திங்கள், 25 ஏப்ரல், 2011

சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள்

இலங்கையில் உள்ள பக்தர்கள், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வசதியாக அங்கிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

26ம் தேதியிலிருந்து பெங்களூர் செல்லும் விமானங்கள் கூடுதல் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர சிறப்பு விமானங்களும் இயக்கப்படுமாம்.

இலங்கையிலும் சாய்பாபாவுக்கு கணிசமான பக்தர்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சாய்பாபா பக்தர்தான். சாய்பாபா மறைவுக்கு ரணில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: