சனி, 23 ஏப்ரல், 2011

நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் கையளிக்கப்படவுள்ளதாக Inter Press Service தகவல்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஸ்யா உட்பட ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் நிபுணர்கள் குழு அறிக்கையின் பிரதி கையளிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களை மேற்கோள் காட்டி Inter Press Service (IPS) எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை எவ்வித மாற்றங்களும் இன்றி முழுமையாக வெளியிடுவதே தங்களின் நோக்கம் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் கடந்த 21ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால், நிபுணர்கள் குழுவின் அறிக்கை நல்லிணக்கு முயற்சிகளுக்கு பாதிப்பாக அமைந்ர்விடும் என்பதால் இவ்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செலாயர் நாயகம் பான் கீ மூன் பகிரங்கப்படுத்தக் கூடாதென சிறிலங்கா அரசாங்கம் வற்புறுத்தி வருகின்றது.
அதேவேளை, இவ்வறிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கக்கூடிய வகையில் தாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் பதிலுக்கு காத்திருப்பதால் அறிக்கையை முழுமையாக வெளியிடுவதில் காலதாமம் ஏற்படுவதாகவும் பர்கான் ஹக் கூறியுள்ளார். அத்துடன், இவ்வறிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உரிய கால அவகாசத்தை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது மேற்கொளன்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இத்தகைய சர்வதேச ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு இக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலரும் போரின் போது கொல்லப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா படைதரப்பின் தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் மூத்த தளபதிகளுக்கு பயணத்தடை விதிக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துகளும் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையே தீர்மானிக்க வேண்டும். இத்தகையதொரு நடைமுறையே சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மோற்கொண்டதாகக் கூறுப்படும் போர்க்குற்றங்களின் போதும் இத்தகையதொரு நடைமுறையே பின்பற்றப்பட்டிருந்தது.
ஆனால், போரில் ஈடுபட்ட தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இல்லை என Inter Press Service தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: