திங்கள், 25 ஏப்ரல், 2011

அரசின் ஏமாற்ற போக்கு தொடர்கிறது

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை பார்வையிட இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அரசு, வவுனியா அழைத்து செல்வதாக உறுதியளித்த போதும் இன்று தம்மை அழைத்துச் செல்லவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தம்மை அழைத்து செல்வதாக உறுதியளித்த அரசிடம் இன்று அது குறித்து வினாவிய போது எதுவித பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

முன்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறி ஏமாற்றப்பட்டதுடன், இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: