கிறது. சரணடைந்த பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கொடூரத்தினை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரி புலம்பெயர் தமிழர்கள் தொடர் போராட்டத்தினை நடாத்திய போதும் உலகம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது.

உலகெங்கும் பரந்துவாழும் 100,000 தமிழர்கள் வீதிக்கிறங்கிப் போராட்டத்தினை நடாத்தியபோதும், எங்களது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பர்மா, சிம்பாவே மற்றும் லிபியா தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாடு எதுவோ அதற்கு எதிரான வகையில் அப்போதைய அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ருட் சிறிலங்கா தொடர்பாக 'இலகு இராசதந்திரத்தினைக்' கைக்கொண்டார்.

போர் இடம்பெற்ற பகுதியில் பொதுமக்கள் இழப்புக்கள் என்றுமில்லாதளவு அதிகரித்துக் காணப்பட்டது ஐ.நாவுக்கும் தெரியும் என்பதை நாங்கள் மெதுவாக அறிந்துகொள்கிறோம். பொதுமக்கள் இலக்குகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட அதேநேரம் வான் வழித் தாக்குதல்களும் நடாத்தப்பட்டதை ஐ.நா அறியும் என்பதை தற்போது கசிந்திருக்கும் செய்மதி ஒளிப்படம் தெளிவாக்குகிறது.

ஐ.நாவின் சிறிலங்காவிற்கான பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர் எனக் கூறியிருந்தார். ஆனால் ஏனைய சிலர் இந்தத் தொகை இதனைவிட அதிகம் எனக் கூறுகிறார்கள். இதுபோல பொதுமக்கள் பெருந்தொகையில் படுகொல்லப்படுவதை அனைத்துலகம் அனுமதித்தது ஏன்?

அதேநேரம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவினது விடயம் கலந்துரையாடப்படுவதை சீனாவும் ரசியாவும் இணைந்து தடுத்திருக்கின்றன. சிறிலங்காவில் அதிக முதலீடுகளைச் செய்திருக்கும் சீனா மற்றும் ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் கொழும்பினது நட்பு நாடுகளாகச் செயற்பட்டு வருகின்றன.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப்போரின் போது 20,000 பொதுமக்கள்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா செயலாளர் நாயகத்தினது தலைமை அலுவலராகச் செயற்பட்ட விஜய் நம்பியாரிடம் ஐ.நா அலுவலர்கள் கூறியிருந்தனராம். ஆனால் இதனை வைத்துக்கொண்டு ஐ.நா அலுவலர்கள் எவரும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது என நம்பியார் கோரியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முதன்மைத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களது சரணடைவுக்கான ஏற்பாடுகளில் விஜய் நம்பியார் உள்ளிட்ட ஐ.நா அலுவலர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட சிறிலங்காவினது அதிகரிகளும் ஈடுபட்டிருந்தார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் முறையான போர்க்குற்ற விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலையில், தமிழ் மனித உரிமை அமைப்புக்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.

ஆனால் உண்மை வேறு விதமானது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் படைத்தரப்பினரால் நடாத்தப்படுகின்ற தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள், காணாமற் போதல்களும், பாலியல் வல்லுறவுகளும் சித்திரவதைச் சம்பவங்களும் மலிந்த பூமியாக தமிழர் தேசம் மாறிவிட்டது.

அவுஸ்ரேலியா நோக்கி படகுகள் மூலம் வரும் அகதிகளில் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்குக் காரணம் இதுதான்.

மனித உரிமை அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் தொடராகக் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக ஈற்றில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புச்சொல்லும் செயல்முறைபற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தார். ஆனால் பான் கீ மூனின் இந்த முடிவினை சிறிலங்கா கடுமையாகக் கண்டித்ததோடு இந்தக் குழு சிறிலங்காவிற்குப் பயணம் செய்வதற்கும் தடைவிதித்தது.

இரண்டு வாரங்களின் முன்னர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டிருந்த வல்லுநர்கள் குழுவின் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் போர்க் குற்றங்களும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றதைக் காட்டும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தனதறிக்கையில் கூறும் வல்லுநர்கள் குழு, பெருந்தொகையில் பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் ஐ.நா அமைப்புக்கள் அவர்களைப் பாதுகாப்பதற்கு தவறிவிட்டன எனக்கூறுகிறது.

இன்று ஆயிரக்கண்ககான பொதுமக்கள் காணமற்போயிருக்கிறார்கள். 500 சிறார்கள் உள்ளிட்ட 14,000 பேர் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தவிர வடக்கிலுள்ள மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் தங்களது காலத்தினை ஓட்டும் அதேநேரம் தமிழர் தாயகப் பகுதிகளின் குடிப்பரம்பலை மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2009ம் ஆண்டினது முதற்பகுதியில் மக்கள் ஆயிரக்கணக்காக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது அதனைத் தடுப்பதற்குத் தவறியதுடன் மாத்திரமில்லாத ஐ.நா சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் துணைபோயிருப்பதுதான் உண்மை.
nanry புதினப்பலகை

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா?

மருத்துமனையில் சாய்பாபா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக கூறப்படுவதை சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மறுத்தனர்.

சத்ய சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், பணமும் கடத்தப்பட்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி சாய்பாபாவின் 'ஸ்ரீசத்ய சாய் சென்டிரஸ் டிரஸ்ட்' அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உள்விளையாட்டு அரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. ஆசிரமத்தில் இருந்து தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் கடத்தப்பட்டதாகவோ, ஆவணங்கள் மாயமானதாகவோ கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலர் வேண்டுமென்றே அறக்கட்டளை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபாவுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை

சொத்துகள் எதுவும் சாய்பாபா பெயரில் இல்லை. அறக்கட்டளை பெயரில்தான் உள்ளது. எனவே, பாபாவுக்கு உயில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பாபா பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. அறக்கட்டளை சொத்துகளை விற்கவோ அல்லது வேறு யார் பெயருக்கும் மாற்றவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

அறக்கட்டளை சேவைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளை கணக்கு வழக்குகளெல்லாம் மிகச்சரியாக வருமானவரித்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் உள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆடிட்டிங் நிறுவனம் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை சரிபார்க்கிறது.

ரூ 130 கோடி நன்கொடை:

கடந்த 4 ஆண்டுகளில் சத்யசாய் மெடிக்கல் டிரஸ்டுக்கு ரூ.130 கோடிவரை நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை தரும்படி அரசிடம் நாங்கள் கேட்டதில்லை. அறக்கட்டளை சொத்துகளை எல்லோரும் மிகைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த சொத்துகளை கொண்டு வியாபாரம் எதுவும் செய்வதில்லை. எனவே, அதன் சொத்துகளை மார்க்கெட் மதிப்பீடு செய்வது சரியில்லை. சொத்து எவ்வளவு என்று எங்களால் ïகிக்க முடியவில்லை.

சவப்பெட்டி ஆர்டர் செய்தது யார்?

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பாபாவுக்கு எந்த மாதிரி மருத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறித்து அறக்கட்டளைக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அப்போது பாபா நலமுடன் இருந்தார். அவருக்கு தேவையான மருத்துவரை அவரே அழைத்துக் கொள்வார். அவர்களின் ஆலோசனைப்படி அவரே மருந்துகளை உபயோகித்து வந்தார். சிகிச்சை குறித்து அவர் யாரிடமும் தெரிவித்ததில்லை.

பாபா சிகிச்சை பெற்ற அறைக்குள் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறு. அவரது சகோதரர் மகன் ரத்னாகர், 27 நாட்களும் கூடவே இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருதடவை பாபாவை பார்த்தனர்.

சாய்பாபா இறப்பதற்கு முன்பே, அறக்கட்டளை சார்பில் யாரும் அவருக்கான சவப்பெட்டிக்கு 'ஆர்டர்' கொடுக்கவில்லை. பாபா மரணம் அடைந்த பிறகு, ஒரு பக்தர் 'பிரீசர் பாக்ஸ்' எனப்படும் சவப்பெட்டியை நன்கொடையாகக் கொடுத்தார்.

சத்யஜித் காரணம் அல்ல

செயற்கை சுவாச கருவியை அகற்றியதால்தான் பாபா மரணமடைந்தார் என்பது உண்மை அல்ல.

சத்யஜித் என்பவர், பாபாவுக்கு கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, அவரது ஆரோக்கியத்தை சீரழித்ததாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. சத்யஜித், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1974-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் உமேஷ்-மோகினி ஆகியோர் பாபா மீது பக்தி கொண்டவர்கள்.

சத்யஜித்தின் இயற்பெயர் யதீஷ். அவர் மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 1991-ம் ஆண்டு, புட்டபர்த்திக்கு வந்து, சாய்பாபா அறக்கட்டளை கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. படிப்புகளை முடித்தார். எம்.பி.ஏ. பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா கையால் தங்கப்பதக்கம் பெற்றார்.

அப்போது, பாபா பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் கவரப்பட்ட பாபா, அவரை அழைத்து, தனது ஆன்மிக பயணத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். அதை யதீசும் ஏற்றுக்கொண்டு, பாபாவின் தனி உதவியாளர் ஆனார். அதன்பிறகு, அவரது பெயர் சத்யஜித் ஆக மாறியது.

காசோலை அதிகாரம்

முக்கிய பிரச்சினைகளில் சத்யஜித்தின் ஆலோசனையை பாபா கேட்பது வழக்கம். பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அவரை சத்யஜித்தான் கவனித்துக் கொள்வார். அவர் நன்றாக கவனிக்கவில்லை என்றால், அப்பணியில் இருந்து பாபாவே அவரை நீக்கி இருப்பார்.

பாபாவை தவிர, வேறு யாருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாத செலவுகளுக்கு கூட பாபா கைப்பட காசோலை வழங்கப்பட்டது. இனிமேல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு அளிக்கப்படும்.

புதிய தலைவர் யார்?

அறக்கட்டளை மற்றும் நிர்வாக கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. அதில், அறக்கட்டளையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். தனது வாரிசு என்று யாரையும் பாபா தனது மனதில் வைத்திருக்கவில்லை. அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவர்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வெளியாட்களை தேர்ந்தெடுக்க மாட்டோம். சத்யஜித், அறக்கட்டளையின் ஊழியர் மட்டுமே. அவரை அறக்கட்டளை உறுப்பினராக ஆக்கும் திட்டமும் இல்லை. பாபாவும் அப்படி சொல்லவில்லை.

மறுபிறவி எப்போது?

பாபா, அடுத்த பிறவியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 'பிரேம சாய்' ஆக பிறப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், எந்த தேதியில் மறுபிறவி நிகழும் என்று அவர் கூறவில்லை," என்றனர்.

தமிழினத் துரோகிகள்.....!

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபக்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபக்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத விநியோகம், கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மௌனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரபூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

"(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரபூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபட நாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு "இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை.

பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப்புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் டில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே?

இலங்கை அதிபர் ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகிகள் இவர்களே...!

தினமணி: தலையங்கம்

இலங்கையின் பொறுப்புக்களை UN வலியுறுத்தியுள்ளது

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பணியாளர்களை பாகாக்க வேண்டியதன் அவசியத்தை அந்த அமைப்பு மீண்டும் இலங்கைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் மே மாதம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்தவ விடயம் குறித்து அரசாங்கம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்களில் ஒன்றாகும் என அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடையறா சேவையை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டங்கள் நடத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ள அதேவளை, பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் எதிர்வரும் மே தினத்தில் பாரியளவில் மக்கள் அணிதிரள வேண்டுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும்; ஆந்திர மந்திரி அறிவிப்பு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்ட சாய்பாபா கடந்த 24-ந்தேதி மரணம் அடைந்தார். கடந்த புதன்கிழமை அவரது உடல் அங்குள்ள பிரசாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது சமாதியை தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாய்பாபா சமாதியை தரிசனம் செய்தனர். இன்றுடன் சமாதி தரிசனம் முடிவடைகிறது. சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும் என்று ஆந்திர மந்திரி ரகுவீரா ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சாய்பாபா வாழ்ந்து மறைந்த புட்டபர்த்தி மிகவும் புனிதமான தலம். இதை உலகின் மிகப் பெரிய புண்ணிய தலமாக மாற்ற ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும். சாய்பாபா ஆசிரமத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.

சாய்பாபா தனது காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெற இலவச மருத்துவமனை, கல்வி கூடங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தினார். அவரது பணி தொடர மாநில அரசு அத்தனை உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.2 லட்சம் கோடி சொத்து சாய்பாபா அறக்கட்டளைக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட சத்ய சாய்பாபா கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவர் தலைவராக இருந்த சத்யசாய் அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. தற்போது அறக்கட்டளை உறுப்பினர்களாக சென்னை தொழில் அதிபர் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்ரவர்த்தி, எஸ்.வி. கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஒருவரை ஒரு வாரத்தில் சாய்பாபா அறக்கட்டளை தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாய்பாபா சகோதரர் மகன் ரத்னாகர், தொழில் அதிபர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் அறக்கட்டளை தலைவராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சாய்பாபா ஆசிரம நிர்வாகிகள் சிலர் கூறும் போது,

சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஆவதற்கு தொழில் அதிபர் வேணுசீனிவாசனுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்குதான் வெளிநாட்டு சாய்பாபா பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதேபோல் சாய்பாபாவுக்கு நெருக்கமான அனைவருடனும் சீனிவாசன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் அறக்கட்டளை தலைவரானால் சாய்பாபா ஆசிரம முன்னேற்றத்திற்கு அரும்பாடுபடுவார். சாய்பாபாவின் போதனைகளை உலகம் முழுவதிலும் எடுத்துச் செல்வார். இதனால் அவர்தான் தலைவராவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் கேரவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகாப்பு பேரவையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கோரவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தற்போதைய தலைவர் நெஸ்டர் ஒஸ்டரியோ, நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் வழயைமான நடவடிக்கை எனவும், நடவடிக்கை எடுக்குமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பணியாளர்கள், சொத்துகளுக்கு சிறிலங்கா அரசே முழுப்பொறுப்பு - மீண்டும் வலியுறுத்துகிறது ஐ.நா

சிறிலங்காவில் உள்ள ஐ.நா பணியாளர்கள் மற்றும் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கே உள்ளது என்று ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மே 1ம் நாள் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பேரணிகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே ஐ.நா பொதுசெயலரின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் இவ்வாறு கூறியுள்ளார்.

“ ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. எனினும் ஐ.நாவின் சொத்துகள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை சிறிலங்கா அரசுக்கு ஐ.நா மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, சிறிலங்காவின் அமைச்சர்கள் இருவர் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான பேரணிகள் தொடர்பாக குழப்பமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் நேற்று கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரிஸ், ஐ.நாவின் அறிக்கைக்கு எதிரான பேரணிகளை நடத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்துக்குக் கிடையாது என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இருவர் ஒரே நாளில் கூறியுள்ள முரண்பாடாக கருத்துகள் இராஜதந்திர வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நினைவேந்தல் வாரம்- தமிழீழ தேசிய துக்க நாள். கூட்டிணைவாக முன்னெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசு அழைப்பு:


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மே 12 முதல் மே 18 வரையிலான நாட்கள் ஒரு துயர் நிறைந்த நாட்களாகும். சிறீலங்கா இனவெறி அரசானது உலகத்தின் கண்களுக்கு முன் எம் இனத்தின் மீது, இனப்படுகொலையின் அதி உச்ச கொடூரங்களை நடாத்திய கொடிய நாட்களாகும்.

இந்த நாட்களை நினைந்து மே 12 முதல் நினைவேந்தல் வாரமாக முன்னெடுக்கவும்- மே 18ஐ தமிழ் தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கவும் உலகத் தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளை கூட்டிணைவுடன் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனொரு அங்கமாக பிரித்தானியாவிலும் கனடாவிலும் கலந்துரையாடுவதற்கான அழைபினை தமிழ் சமூக அரசியல் பொது அமைப்புக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
எதிர்வரும் மே-1 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நண்பகல் 11 மணிக்கு Scarborough Civic Center, conference Room B எனும் இடத்தில் அனைவரும் பங்கெடுத்து விடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு உதவிப்பிரதமரும் கல்வி காலாச்சார விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் தெரவித்துள்ளார்.
பிரித்தானியாவில் மே-1 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிக்கு Northolt Village Community Centre Ealing Road - Northolt UB5 6AD எனும் இடத்தில் ஒவ்வொரு அமைப்புக்கள் சார்பிலும் இருவர் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உதவிப்பிரதமரும் மாவீரர், முன்னால் போராளிகள் குடும்ப நலன் பேணுல் அமைச்சருமான உருத்திராபதி சேகர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு :
(கனடா) தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் : 416 847 8686
(பிரித்தானியா) உருத்திராபதி சேகர் : 078 122 7038

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

வியாழன், 28 ஏப்ரல், 2011

GTV NEWS 28.04.2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை : சிறிலங்காவில் இன்று......? – செய்தித்துளிகள்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து சிறிலங்காவின் அரசியல் களத்தில் அதற்கு எதிராக வியூகம் வகுக்கும் முயற்சிகள் சூடுபிடித்துள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை அடுத்து சிறிலங்காவில் நடக்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பு இது.

ஐதேகவின் புதிய தகவல்

ஐ.நா நிபுணர்குழுவின் 31 கேள்விகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்துள்ளதாக ஐதேக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐதேகவின் பிரதித்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை வெளியிட முன்னர் அதன் 31 கேள்விகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில்களை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிபுணர்குழுவுடன் ஆரம்பத்தில் ஒத்துழைத்து நடந்து கொண்ட சிறிலங்கா அரசாங்கம் இப்போது நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலும் பேரணிகள்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா இறைமையுள்ள ஒரு நாடு என்றும், இந்த அறிக்கையின் பொய்மைத்தன்மை குறித்தும் பக்க சார்பு குறித்தும் பொதுநலவாய நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தம்மை தெரிவித்துக் கொள்ளும் கருத்து தவறானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் மற்றும் பல்வேறு சம்பவங்களின் ஊடாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அல்ல என்பதை அரசாங்கம் நிரூபித்து காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்தனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சிக்கும் நிலையில், ஐ.நா அறிக்கைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையிட்டு நான் அதிர்ச்சியடையவில்லை, கவலை கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தூதுவர்களை அலுக்க வைத்த பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இன்றுகாலை ஒன்றரை மணிநேரம் விளக்கமளித்துள்ளார்.

இந்த அறிக்கை ஐ.நாவினால் பகிரங்கப்படுத்தப்பட்டது குறித்தும் இதுதொடர்பான சிறிலங்கா அரசின் நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கமாக விபரித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சீனா, ரஸ்யா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இரு மணிநேர உண்ணாவிரத நாடகம்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா தலைமையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இன்று இரண்டு மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 12 மணியளவில் முடிவுக்கு வந்தது.

காலை உணவை முடித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மதிய உணவுக்காக 12 மணியளவில் போராட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஐ.நா மற்றும் பான் கீ மூனுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

கிழக்கில் சந்திரகாந்தன் கட்சி நழுவல்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்களில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பங்கேற்பதை தவிர்த்து வருகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி வைத்துள்ள இந்தக் கட்சியின் உறுப்பினர்கள், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய போது சபையில் இருக்கவில்லை.

அத்துடன் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திலும் பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் கலந்துக் கொள்ளவில்லை.

இதனால், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான சிறிலங்கா அரசின் போராட்டங்களில் பங்கேற்காது என்றே கருதப்படுகிறது.

மாற்று ஐ.நாவுக்கு ஆலோசனை

மேற்குலகின் கைப்பொம்மையாக உள்ள ஐ.நாவுக்குப் பதிலாக, நடுநிலை நாடுகளின் துணையுடன் மாற்று ஐ.நா ஒன்றை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இந்தியாவின் சாதகமான பதிலை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதேவேளை அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளுக்கு விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் கிடையாது.

நடுநிலையான நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற சிறிலங்கா அதிபரும் வெளிவிவகார அமைச்சரும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

ஐநா செயலர் விசாரணைக்குழு அமைக்க முடியும்'

ஐநா செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐநா செயலருக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும் கூறிய அவர அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை என்று கூறியுள்ள ருத்திரகுமாரன்ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்வதற்கு சட்டவாதிகளுக்கு பரிந்துரைப்பதை ஐநா செயலர் தானே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாடு கடந்த அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐநா செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கீறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாகக் கூறிய அவர் அது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட்டாலே மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.


எல்லாம் வெல்லும்
பிரிகேடியர் துர்க்கா, பூமியில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றாவது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்கமாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S 97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்து கிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்கா' என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடு' என்றார். 'எல்லாம் வெல்லும், அக்கா' என்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்' என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.
அகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம்பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போதுதான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.
சில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்கா' என்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.
தினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளிநாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசி' படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!'
துர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. காலநிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக்குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இரு' என்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி 97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.
குறிசுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச்சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்தனை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும்! எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.
அவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினியில் படங்களைச் சேமித்து, அவற்றைப் பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங்கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப்போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.
அருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you!’' கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும்.
தாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அசையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கியமான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.
சிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று! யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா?'
கிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்!' அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்?' என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்!'
போரிலே பங்கு பெறக்கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா?' என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே'. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்?' என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்!'
அந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்கா விடைபெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு!
ஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால்சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.
நாலு வருடங்களுக்கு முன்னர் தலைவருடைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்' என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா?' என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.
துர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா? எனக்குத் தெரியவில்லையே?' என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங்கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்து இருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றன' என்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்' என்று பெருமையோடு சொன்னார். சிறிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை? புதுசாக இருக்கிறதே' என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிறிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா? 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்' என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிறிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்!' என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடியவில்லை.
ரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவியையா?' போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.
சில போராளிகள் இறைவனைப் பரிகசிப்பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்!' அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்!'
முள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.
'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்' என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது!'
'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோ' என்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.
'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்?'
'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.' 'கூட்டத்தோடு பறக்கவில்லையா? அப்ப என்ன நடக்கும்?'
'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா?'- துர்க்கா பேசி முடிக்குமுன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.
'எங்கே அக்கா குருவி?'
'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்' என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோ' என்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.
ஒவ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லியான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் கையினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும்.
திட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக் கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா?' என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்!' துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.
அடுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்கும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித்தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.
ஒருநாள் அருள்மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களையும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டாலும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.
பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங்களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo two Zero. அடுத்தது, Immidiate action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்தது, Col. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்தகத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழுதி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன!'
20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்கா' என்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர்கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.
ஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?'
'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.'
'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?'
'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!'
போர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.
'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்?' என்று துர்க்கா கோபிப்பார்.
'எதுக்குப் பயப்பட வேணும்? கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்!'
'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்?' என்று துர்க்கா கடிந்து கொள்வார்.
'எல்லாம் வெல்லும், அக்கா.'
'எல்லாம் வெல்லும்!'
லெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.
ஆனந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ணனும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்துகணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.
துர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படைகள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்பிப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.
அருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.
கை ரேடியோவில் அவ்வளவு நேரமாக எதிர்பார்த்திருந்த கட்டளை கடைசியில் வந்தது. மூன்றே மூன்று சங்கேத வார்த்தைகள்தான். 'அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்!' சுருக்கமான, தெளிவான உத்தரவு. துர்க்காவின் உடலில் இதற்கு முன்னர் ஒரு முறையும் அனுபவித்திராத மாற்றம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான அட்ரனலீன் அவர் உடம்பில் பாய்ந்து சுவாச வேகம் கூடி, அந்தரத்தில் மிதப்பதுபோல ஆனார். அவர் காதுக்குள் இருதயம் அடித்தது. ஆயிரம் யானை பலம் உண்டானது போன்ற உணர்வு. முன்னே கால் வைத்தால்போதும், ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு கட்டத்துக்குள் அவர் நுழைந்துவிடுவார். அவருடைய இருதயத்தின் இரண்டு துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பாய்ந்து, அவருடைய ஆயுளையும் 1000 போராளிகளின் ஆயுளையும், ஒரு தேசத்தின் ஆயுளையும் தீர்மானிக்கப்போகும் அந்த ஓர் அடியை துர்க்கா வைத்தார்.
எதிரிகளின் நாலு டாங்கிகளும் எட்டு கவச வாகனங்களும் புள்ளிகளாகத் தெரிந்தன. தனித்தனியாக ஆடிய கை விரல்களால் துர்க்கா ஷி 97 துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கினார். சற்று நிதானித்து, நேராக்கி குறிபார்த்து விசையை அமுக்கினார். எதிரிகள் விழுந்துகொண்டே இருந்தார்கள். இனி, அவர் நிறுத்தப்போவது இல்லை. யாராவது அவரை நிறுத்தினால் ஒழிய.
ராணுவத்தின் வலப்பக்க முனையும் இடப்பக்க முனையும் நகர்ந்து இடைவெளியைக் குறுக்கி வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் தங்கள் படையில் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு மூடத்தனமான நகர்வு ஒருவரும் எதிர்பார்க்காதது. இதைச் சாதகமாக்காமல் விடுவது அதனிலும் கூடிய மூடத்தனம். ராணுவம், தங்கள் படையைக் கொல்லும் அதே வேகத்தில், போராளிகளையும் கொன்றது. எங்கேயோ இருந்து இலக்குவைத்து சுடப்பட்ட குண்டு ஒன்று துர்க்காவைத் தாக்கியது அவருக்குத் தெரியவில்லை. உதிரம் நெற்றியிலே வழிந்து, கழுத்திலே இறங்கி, நெஞ்சை நனைத்தபோது குனிந்து பார்த்தார்!
அன்றைய நாள் 2009... ஏப்ரல் 4-ம் தேதி. போர் நின்றபோது, போராளிகளில் 700 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இலங்கை ராணுவத்தின் இழப்பு 3000 பேருக்கு மேலாக இருந்தது. அந்த விவரம் துர்க்காவுக்கு என்றென்றைக்குமே தெரியப்போவது இல்லை.
அவர் துப்பாக்கியைக் கையிலே இறுக்கிப் பிடித்தவண்ணம் புரண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். அது சொல்ல முடியாத தூய வெண் நிறத்தில் காணப்பட்டது. ஓர் அபூர்வமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. மேஜர் சோதியாவும், லெப். கேர்ணல் செல்வியும் கண்களுக்குத் தெரிந்தனர். அருள்மதிக்கு விடை சொல்லாமல் புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. வெகுதூரத்தில் பூட்ஸ் ஒலிகளும் மனிதக் குரல்களும் கேட்டன.
பிரிகேடியர் துர்க்கா மரணத்தைத் தழுவும் முன்னர் கடைசியாகப் பார்த்தது, ஆகாயத்தை மறைத்து 100 பறவைகள் சிறகடித்துப் பறந்த காட்சியை. அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தில் 6 மணிக் குருவியைத் தேடின!
அ.முத்துலிங்கம்
நன்றி: ஆனந்த விகடன்
ஓவியம்: ஸ்யாம்
NANRY PONGUTAMIL