வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அரச குடும்பத் திருமணம்: கோலாகலமாகும் பிரிட்டன்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கதே மிடில்டன் திருமணம் இந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறுகிறது.

அரசக் குடும்பத்தின் திருமணத்தை வரவேற்க லண்டன் பொதுப் பொலிவு பெற்று வருகிறது. நகரில் உள்ள நீர்வீழ்ச்சிகள் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன. புல் வெளிப் பகுதிகள் சீராக வெட்டப்பட்டு பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது. வீதிகள் தோறும் பிரிட்டன் கொடிகள் காற்றில் அசைந்து உலகத் தலைவர்களை வரவேற்கிறது.

இளவரசரின் திருமணத்தை பல்லாயிரக்கணக்கான நலம் விரும்பிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தலைநகர் லண்டன் மணமகள் போல அலங்கரிக்கப்படுகிறது. பக்கிங்காம் அரண்மனைக்கு எதிராக தேசியக் கொடிகள் பிரம்மாண்ட வடிவில் பறக்க விடப்பட்டுள்ளன.

இளவரசரின் திருமண நிகழ்ச்சியை லண்டன் மக்கள் கேட்பதற்கு மரங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. அருகாமையில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் பூங்காவில் உள்ள புல் தரைத்தளம் அழகாக வெட்டப்பட்டுள்ளது.

திருமண ஊர்வலம் செல்லும் பாதையான வெள்ளை மாளிகை பகுதியில் நீர் கருவிகள் மூலம் போர் நினைவிடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. கடைக்காரர்கள் இளவரசர் திருமணத்தை நினைவு கூரும் பொருட்களை அதிக அளவில் விற்று வருகிறார்கள்.

ட்ராபல் சதுக்கம் அருகே உள்ள 19ம் நூற்றாண்டு பவுண்டைன் நீர் தெளிப்பான் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. போருக்கு எதிரான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற சதுக்கம் பகுதியில் பல ஆண்டுகள் முகாமிட்டு இருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் அகற்றப்பட்டனர். அங்கும் அழகான புல் வகைகள் நடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: