செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நிபுணர் குழுவினது அறிக்கை ஆதாரத்திற்கு சற்றலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களே போதுமானவை:அமெரிக்க இமாஜ் தொழில் நுட்ப இயக்குனர் புறொம்லி.


சற்றலைட் முலம் எடக்கப்பட்ட படங்களே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு சான்றாக உள்ளது என சற்றலைட் இமாஜ் தொழில் நுட்ப கழக இயக்குனர் புறொம்லி தெரிவித்துள்ளார். வொயிஸ் ஒஃப் அமெரிக்கா விற்கு அவர் வழங்கிய செவ்வியில் அவரு தெரிவித்திருப்பதாவது.

இலங்கையின் போர்க்குற்ற சாட்டிற்கு ஆதாரமாக எம்மால் எடுக்கப்பட்ட சற்றலைற் படங்கள் இருக்கின்றன. இந்த படங்கள் மே மாதம் 6 ஆம் திகதியும் மே 10 ஆம் திகதியும் எடுக்கப்பட்டன. இந்த படங்களில் இலங்கை அரச படைகள் சிவிலியன் பாதுகாப்பு வலையத்தினுள் கண்மூடித்தனமாக ஆட்டிலறி ஷெல் தாக்குதல்கள் மேற்கொண்டமை தெளிவாக உள்ளது.

இந்த படங்களே ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற ஆதாரத்திற்கு போதுமானவை என கூறியுள்ளார். மேலும் இந்த படங்கள் சிங்கள இராணுவத்தின் பீரங்கிகள் எவ்வாறு பொதுமக்கள் இலக்கு நோக்கி நகர்த்தபப்ட்டன என்பதனையும் தெளிவாக காட்டுகின்றன.

ஆனால் அங்கு ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த படங்கள் மிக அதிக செலவு கொண்டவை அதாவது 20 அடி சுற்றுவட்டமுள்ள படம் ஒன்றின் விலை 10 ஆயிரம் டொலர்கள் எனவும் ஆகையால் இதனை சாதாரணமாக நிறுவனங்கள் வாங்க முற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: