ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ளை அறிக்கை தயாரிக்கிறது கோமின் தயாசிறி தலைமையிலான குழு

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முறியடிக்கும் வகையிலானதொரு நகர்வாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெள்ளை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது.

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரிலேயே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஈழப்போர் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தலைமையிலான, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சட்டநிபுணர்கள் தற்போது வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெள்ளை அறிக்கை போர் பற்றிய அதிகளவு விளக்கங்கள், தகவல்களை உள்ளடக்கியதாக அமையும் என்றும் முறைப்படியான பதிலாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்ட போது இஸ்ரேலிய அரசாங்கம் செயற்பட்டதற்கு ஒப்பான வகையிலேயே பெரும்பாலும் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: