வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பான் கீ மூனின் அறிக்கை திருத்தம் இன்றி வெளியிடப்படும் - ஐ.நா.சபை

இலங்கை தொடர்பில் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை, திருத்தங்கள் ஏதும் இன்றி முழுமையாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இந்த கோரிக்கைய நிராகரித்த ஐக்கிய நாடுகள் சபை, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும், இந்த அறிக்கை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்திருப்பதாக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

கசிந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அடிப்படையில், இலங்கையில் யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் 2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் உயிரிழந்தமையையும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நாடளாவியரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை நிராகரித்து, ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையை செய்யும் என, பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.