சனி, 23 ஏப்ரல், 2011

புகலிடம் கோரும் 81 பேருடன் படகொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளது

அகதி அந்தஸ்து கோரும் 81 பேரைக்கொண்ட படகொன்று அவுஸ்திரேலிய நிலப்பகுதியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட வழிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கோஸ் தீவிற்கு இவர்கள் சென்றுள்ளதாக ஸ்கை நியூஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

படகு செலுத்துனர்கள் உட்பட குறித்த 81 பேரைக் கொண்ட குழுவில் அதிகமானவர்கள் இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது..

இவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத முறையில் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் வருபவர்களை பறிமாற்றும் இடமாக கருதப்படும் கொக்கோஸ் தீவில் 600 க்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ளனர்.


கருத்துகள் இல்லை: