செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சிறிலங்கா விவகாரத்தில் மேற்குலக ஊடகங்கள் பக்கச்சார்பாக நடக்கின்றன - ரஸ்யத் தூதுவர் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் கருத்துகள் பக்கச்சார்பானவை என்றும், தமது நிகழ்ச்சி நிரல் மற்றும், நோக்கங்களை அடைவதற்காக ஒருபக்கத்தின் கருத்துகளையே அவை வெளியிடுவதாகவும் கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஸயாவின் யூரி கனாரின் விண்வெளிக்கு மேற்கொண்ட பயணத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிலங்காப் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போதே சிறிலங்காவுக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் இவ்வாறு கூறியுள்ளார்.

“ உலகளாவிய மனிதாபிமான விவகாரங்களில் மேற்குலக ஊடகங்கள் சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.

ஒரு பக்கத்தை மட்டும் அவை தெரிவு செய்து கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.

அவை தமது நிகழ்ச்சிநிரல் மற்றும் நோக்கங்களை அடைவதற்காகவே அப்படி பக்கச் சார்பான அறிக்கைகளை தயாரிக்கின்றன.

சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பாகவும் மேற்குலக ஊடகங்கள் அவ்வாறான அணுகுமுறைகளையே கடைப்பிடிக்கின்றன.

முப்பதாண்டு காலப் போரினால் காயம்பட்டுள்ள சிறிலங்காவைக் குணப்படுத்த ஐ.நா உதவ வேண்டிய பொறுப்பில் உள்ளது.

சிறிலங்கா அரசும் அதன் படைகளும் எப்போதும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டன.

தீவிரவாதத்தினால் சிறிலங்கா சந்தித்த பாதிப்புகளை நான் கடந்த சில ஆண்டுகளில் பார்த்துள்ளேன்.

தீவிரவாதத்தை அடியோடு சிறிலங்கா அடியோடு அகற்றியது குறித்து ரஸ்யா மகிழ்ச்சியடைகிறது.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: