வெள்ளி, 22 ஏப்ரல், 2011

சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

புட்டபர்த்தி, ஏப்.22: சத்ய சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய உள்ளுறுப்புகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு போதிய பலன் இல்லை. இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் தொடர்ந்து குறைவாகவே உள்ளன என்று சத்யசாய் மருத்துவமனையின் இயக்குநர் ஏ.என்.சஃபாயா இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் அவரது ஒட்டுமொத்த உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

எனினும் டாக்டர்கள் 24 மணி நேரமும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக சஃபாயா தெரிவித்தார்.

இதயம் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மார்ச் 28-ம் தேதி மருத்துவமனையில் சாய்பாபா அனுமதிக்கப்பட்டார்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்தபூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: