செவ்வாய், 31 மே, 2011

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்கிறார்?

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு தினங்களில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது. அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். ஆனால், தேநீர் விருந்துக்கு வருமாறு ஜெயலலிதாவை அவர் அழைத்ததாக வந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.

இந் நிலையில் டெல்லி செல்லும் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

கிரைண்டர்,லேப்டாப் திட்டங்கள் குறித்து ஜெயலலிதா தீவிர ஆலோசனை:

இந் நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல்அறிக்கையில் இலவச மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த இலக்கை எட்டும் நோக்கில் அவர் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா தலைமையில் 2வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கியமான 9 திட்டங்கள் குறித்து ஆளுநர் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தத் திட்டங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது, தேவைப்படும் நிதி, அதற்கான நிதியாதாரம் உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இலவச டிவி பெட்டி திட்டத்தை என்ன செய்யலாம் என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

வருவாய்த்துறை மூலமாக இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜூன் 3ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உறையில் இந்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

படத்தின் நாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு 2 விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இன்று திடீரென ஆடுகளம் படக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இக்குழுவில் தனுஷ், வெற்றி மாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற என்னை முதல்வர் வாழ்த்தினார். மற்றவர்களையும் வாழ்த்தினார். பாராட்டு தெரிவித்தார்.

ரஜினிசாரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்றார்.

ஜெ.வுடன் லார்ட் ஸ்வராஜ் பால் சந்திப்பு:

அதே போல முதல்வர் ஜெயலலிதாவை பிரிட்டன் வாழ் தொழிலதிபர் லார்ட் ஸ்வராஜ் பாலும் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்-தொலைத்தொடர்புத் துறை திமுகவுக்கு இல்லை!

மத்திய அமைச்சரவையை அடுத்த மாதம் மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திட்டமிட்டுள்ளனர்.

இப்போது மத்திய அமைச்சரவையில் 76 உள்ளனர். ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக ஆ.ராசா, மகாராஷ்டிர முதல்வரானதால் பிருதிவிராஜ் சவான், மேற்கு வங்க முதல்வரானதால் மம்தா பானர்ஜி ஆகியோர் தாங்கள் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் பிற அமைச்சர்கள் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கவும், சில மூத்த அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும், பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம்.

மம்தா பானர்ஜி வகித்து வந்த ரயில்வே இலாகா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்படவுள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராகலாம் என்று தெரிகிறது.

சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த யாரும் தற்போது அமைச்சரவையில் இல்லை. எனவே அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

பஞ்சாப் கவர்னராக உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீண்டும் மத்திய அமைச்சராக விருப்பம் தெரிவித்துள்ளார். சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமான அவருக்கு முக்கிய காபினெட் இலாகா தரப்படலாம் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப, தொலைத் தொடர்புத் துறையை தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபில் கூடுதலாக கவனித்து வருகிறார். தொலைத்தொடர்புத் துறையை காங்கிரஸ் இனி திமுகவுக்கோ அல்லது பிற தோழமை கட்சிகளுக்கோ விட்டுக் கொடுக்காது என்று தெரியவந்துள்ளது.

இதனால் இந்தத் துறைக்கு காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே புதிய அமைச்சராக வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் திமுகவுக்கு இன்னொரு கேபினட் பதவி வழங்கப்படவும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ராசா ராஜினாமாவால் திமுக ஒரு கேபினட் அமைச்சரவை இழந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் திமுக தொடர்கிறது:

முன்னதாக ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஜெனிவாவில் மோதிக்கொண்ட அனைத்துலக சமூகம்

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனைத்துலக சமூகம் இரண்டாகப் பிரிந்து நின்று மோதிக்கொண்டது.

சிறிலங்காவுக்கு ஆதரவாக சீனா, கியூபா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

சிறிலங்கா தொடர்பாக தீர்மானம் மீது மீள்விவாதம் நடத்துவதற்கு கியூபா எதிர்ப்புத் தெரிவித்தது.

சிறிலங்கா தனது சொந்த விவகாரங்களை தானே தீர்த்துக் கொள்ளும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதுவர், அமைதியை வென்றெடுக்க சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை சிறிலங்காவுக்கு எதிராக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரான்ஸ், மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற மேறகுலக நாடுகளின் கருத்தை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஐ.நாவுக்கான ஹங்கேரியின் பிரதிநிதி அன்ராஸ் டிகனி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே நல்லிணக்கம் மற்றும் இறுதியான சமாதானத்தை சிறிலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும், ஐ.நாவின் அறிக்கையை வரவேற்றதுடன் சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சுவிற்சர்லாந்தும் வலியுறுத்தியுள்ளது.

திங்கள், 30 மே, 2011

தி.மு.க., கூட்டத்தில் தகராறு

பெரம்பலூரில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் கட்சியினர் சேர்களை எறிந்து மோதலில் ஈடுபட்டனர். பெரம்லூரில் மதியம 2 மணியளவில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசும்போது, கட்சி நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை. கட்சி தலைமை கொடுத்த பணம் நிர்வாகிகளுக்கு சரியாக சென்று சேரவில்லை என பேசினர். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் தகராறில் ஈடுபட்டனர். சேர்களை கொண்டு தாக்கினர். இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் அங்கிருந்து வெளியேறினார். தொடர்ந்து சம்பத் என்பவர் பேசும்போது, ரானா சிறை சென்ற போது கட்சியனர் அவரை மறந்து விட்டனர். கூட்டத்தில் அவரது படத்தை கூட வைக்கவில்லை என கூறினார்.

கனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


: 2ஜி வழக்கில் கைதான கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் கனிமொழிக்கு ஜாமின் மறுத்ததை அடுத்து கனிமொழி டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்‌த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக டில்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. இதனால் கனிமொழி மேலும் சில நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா?

முன்னாள் அமைச்சர் ராசா திஹார் சிறைக்கு உள்ளே வந்து மூன்று மாதங்களாகி விட்டது. வெளியில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது. உற்ற நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்து விட்டார்.ஆட்சி பறி போய் விட்டது. சக எம்.பி. கனிமொழியும் கைதாகி உள்ளே வந்து விட்டார். இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சுறுசுறுப்பாக இயங்கி வந்த ராசா, இன்று ஒரு குட்டி அறையில் டிவி, செய்தித் தாள்கள், புதிதாக கிடைத்த நண்பர்கள் சகிதம் முடங்கிக் கிடக்கிறார்.

காலையில் சின்னதாக ஒரு வாக்கிங், மாலையில் சக கைதிகளுடன் பேட்மிண்டன் என்று பொழுது போய்க் கொண்டிருக்கிறது ராசாவுக்கு. ஆரம்பத்தில் மகா இறுக்கமாக காணப்பட்ட ராசா இன்று சற்று ரிலாக்ஸ்டாக தெரிகிறார். சிறை வாழ்க்கை இப்போது அவருக்குப் பழகி விட்டது.

ராசா குறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற விஐபி கைதிகளைப் போல அல்லாமல், வெகு விரைவிலேயே சிறை வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு விட்டார் ராசா. ஆரம்பத்தில் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை. அமைதியாக இருந்தார். பிற கைதிகளுடன் பேச மாட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை. நன்றாகப் பேசுகிறார். பிற கைதிகளுடன் சகஜமாக பேசிப் பழகுகிறார். சிலர் அவருக்கு நண்பர்களாகி விட்டனர். அவரிடம் நண்பர்களாகியுள்ள பலரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாவர் என்றார்.

பிப்ரவரி 17ம் தேதி ராசா திஹார் சிறைக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர் படு சமர்த்தாக இருந்து வருகிறாராம். எந்தவிதமான பிரச்சினையும் செய்வதில்லை. மிகமிக ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறாராம்.

மிக மிகப் பெரிய ஊழல் புகாரை தன் தலை மீது வைத்திருந்தாலும், ராசாவின் பழக்க வழக்கம், படு எளிமையாக உள்ளதாம். திஹார் சிறையின் முதலாவது சிறையில், 9வது வார்டில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அதே சிறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள மேலும் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறைக்குள் வாக்கிங் போகிறார் ராசா. தான் அடைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளேயே இந்த வாக்கிங். அந்த வார்டில் உள்ள 14 கைதிகளுடனும் அவர் நண்பராகப் பழங்குகிறார்.

முதலில் சிறை சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார் ராசா. ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மட்டும் சாப்பாடு வரும். பின்னர் நண்பர்கள் அதிகமாகவே அவருக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டு பாத்திரத்தின் சைஸ் பெரிதாகி விட்டது. இப்போது தனக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டை தனது சக கைதிகளுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார் ராசா.

இட்லி, வடை, சாம்பார், ரசம், தயிர்ச் சாதம் என தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார் ராசா.

தனது அறையில் கொடுக்கப்பட்டுள்ள டிவியைப் பார்க்கும் ராசா, செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறார். மாலையில் சக கைதிகளுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடுகிறார்.

பிற கைதிகளுடன் ஒப்பிடுகையில் ராசா மிக மிக ஒழுங்குடன் இருக்கிறார் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

அவர் எந்த சிறப்புச் சலுகைகையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தமிழ் செய்தித் தாள்களை தாருங்கள் என்பது மட்டுமே அவர் வைத்த ஒரே கோரிக்கை. மற்ற எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக சிறை சாப்பாட்டையே மீண்டும் சாப்பிட ஆரம்பித்துள்ளார் ராசா.

சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்கும் ஸ்னாக்ஸ் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடிக்கடி அதை வாங்கிச் சாப்பிடுகிறார். அப்படி வாங்கும்போது சக கைதிகளுக்கும் சேர்த்தே வாங்குகிறார்.

திஹார் சிறைக்குள் பணப் புழக்கத்திற்குத் தடை உள்ளது. கூப்பன் கொடுத்துதான் பொருட்களைப் பெற முடியும். அதாவது கைதிகளை வாரத்திற்கு 2 முறை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி வரும்போது ஒரு முறைக்கு 1000 ரூபாயை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குப் பதில் கூப்பன்களாகப் பெற்று அதை கைதிகளிடம் தரலாம். கைதிகள் அந்த கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஸ்னாக்ஸ் போன்றவற்றை சிறை கேன்டீனில் பெற முடியும்.

ராசா அடைக்கப்பட்டுள்ள வார்டில் மேலும் இரு விஐபிக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் மூத்த போலீஸ் அதிகாரிகள். ஒருவரது பெயர் எஸ்.எஸ். ராத்தி. இவர் டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் ஆவார். 1997ல் கன்னாட் பிளேஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்னொருவர் ஆர்.கே.சர்மா. இவர் பத்திரிக்கையாளர் ஷிவானி பட்நாகரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராசா எப்போது வெளியே வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கனிமொழியை முதலில் பெயிலில் எடுக்கவே திமுக தரப்பு படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக திமுகவினரே கூறுகிறார்கள். எனவே ராசா இப்போதைக்கு வெளியே வரும் வழி தெரியவில்லை என்பது அவர்களின் கருத்து. ராசாவுக்கும் இது தெரிந்திருக்கும். எனவேதான் அவர் முன்பை விட இப்போது மிகுந்த ரிலாக்ஸ்டான மன நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்.

வெளியே வரும்போது மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரராக ராசா உருவெடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!

ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு வைகோவிற்கு ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவெடுக்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் வைகோ என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவையும் சந்திக்க திட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஐ.நா. குழு பரபரப்பான அறிக்கை வெளியிட்டவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரிஸ் டெல்லி வந்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சில உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை மழுங்கச் செய்ய இந்திய உதவியை பெரிஸ் கோரியதாகத் தெரிகிறது. ஆனால், போர்க் குற்றம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்தியா கோரியுள்ளது. பெரிஸ்-கிருஷ்ணா வெளியிட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் இந்தக் கோரிக்கையை இந்தியா முன் வைத்தது.

இதையடுத்து சீனா சென்ற பெரிஸ் அந் நாட்டுத் தலைவர்களை சந்தித்து ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டினார்.

இந் நிலையில் இலங்கையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்கேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு.

3 நாள் பயணமாக டெல்லி செல்லும் வழியில் நேற்றிரவு சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஐ.நா. சபையின் கிரிமினல் நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது.

தமிழர் பிரச்சனை குறித்து தன்னைச் சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ஜெயலலிதா என்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஓரிரு தினங்களில் அவரை சந்திப்பேன்.

இலங்கைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் அப்போது விவாதிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விஷயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

மேலும் இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தும் பணிக்காக இந்திய அரசு வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்தியா- இலங்கை வெளியுறவு துறை மந்திரிகள், செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

பின்னர் ரணில் இன்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரணிலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது.

இலங்கை திரும்பும் முன் ரணில், ஜெயலலிதாவையும் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது-ஜேவிபி எம்பி:

இந் நிலையில் இலங்கை அரசு மீது இந்தியா மிகத் தந்திரமான முறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் எம்பி அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கடந்த காலங்களில் இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பலாலி விமானத் தள விஸ்தரிப்பு, காங்கேசன் துறை துறைமுக அபிவிருத்தி போன்ற செயல் திட்டங்கள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட இலங்கையின் உரிமைகளாகும்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இந்தியாவின் ஆதரவைப் பெற டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பெரிஸின் பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் கூட இந்தியாவின் நலன்கள் தான் முன் வைக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்கப்பட்டு இந்தியாவுக்கு அதில் நிரந்தர அங்கத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கையின் ஆதரவு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இந்தியா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அந்த கூட்டறிக்கையில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் அமைச்சர் பெரிஸின் பயணத்தை இந்தியா தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி

எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் இல்லத்திற்கு திரும்புகையில்., நிருபர்கள் சூழ்ந்து கொண்டு சபையில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனகேட்டனர். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, கூர்ந்து கவனியுங்கள் என்று ஒரு வரியில் முடித்து விட்டு கிளம்பினார்.

ஞாயிறு, 29 மே, 2011

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சனல்-4 காணொலிப்பதிவு பற்றிய அறிக்கை

சனல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான- தமிழ்க் கைதிகளை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் அடங்கிய, காணொலிப்பதிவு அடங்கிய அறிக்கை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிக்குப் புறம்பான, தன்னிச்சையான படுகொலைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையிலேயே இந்தக் காணொலிப் பதிவு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனை அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோ ஹெய்ன்ஸ் சமர்ப்பிக்கவுள்ளார்.

சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காணொலிப் பதிவு போலியானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளராக கிறிஸ்ரோ ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது அறிக்கை இதுவாகும்.

இவர் கடந்த ஆண்டு சிறிலங்கா வருவதற்கு முற்பட்டபோது சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இவருக்கு முன்னர் சிறப்பு அறிக்கையாளராக இருந்த பிலிப் அஸ்ரன் கடைசியாக 2005ம் ஆண்டு சிறிலங்கா வந்திருந்தார்.

அதற்குப் பின்னர் அவருக்கும் சிறிலங்கா வர அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவை சீனாவும் கைவிட்டது - கவலையில் மகிந்த அரசாங்கம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் சீனப் பயணத்தின் போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிட முடியாது போனதும், ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக சீனாவிடம் இருந்து தெளிவான வாக்குறுதியை பெற முடியாது போயுள்ளதும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

“புதுடெல்லிப் பயணத்தின் பின்னடைவை அடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் சீனா சென்றிருந்தார்.

பீஜிங்கில் அவருக்கு அதிகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் பேச்சுக்களின் பின்னர் கூட்டறிக்கையோ அல்லது அறிக்கையோ வெளியிடப்படவில்லை.

வெளிவிவகார அமைச்சின் சார்பில் பீரிஸ் கொழும்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப் பணித்திருந்தார்.

இந்தியாவுக்கு பீரிஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் எவரையும் அழைத்துச் செல்லவில்லை.

இந்திய- சிறிலங்கா உறவுகள் குறித்த முக்கியமான தருணத்தில் பேச்சுகளுக்குச் செல்லும்போது வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உதவியாளர் இன்றி சென்றது இதுதவே முதல்முறை.

ஆனால் பீஜிங் சென்றபோது அவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியான சோபினி குணசேகரவை அழைத்துச் சென்றிருந்தார். இவர் முன்னர் பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றியவர்.

சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்த பின்னர் கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அது சீனாவுடன் சேர்ந்து பீரிஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போனதை வெளிப்படுத்தியது. அப்படியான கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அது மிகவும் கனதியானதாக இருந்திருக்கும்.

புதுடெல்லியில் பீரிஸ் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக கலந்துரையாடியிருந்த போதும் இந்தியாவுடனான கூட்டறிக்கையில் அதுபற்றிக் குறிப்பிடப்படவேயில்லை.

பீஜிங்கில் ஐ.நா அறிக்கை பற்றிக் கலந்துரையாடப்பட்டிருந்த போதும், அதற்கு விரோதமான கருத்தை சீனா வெளியிடவில்லை.

மிகவும் முக்கியமான இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்து உறுதியானதொரு வாக்குறுதியை பீரிஸ் பெறமுடியாது போயுள்ளது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளது.

சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் இந்தப் பேச்சுக்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை, பீரிஸ் வெளியிட்ட அறிக்கையை விட சற்று வேறுபாடானதாகவே இருந்தது.

பேச்சுக்கள் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை எதையும் வெளியிடாத சந்தர்ப்பங்களில், சிக்குவா செய்தி நிறுவனம் வெளியிடும் செய்தியையே அரசியல் மற்றும் இராஜதந்திர ஆய்வாளர்கள் சீனாவின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக் கொள்கின்றனர்.

பீரிசின் சந்திப்புக்குப் பின்னர் சின்குவா வெளியிட்ட செய்தியில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட ஐ.நாவின் அறிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்த அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் கூட அதில் கூறப்படவில்லை.

பீரிஸ் கூறியது போல இந்த அறிக்கை பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தால், சீனா எதற்காக இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் மௌனமாக இருக்கிறதென்பது மர்மாக உள்ளது“ என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

கனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே கனிமொழி கைது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மன்மோகன் சிங் டெல்லி திரும்பினார். வழியில், விமானத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திமுகவுடனான கூட்டணியில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்மோகன் சிங்,

இப்போதுவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் திமுக நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

கனிமொழி கைது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியாது என்றார்.

தான் ஊர் திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப் போவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, இது மக்கள் தீர்ப்பு என்றார்.

பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜிகாதி அமைப்புகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே பயங்கரவாதம் பாகிஸ்தானையும் திருப்பித் தாக்கும் என்பதை அந்த நாடு உணர வேண்டும். அண்மையில் கராச்சி கடற்படைத் தளத்தில் நடைபெற்ற தாக்குதலை படிப்பினையாக எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஹெட்லி, பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்து அடுத்தடுத்து கூறி வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, நாம் இதற்கு முன்பு சொல்லாததை ஹெட்லி கூறி விடவில்லை. அனைத்தும் நாம் ஏற்கனவே கூறி வரும் புகார்கள்தான், குற்றச்சாட்டுக்கள்தான்.

ஹெட்லி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் புதிதாக எதையும் கூறவில்லை. மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

டேவிட் ஹெட்லி மீதான விசாரணை முடிந்த பின்னர் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதிரான கிண்டல் போஸ்டர்.


மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை மு.க.அழகிரிக்கு பிடித்த விஷயம் போஸ்டர்தான்.இதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள். பெரிதாக என்று சொல்வது கூட சிறிய விஷயம் , பிரம்மாண்டமாக போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டுவார்கள்,அடித்த போஸ்டரில் 50 சதவீதத்தை அவர் குடியிருக்கும் மதுரை டி.வி.எஸ்.,நகர் பகுதியில் ஒட்டுவார்கள்.அவர் பார்வை படும்படியான சுவரானது, ஊருக்கு போக வழிகாட்டும் பெயர் பலகையாக இருந்தால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் ஒட்டுவார்கள்.ஆனால் மறந்தும் கூட அவரது வீட்டு சுவரில் ஓட்டமாட்டார்கள்,காரணம் அண்ணன் கோவிச்சுக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணன் வீட்டு சுவர் மட்டும் பாழாகிவிடக்கூடாது என்ற கவலை ஒரு பக்கம். இப்படி போஸ்டர் ஒட்டுபவர்களை, கருணாநிதி முன்னிலையிலேயே துரைமுருகன் போன்றவர்கள் அரசு விழாவிலேயே, "போஸ்டர் கிங்' என்று பாராட்டி பட்டம் கொடுத்து வேறு மகிழ்வார்கள். இத்தயை பாராட்டிற் கு பிறகு மதுரையில் போஸ்டர் ஒட்டுவதற்கு கேட்கவேண்டுமா என்ன.?அதுவும் சமீபத்தில் நடந்த அவரது இல்ல திருமண விழாவின் போது, மதுரையில் போஸ்டர் இருந்ததா அல்லது போஸ்டருக்குள் மதுரை இருந்ததா என்று வித்தியாசப்படுத்திப்பார்க்க முடியாதபடி காணப்பட்டது.சரி ஏதோ "குழந்தைத்தனம்' மாறாமல் போஸ்டரில் சந்தோஷம் கொள்கிறார், இருந்துவிட்டு போகட்டும் என்ற நிலையில்; இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது இருந்தால், அவர்களை அசிங்கப்படுத்தவும் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை, இவரது ஆதராவாளர்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான் மகா கொடுமை.இது மாதிரி போஸ்டர்களை இவர் ஒரு போதும் கண்டித்தது இல்லை.மாறாக மறைமுக ஊக்கப்படுத்துகிறார் என்று எண்ணும்படியாக முதல் நாள் நூற்றுக்கணக்கில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மறுநாள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்படும்.அடுத்தவரை களங்கப்படுத்தும், கண்ணியக்குறைவை ஏற்படுத்தும், கவலையை உண்டாக்கும் இது போன்ற போஸ்டர்களை மதுரை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை. இப்படி போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்திய மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக ஒரு போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் வலம்வருகிறது.அந்த போஸ்டரை ஒட்டியவர் அழகிரி ஆதராவாளர்கள் போல பொய், புனை பெயரில் ஒளிந்துகொள்ளவில்லை., தனது பெயர்,படம் மற்றும் மொபைல் எண்ணை போட்டு தைரியமாக ஒட்டியுள்ளார்.போஸ்டரில் உள்ள வாசகங்களில் கிண்டலும்,கேலியும் கொப்பளிக்கிறது. காணவில்லை 2011 ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க.,என்ற கட்சியே காணமால் போய்விடும் என்று கூறிய ,மு.க.அழகிரியை காணவில்லை விபரம் பெயர் : மு.க.அழகிரி அப்பா பெயர் :தட்சிணாமூர்த்தி(எ)கருணாநிதி பிறந்தது :சென்னை,கோபாலபுரம் வளர்ந்தது :மதுரை அவணியாபுரம் வேலைபார்ப்பது :ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர் சாதனை :தா.கிருஷ்ணன் கொலை,ஆலடிஅருணா கொலை.... இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் இவண்எம்.ஜி.ஆர்.வாசன்,பகுதிகழக செயலாளர்,திருவல்லிக்கேணி.9941172464 இப்படிப்பட்ட வாசகங்களுடன் வண்ணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பலரும் நின்று படித்து செல்கின்றனர்,அதிலும் ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர் வேலை என்ற வார்த்தையை படித்துவிட்டு சிரிக்கின்றனர்.எது,எப்படியோ தலைவலியோ,முதுகுவலியோ தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள், அது போல மற்றவர்களை போஸ்டர் மூலம் புண்படுத்துவதால் ஏற்படும் வேதனை எப்படி இருக்கும் என்பதை இப்போது அழகிரி நிச்சயம் உணர்ந்து இருப்பார் என்று நம்பலாம்.-ஆனந்தி.

கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி. கடந்த 20-ந் தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி.யில் பங்குதாராக உள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிக்கிய சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறிய குற்றச் சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்ததால் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு கடந்த 23-ந் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.
கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர் மட்டும்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மறுநாள் (24-ந் தேதி) இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு நீதிபதி அஜீத் பரிகோகே ஒத்தி வைத்தார்.
கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை விவரங்களையும் அன்று கோர்ட்டில் செய்யுமாறும் நீதிபதி உத்தர விட்டார். நாளை (30-ந் தேதி) கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி சார்பிலும் வக்கீல் ஆஜராகி வாதாடுவார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின்பு கனிமொழி ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு வழங்குவார். வக்கீல்கள் வாதம் நீண்டு கொண்டே போனால் தீர்ப்பு வழங்க தாமதம் ஆகும்.

நாளை கருணாநிதி பதவியேற்கிறார்

தமிழக சட்டசபையில் கடந்த 23ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். திருவாருர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்றைய தினம் டில்லிக்கு கனிமொழியை பார்க்க சென்றதால் அவரும் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை. அன்றைய தினமே அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கவில்லை. கடந்த 27-ம் தேதி தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் சிவபதி, மனோகரன் இருவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் நாளை (திங்கட்கிழமை) எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கிறார்கள். சபாநாயகர் அறையில் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சியால் திடீர் மாற்றம்

குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். "கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது' என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.


"கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்' என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்த அன்பில் பொய்யாமொழி குடும்ப திருமணம் நடந்த போது, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கரை வேட்டியை தவிர்த்து, பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்தார். அவ்விழாவில் பேசிய ஸ்டாலின், "அன்பில் பொய்யாமொழியின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், பட்டுக்கு மாறினேன்' என பேசினார். அடுத்து பேசிய கருணாநிதி, "நாம் திராவிட கொள்கையில் தோய்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் நம் கரை, அடையாளங்களை மாற்றக் கூடாது' என, பட்டு வேட்டி, சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


சென்றாண்டு, செப்டம்பர் 25ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில், பெரிய கோவில் நந்தி மண்டபத்தில், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 நடனக் கலைஞர்கள் ஒரு சேர நடனமாடினர். இந்நிகழ்ச்சியை ரசிக்க வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத்துண்டு அணிந்து வந்தார். முன்னதாகவே, மேடைக்கு வந்துவிட்ட கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தார் மற்றும் அமைச்சர்கள் ஓடி வந்து, கருணாநிதி பட்டாடை அணிந்து வந்ததை புகழ்ந்தனர். "தி.மு.க., படுதோல்வி, கனிமொழி கைது, ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் குழப்பம்' என, பல தோல்விகளுக்கு இடையே, கடந்த சில நாட்களாக, கருணாநிதி மஞ்சள் துண்டை தவிர்த்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு அணிந்து வருகிறார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத்துண்டு அணிந்திருந்தார்.


இதுபற்றி ஜோதிடர்கள் சிலர் கூறியதாவது: மஞ்சள் துண்டு குருபலத்துக்காக அணிவது. மே 8ம் தேதி நடந்த குருபெயர்ச்சி கருணாநிதிக்கு சாதகமாக இல்லை. குரு பகவான், 12ல் உள்ளார். இந்த சூழலில் அவர் மஞ்சள் நிற துண்டு அணியாமல், வெள்ளை துண்டு அணிந்தால், அது அவருக்கு அமைதியை தரும். வெள்ளை நிறம் பொதுவாக சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய ராசிகளுக்கானது. குருவின் பலவீனத்தை குறைத்து, அமைதி தரும் என்பதால் இம்மாற்றம் நடந்துள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும் குருபெயர்ச்சி வரை, அவர் வெள்ளைத் துண்டு அணிந்து, அதற்கான பரிகாரத்தை அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ மேற்கொண்டால், அவருக்கு மன அமைதி ஏற்படும். அதனால் தான் கருணாநிதி அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறி, மீண்டும் மஞ்சள் துண்டு அணிகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/News

அம்மை நோயால் இறப்பு அதிகரிப்பு

அம்மை நோய்க்கான மருந்து பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இறப்போரின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அம்மைநோய் பெரும்பாலும் குழந்தைகளை தாக்குகிறது. இதற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் அம்மை நோய்யை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது.10 ஆண்டுகளில் முதல் 7 ஆண்டுகளை காட்டிலும் கடைசி மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்நோயால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 355 என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.2008-ல் 111 குந்தைகள், 2009-ல் 116, 2010-ல் 128 என அதிகரித்து காணப்படுகிறது இவர்களில் பெரும்பாலானோர் 12 முதல் 23 மாத குழந்தைகளாவர். தேசிய அளவில் அம்மை போன்ற நோய் தடுப்பு குறித்த கருத்துருக்களை சிறந்த அறிஞர் குழுக்களை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்று இந்திய மெடிக்கல் ஆராய்ச்சியின் முன்னாள் இயக்குனர் என்கே கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் 11.3 சதவீத குழந்தைகள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

சனி, 28 மே, 2011

கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!

கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், அதை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கவும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் (Central Board of Direct Taxes-CBDT) தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சட்டப் பிரிவு உறுப்பினர், அமலாக்கப் பிரிவு இயக்குனர், வருவாய் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல், கரன்சிகள் பிரிவு டைரக்டர் ஜெனரல், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பண்ட் டிரான்ஸ்பர் பிரிவு இணைச் செயலாளர், நிதித்துறை புலனாய்வுப் பிரிவின் இணைச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு ஆணையர் இந்தக் குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

கறுப்புப் பணத்தின் சட்ட விரோத பரிமாற்றத்தை தடுப்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது ஆகியவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்களை இந்தக் குழு ஆராய்வதோடு, அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

கறுப்புப் பணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கும்.
6 மாத காலத்திற்குள் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு புதிய
சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் என்று தெரிகிறது.

இந்தக் குழு அமைக்கப்பட்டது கறுப்புப் பணத்துக்கும் ஊழல் தடுப்புக்கும் எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவரை நியமித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சையத் முனீர் ஹோடா பதவி விலகியதையடுத்து அய்யருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் மதுரை, கரூர் மாவட்டக் கலெக்டராகவும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்த பெருமையும் இவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த முனீர் ஹோடா பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவருக்கு திமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இப்போது ஆட்சி மாறிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்...சீக்கிரம் வருவேன்"-கலங்க வைத்த ரஜினி

ரஜினி சிங்கப்பூர் கிளம்பும் முன் தன் ரசிகர்களுக்காக பேசியதன் ஆடியோவை அவரது இளைய மகள் செளந்தர்யா நேற்று இன்டர்நெட்டில் வெளியிட்டார்.

அந்த ஆடியோவில், தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய சிரிப்பை உதிர்த்தபடி, 'சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா' என்று அவர் ரசிகனுக்கு தனிப்பட்ட முறையில் உடைந்த குரலில் சொன்னது… அத்தனை ரசிகர்களையும் உலுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

தங்கள் தலைவரின் குரலைக் கேட்டு மனம் கலங்கி அழுதவண்ணம் உள்ளனர் ரஜினியின் பல ரசிகர்கள்.

அந்த ஆடியோவில் உள்ள ரஜினியின் வாய்ஸ் இது தான்:

“ஹலோ… நான் ரஜினிகாந்த் பேசறேன்… ஹாஹாஹாஹா…. ஹாப்பியா போய் வந்துக்கிட்டிருக்கேன் நான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…

நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…?.

பணம் வாங்கறேன், ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்வளவு அன்பு கொடுக்கறீங்கன்னா… இதுக்கு எதை நான் கொடுக்கிறது?.

டெஃபனிட்டா நீங்க எல்லாரும், உலகம் முழுக்க இருக்கிற நம்ம பேன்ஸ் எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் செய்வேன் கண்ணா.

கடவுள் கிருபை எனக்கு இருக்கு. குரு கிருபை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை என் மேல இருக்கு… நான் சீக்கிரம் வந்துடறேன். ஓகே… பை… குட்".

மகிழ்ச்சியாக இருக்கிறார்-ராமச்சந்திரா:

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நடிகர் ரஜினிகாந்த் மே 13ம் தேதி நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் அவருடைய குடும்ப டாக்டர்கள் தொடக்கத்தில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். இரு முறை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்த 13ம் தேதியில் இருந்து ரஜினிகாந்துக்கு முறைப்படி பொறுப்பாக பல தரப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரே உணவை உட்கொள்கிறார். உலாவுகிறார். குடும்பத்தினருடன் பொழுது போக்குகிறார். அவர் ஒரு மாற்றத்திற்காவும், ஓய்வு எடுக்கவும் சில குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க கோரிக்கை

சித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கவேண்டும் என பாளை., அறுபத்துமூவர் அறக்கட்டளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பாளை., ஸ்ரீ அறுபத்துமூவர் அறக்கட்டளை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மின்வெட்டு, விலைவாசிஉயர்வு, ஊழல், குடும்ப ஆதிக்கம் இவையெல்லாம் முந்தைய அரசை வீழ்த்த காரணங்களாக அமைந்தன. தமிழர்களின் பெருமையும், சிறப்பையும் எடுத்துரைக்கும் சித்திரை மாதம் முதல் நாளான சித்திரை விஷூ தினத்தை தமிழர் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்கவேண்டும். தமிழகத்தில் தங்களின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் நலத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற்சி?: கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு

திமுக எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறையில் உள்ள நிலையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.

கனிமொழியை திகார் சிறையில் கருணாநிதி கடந்த திங்கள்கிழமை சந்தித்தார். ஆனால், சோனியாவையோ பிரதமரையோ அவர் சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந் நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக பல மறைமுக முயற்சிகளில் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை

சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து, அழைத்து வந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைக்கும் சம்பிரதாயம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த ருசிகர தகவல் வருமாறு: லோக்சபாவானாலும், சட்டசபை ஆனாலும், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கரம் பிடித்து அழைத்துச் சென்று, ஆசனத்தில் அமர வைப்பது வழக்கம். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால், அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த மரபுக்கு பின்னால், ஒரு பெரிய வரலாறே உள்ளது. இந்திய ஜனநாயகம் என்பது, பிரிட்டிஷ் ஜனநாயகத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டது. இங்கிலாந்து பார்லிமென்ட் மாதிரியே, இந்திய பார்லிமென்டும், சட்டசபையும் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில், சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார்; பார்லிமென்டும் இருக்கும். இங்கே இந்தியாவில் அந்த முறையை பின்பற்றியபோது, மன்னர் இல்லை; ஜனாதிபதி இருக்கிறார்.


இங்கிலாந்தில், மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய விரும்புவார். அதற்கு பார்லிமென்டின் அனுமதி வேண்டும். பெரும்பாலும், பார்லிமென்ட் உறுப்பினர்கள், மன்னரது விருப்பத்தை நிராகரித்து விடுவர். இச்செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் சபாநாயகர். பார்லிமென்ட் தலைவர் என்று பெயர் வைக்காமல், "ஸ்பீக்கர்' என்று பெயர் வைத்தனர். பார்லிமென்டின் கருத்தை மன்னரிடம் எடுத்து உரைப்பவர் தான், "ஸ்பீக்கர்!' எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம், மன்னருக்கு உண்டு. ஆகவே, மன்னர் விரும்பியது நடக்காது என, "ஸ்பீக்கர்' எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்க, தலையை வெட்டி எடுக்க, ஆணையிடுவார்.


இது பலமுறை நடந்ததால், யாருமே, "ஸ்பீக்கர்' பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே, புதிய பார்லிமென்ட் அமைந்ததும், இன்னார் தான், "ஸ்பீக்கர்' என்று அறிவித்ததும், அவர் உடனே, தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அப்போது, அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பர். இது தான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, "ஸ்பீக்கர்' ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. "ஸ்பீக்கரின்' தலையை எடுங்கள் என்று சொல்லக் கூடிய மன்னரும் இங்கு இல்லை. ஆனாலும், அவரது கரங்களை பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது. சபாநாயகர், "தப்பித்தால் போதும்' என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை, நாங்கள் எந்த நாளிலும் உருவாக்க மாட்டோம் என, ஆளுங்கட்சி சார்பில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

http://www.dinamalar.com


இந்தியர்களுக்கு விசா: இலங்கை புது முடிவு

இலங்கை செல்லும் இந்தியர்கள் கொழும்பு விமான நிலையம் சென்று விசா பெறும் நடைமுறையை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அந்த நிலையை மாற்றி, இலங்கை பயணத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விசா பெறும் முறையை கொண்டுவரவும் இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தற்சமயம் இலங்கை சென்று விசா பெறும் நடைமுறை சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் என அந்நாடு அறிவித்துள்ளது.

வெள்ளி, 27 மே, 2011

ரஜினி தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை... உண்மை தான் என்ன ?

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 13ந் திகதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மேலதிக சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.

அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின்
சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே பஸ் ஆற்றில் பாய்ந்து மூழ்கி 6 பேர் பலி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பஸ் ஆற்றில் பாய்ந்ததில் அதில் பயணித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

திருவாரூரிலிருந்து ஒரு பேருந்து பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மயிலாடுதுறை அருகே முடிகொண்டான் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த திருமலைராயனாறு ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் பஸ் நீரில் மூழ்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் ஆற்றில் பாய்ந்ததைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் குதித்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த 30 பேர் திருவாரூர் மற்றும் நன்னிலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்?

தமிழகத்தில், தி.மு.க., அரசு அறிவித்த, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.


தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், தமிழக அரசின் கணக்குப்படி, 23 சதவீதம் பேர், தற்காலிக வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள், 22.08 லட்சம் குடிசைகளில் வசிக்கின்றனர். இத்தகையோருக்கு, நல்ல தரமான வீடு கிடைக்க, "இந்திரா ஆவாஸ் யோஜ்னா' என்ற பெயரில், மத்திய அரசின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதால், திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசின் பங்காக, தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 303.89 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதனுடன், தமிழக அரசு, தன் பங்காக, 101.30 கோடி ரூபாயையும் சேர்த்து, வீடு கட்டும் பணியை மேற்கொள்கிறது. இதன் மூலம், ஒரு நிதியாண்டுக்கு, 1.34 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒவ்வொரு குடும்பத்துக்கும், 218 சதுர அடி பரப்பளவுக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவில் வீடு கட்டித்தரப்படுகிறது. இதற்காகும் செலவில், மத்திய அரசிடமிருந்து, 45 ஆயிரம் ரூபாயும், மாநில அரசிடமிருந்து, 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இது, தமிழகத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்போரின் தரமான வீடு தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதாக இல்லை. இதனால், தமிழகத்தில் ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு நியாயமான விலையில் குடியிருப்பு கிடைக்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி கழகம் ஆகியவை உள்ளன.


இவற்றின் திட்டங்கள் இருந்தாலும், தமிழகத்தில் குடிசைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே, குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த, சிறப்பு திட்டமாக, அரசு மானியத்துடன் குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், ஆறு ஆண்டுகளில் அனைத்து குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். ஆண்டுக்கு, மூன்று லட்சம் கான்கிரீட் வீடுகள், 2,250 கோடி ரூபாயில் கட்டப்படும். 210 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும், 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. 22.08 லட்சம் பேர் குடிசைகளில் இருந்தும், 12.92 லட்சம் பேர் மட்டுமே, இத்திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வீடு பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.


கட்டுமானப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்த நிலையில், இந்த திட்டத்தில் வீடு கட்டுவதற்காக, அரசு தரப்பு மானியத் தொகையை, 75 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி வரை, இத்திட்டத்தில், 93 ஆயிரத்து, 314 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன என்றும், இதில், 60 சதவீதம் அளவுக்கான வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக, இதை அமலாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மார்ச் முதல் வாரத்தில், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு அமலாக்கப்பட்ட திட்டங்கள், மக்களின் உண்மையான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. உதாரணமாக, கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, 210 சதுர அடியாக இருப்பதால், பல இடங்களில் பயனாளிகள், அரசு மானியத்தைவிட கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, அரசு நிர்ணயித்த வீட்டின் பரப்பளவு, மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. இது போன்ற குறைபாடுகள், இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்ட, 2 சென்ட் நிலம் மற்றம் குடிசைவாசிகளுக்கு, 300 சதுர அடி பரப்பில், சூரிய சக்தி மின் வசதி உள்ளிட்ட, பசுமை கட்டட தொழில்நுட்பத்தில் அரசு மானியத்துடன் வீடுகள் கட்டித் தரப்படும்' என, அறிவிக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், வீட்டின் பரப்பளவு, 210லிருந்து, 300 சதுர அடியாக மாற்றுவது, அரசு மானியத்தை, 1.5 லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களை செய்வது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெறுவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு, கவர்னர் உரை அல்லது பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி, இன்னும், 12 லட்சம் வீடுகள் கட்ட, நிதி ஒதுக்க வேண்டும். வீடு ஒன்றுக்கு, 1.5 லட்சம் வீதம், மொத்தம், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

http://www.dinamalar.com/


ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்டாலின்

ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.சஸ்டாலின் கூறினார்.

சபாநாயகர் ஜெயக்குமாரைப் பாராட்டி இன்று சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்,

சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள்.

எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க் கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்தால் தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.

ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு பாம்புடன் வந்த கவுன்சிலர்

குடிநீர் தொட்டி வளாகத்தில் புதர் மண்டிக் கிடப்பதை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு கவுன்சிலர் பாம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நகர்மன்ற கூட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்தது. கூட்டம் துவங்கும் முன் 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது அலி தனது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 2 சாலைகள் தரமற்று இருப்பதாகவும், மேலும் இரண்டு சாலைகளில் கற்கள் பரப்பப்பட்டு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்ட அரங்கின் வாயில் அமர்ந்து தர்ணா செய்தார். அப்போது ஆணையாளர் செழியன் நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வந்தார். அவரை முகமது அலி மற்றும் மமகவினர், பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு விடாமல் முற்றுகையிட்டனர்.

அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் ஆணையாளர் கூட்ட அரங்கிற்கு செல்ல முடியாமல் திரும்பினார். நகர்மன்ற தலைவர் கோமதி நாயகம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியே வந்தார். அவரையும் முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஒப்பந்தகாரரின் பிரதிநிதி இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை பணியை முடித்து தருவதாக எழுதி கொடுத்தார். அதில் நகர்மன்ற தலைவரும் கையெழுத்திட்ட பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கூட்டம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன் 10-வது வார்டு உறுப்பினர் ராசப்பா தனது வார்டில் உள்ள குடிநீர் தொட்டி வளாகம் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் நிறைந்திருப்பதாகவும், மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கிற்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்காமல் இருப்பதையும் கண்டித்து கையில் பாம்புடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கை புறக்கணிக்க வேண்டும் – தென்கொரிய ஊடகமும் அழைப்பு

சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள போர்க்கருத்தரங்கில் தென்கொரியா பங்கேற்கக் கூடாது என்று தென்கொரிய ஊடகம் ஒன்றில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘ஜுங்அங் டெய்லி‘ என்ற தென்கொரிய ஊடகத்தில் சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டியுள்ள பிரட் அடம்ஸ், சிறிலங்கா இராணுவத்தின் போர்க்கருத்தரங்கை ஏனைய நாடுகளுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் மோசமான முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கை அமெரிக்கா, கனடா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அவுஸ்ரேலியா போன்றவற்றுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தெனிகொரியா இதில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்றாலும் கூட, போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு தென்கொரியா அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவிலும் தொடர்கிறது பீரிசுக்கு நெருக்கடி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தோனேசியாவில் எகிப்து வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜி.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த அவரால்- நேற்றுவரை எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அரபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது.

அதேவேளை, ருமேனிய வெளிவிவகார அமைச்சர் டொரு கோஸ்ரியாவை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பேரேரா தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கும், சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

120 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றும் இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையே இதுவரை சந்திக்க முடிந்துள்ளதானது, பீரிஸ் அங்கும் நெருக்கடியை எதிர்நோக்குவதைப் புலப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான நாடுகள் இருதரப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார, வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குமே இந்தச் சந்திப்பில் முன்னுரிமை கொடுத்து வருகின்றன.

ஆனால் சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசினால் அணுக முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம். தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவிப்பு.

2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே!
சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

\"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"

ஆ.அன்பரசன்

ஊடகப்பிரிவு

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்.http://www.seithy.com


தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா? கருணா‌நி‌தி கே‌ள்வ‌ி

தமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரசு ‌நிறு‌த்‌தியு‌ள்ளதா? எ‌ன்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌த்‌தி‌ல் உ‌ள்ள தமது பாடலை ‌நீ‌க்குவது தவற‌ல்ல எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌ல்‌வியாள‌ர்க‌ள் ஆ‌ய்வ‌றி‌க்கை அடி‌ப்படை‌யி‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌ல் அ‌றி‌முக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது எ‌ன்று‌ம் கருண‌ா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ரூ.200 கோடி பு‌த்தக‌த்தை அரசு ‌‌வீணடி‌ப்பது ச‌ரியா எ‌‌ன அரசு எ‌ண்ண வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி க‌ட்‌சிகளு‌ம் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌தி‌ட்ட‌ம் தொடர ஆதரவு அ‌ளி‌த்து‌ள்ளன எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வியாழன், 26 மே, 2011

போர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது

இனப் படுகொலை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச் கைது செய்யப்பட்டுள்ளார்.

செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வியாழக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார்.

போலி அடையாள ஆவணங்களுடன் அவர் தனது உறவினருக்கு சொந்தமான சிதிலமடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்படும் போது எதிர்ப்புக் காட்டவில்லை என்று செர்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை அவர் பொதுமக்கள் மத்தியில் தென்பட்டபோது இருந்த தோற்றத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அவர் மிகவும் வயதானவராக தோன்றுகிறார்.

இந்த கைதானது செர்பிய வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர் டாடிக் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து புதிய அத்தியாயத்தை துவக்க இந்த கைது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். சிரபெரநிட்சா இனப்படுகொலை உள்ளிட்ட போஸ்னிய போர் குற்றம் தொடர்பாக ஜெனரல் மிலாடிச் குற்றத்தை எதிர்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிலாடிச் பெல்கிரேடில் உள்ள ஒரு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அதே நேரம் அவரை தி ஹேக்கில் இருக்கும் சர்வதேச போர் குற்ற தீர்பாயத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஜெனரல் மிலடிச் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்ரநிட்சா என்ற இடத்தில் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு.

செர்பியத் தலைவர் ஸ்லோபோதான் மிலாசவிச் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட 2000 மாவது ஆண்டு வரை மிலாடிச் பெல்கிரேடில் வெளிப்படையாகவே வாழ்ந்து வந்தார். இவரின் கைதை பல உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்

http://www.bbc.co.uk

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!

ஊழலில்தான் இந்தியா படுவேகமாக மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பாய்ச்சல் காட்டுகின்றது என்றால், தற்போது உலகின் மிக அமைதி குறைவான, அதாவது ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வதேச ஆய்வு அமைப்பான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் உலக அளவில்,உலகின் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வுக்கு மொத்தம் 153 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வன்முறை தாக்குதல், மோதல்களினால் ஏற்படும் மரணம், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இராணுவத்திற்கு செலவிடப்படும் அளவு ஆகியவை இந்த ஆய்வுக்கு பரிசீலிக்க எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடம் நியூசிலாந்துக்கும், மூன்றாவது இடம் ஜப்பானுக்கும், நான்காவது இடம் டென்மார்க்கிற்கும், ஐந்தாவது இடம் செக் குடியரசுக்கும் கிடைத்துள்ளது.

மேலும் ஆறாவது இடம் ஆஸ்திரியாவிற்கும், ஏழாவது இடம் பின்லாந்துக்கும், எட்டாவது இடம் கனடாவுக்கும், ஒன்பதாவது இடம் நார்வேக்கும், பத்தாவது இடம் ஸ்லோவேனியாவுக்கும் கிடைத்துள்ளன.

அதே சமயம் உலக நாடுகளில் மிக அமைதி குறைவான நாடுகளின் பட்டியலில் நாடாக சோமாலியா கடைசி இடத்தில் உள்ளது.

ஆட்சி நிர்வாகமே இல்லாத சோமாலியா கடைசி இடத்தை பிடித்ததில் வியப்பேதும் இல்லை என்றாலும், உலக நாடுகளில் மிக அமைதி குறைவான, அதாவது ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இந்தியர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்தமுள்ள 153 இடங்களில், இந்தியாவுக்கு 135 ஆவது இடமும், பாகிஸ்தானுக்கு 146 ஆவது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 150 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

அதே சமயம் 2008 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சரிவின் தாக்கத்தினால் ஐஸ்லாந்தின் வங்கிகள் பெருமளவு அழிவை சந்தித்ததோடு, ஐஸ்லாந்து முதல்முறையாக தனது நாட்டின் சில இடங்களில் கலவரத்தையும் கண்டது.

ஆனால் மூன்றே ஆண்டுகளில் மீண்டும் தன்னை கட்டமைத்துக் கொண்டு, உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில், அதாவது உலகிலேயே நிம்மதியாக வாழக்கூடிய நாடுகளில் முதலிடத்தை பிடித்து,உலக நாடுகளை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளதோடு, இதுவரை அந்த இடத்தில் இருந்த நியூசிலாந்தையும் இரண்டாமிடத்திற்கு தள்ளி உள்ளது.

சீனாவில் தொடர்ந்து காணப்படும் சமூக குழப்பம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான வருமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிப்பது போன்றவை அந்நாட்டை தொடர்ந்து ஆபத்தான நாடுகள் பட்டியலிலேயே வைத்துள்ளது.

அண்மையில் மக்கள் புரட்சிகளை சந்தித்த எகிப்து, துனிசினியா ஆகிய நாடுகளில் நிலவும் உணவு பொருட்களின் விலையேற்றம், கலவரங்கள் போன்றவை, ஆபத்தான நாடுகளின் பட்டியலிலேயே இந்நாடுகளை இடம்பெறச் செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.