திங்கள், 25 ஏப்ரல், 2011

சிறிலங்காவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை: உலக மூத்தோர் குழு முடிவு

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தக் கோரும் அறிக்கை ஒன்றை வெளியிட நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் அங்கம் வகிக்கும் உலக மூத்தோர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இந்தக் குழு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக் தலைவர் ஆங் சாங் சூகி, முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் ஐ.நா பொதுச்செயலர் கோபி அனான், முன்னாள் ஐரிஸ் அதிபரும் மனிதஉரிமைகள் பேவையின் தலைவருமான மேரி றொபின்சன், பேராயர் டெஸ்மன் டுட்டு உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் உலக மூத்தோர் குழுவே இந்த அறிக்கையை வெளியிடவள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குழுவின் அறிக்கையானது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைக்கும் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நம்பப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: