சனி, 23 ஏப்ரல், 2011

அரியாலையில் தன்னைத்தானே சுட்டு சிங்கள சிப்பாய் மரணம்

யாழில் சிங்கள சிப்பாய் ஒருவர் தனைத்தானே வெடிக்க வைத்து மரணமானார். அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்குள்ளான சிப்பாய் ஒருவர் யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்குமரணமானார்.
மகியங்கணையைச் சேர்ந்த சமரக்கோன் ரவீந்திரகுமார (வயது 25) என்ற சிப்பாயே மரணமடைந்துள்ளார்.

பிரஸ்தாப சிங்கள சிப்பாய் காவலரண் ஒன்றில் பணியாற்றினார். அந்தக் காவலரணில் இருவர் மட்டுமே தங்க வசதியுண்டு. நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு வரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காவலரணுக்கு முன்பாக உள்ள வாழை இலையில் காதலிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரின் மரணம் தற்கொலையாகவே இருக்க வேண்டும் என படைத்தரப்பினர் விசாரணையில் தெரிவித்தனர்.ரி56 ரகத் துப்பாக்கி மூலமே தற்கொலை செய்துள்ளார் என்றும் படையினர் தெரிவித்தனர்.அங்குள்ள சூழலைக் கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் ரி56 ரகத் துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுடக் கூடிய நிலை காணவில்லை. அவரது முதுகுப் பக்கத்தின் ஊடாகச் சென்ற சன்னம் வயிற்றுப் பகுதி ஊடாக வெளி வந்துள்ளது என்று வைத்திய வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை: