ஞாயிறு, 8 மே, 2011

ஒசாமாவைப் புகழ்ந்து பிரசுரம்-கேரளாவில் 2 பேர் கைது

அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனைப் புகழ்ந்து பிரசுரம் வெளியிட்ட இருவரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஓசாமா பி்ன்லேடனை அமெரிக்க கடற்படை கமண்டோக்கள் கடந்த ஞாயிற்று கிழமை இரவு சுட்டு கொன்றனர்.

இதற்கு மறுநாள் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனேரி டவுனில் ஓசாமைவை புகழ்ந்து துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதில் வீரமரணம் அடைந்த ஓசாமாவுக்கு அஞ்சலி செலுத்திவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மொபைல் ஷாப் உரிமையாளர் ஆசிப் என்பவரையும், அச்சகம் நடத்தி வந்த ஜேபி அந்தோணி என்பவரையும் நேற்று கைது செய்தனர்.

தலைமறைவான நிசாம் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: