சனி, 23 ஏப்ரல், 2011

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவோம் – ஐ.நாவை மிரட்டுகிறது சிறிலங்கா

ஐ.நா நிபுணர்குழுவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்தால், வீட்டோ அதிகாரம் மூலம் அதைத் தோற்கடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வரப்பட்டால் கூட நாம் கவலைப்படப் போவதில்லை.

பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் பலம்வாய்ந்த எமது நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, போன்ற நாடுகளைக் கொண்டு அதை எதிர்கொள்வோம்.

சிறிலங்காவுக்கு எதிரான எந்தவொரு விவகாரத்தையும் தோற்கடிக்க இந்த நாடுகள் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: