வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புலம்பெயர்ந்து வாழும் கிழக்கிலங்கைத் தமிழர்களே! கவனம்... உங்கள் காணிகள் போலி உறுதிகள் மூலம் விற்பனை சிங்கள அரச அதிகாரி திடுக்கிடும் தகவல்

யுத்த காலத்தில் வெளிநாடுகளில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக குடிபெயர்ந்து சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளுக்குப் போலி உறுதிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு அந்தக் காணிகளை விற்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகத் தகவல் கிடைத்து வருவதாக மாகாண காணி நிர்வாகத்திணைக்களம் தெரிவிக்கின்றது.இது சம்பந்தமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து பெருமளவு தகவல்கள் கிடைப்பதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திலும் இது குறித்த தகவல்கள் கிட்டுவதாகவும் மாகாண காணி ஆணையாளர் டீ.சி.அனுர தர்மதாச தெரிவித்துள்ளார்.இவ்விதம் போலி உறுதிகளைத் தயாரித்து அந்தக் காணிகளை விற்கும் செயற்பாட்டுக்கு சில சட்டத்தரணிகளும் ஒரு சில அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை: