புதன், 20 ஏப்ரல், 2011

போர்க்குற்றம் தொடர்பில் மேலும் ஒரு குழு அமைக்கும் ஐ.நா

வன்னியில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து போர்க்குற்ற ஆலோசனைக்குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நாவின் அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்திருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அதனை ஆய்வு செய்வதற்கு மேலும் ஒரு குழுவை அமைக்கத்திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கையை தற்போது பரிசீலனை செய்துவரும் பான் கீ மூன், அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கத்திட்டமிட்டுள்ளார். அதனை பகிரங்கப்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்துவருவதாக ஐ.நா வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: