வெள்ளி, 22 ஏப்ரல், 2011

செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்கியது டைம்ஸ்: இறுதி நேரத்தில் முகாமைத்துவம் அதிரடி நடவடிக்கை

டைமிஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் பிரசித்த பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணையத்தின் மூலமான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்ற சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது
இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார். 3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினை நிறைவு செய்து உலகில் அதிக பிரசித்த பெற்ற நபர்களின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இடம்பிடித்துள்ளதாக டைம்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட உலகின் பிரசித்த பெற்ற 100 பேர் இந்த வாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இறுதி பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்க டைம்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.அத்துடன், இதுவரை இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் சிலரை இறுதி வாக்கெடுப்பிற்கான டைம்ஸ் சஞ்சிகை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: