சனி, 7 மே, 2011

மே 21ம் திகதி உலகம் அழிந்து விடும்உலகம் இந்த மே மாதம் 21ம் திகதி அழியப் போவதாக கனடாவின் 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மைக்கேல் கார்சியா என்பவர் பேமிலி ரேடியோ நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் உலகம் அழியப் போவதாக ஹொரண்டோ, கால்கரி, கிங்ஸ்டன், விண்ட்சர், சாஸ்க்டூன், ஒட்டாவா, கியூபெக், மொன்றியல் உள்பட 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

உலகம் அழியப் போவதாக நம்பும் தமது ரேடியோ நேயர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்கா, ஈராக், துருக்கி, லெபரைன் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் கார்சியா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் காரவான் வண்டி மூலம் கால்கரி, வான்கூவரில் பிரசாரம் செய்யப்படும் என்றும் நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின் பல்கலைகழகத்தில் பிரபஞ்ச பேரழிவு குறித்து பாடம் நடத்தும் ரிச்சர்டு அஸ்கோ கூறுகையில்,"உலகம் அழியப் போவதாக கூறும் இந்த தகவல் முதல் முறையாக வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு தான் கடைசி அறிவிப்பு என்றும் கூறமுடியாது" என்றார்.

மரணத்திற்கு பின்னர் ஒரு நிகழ்வு உள்ளது என நம்பும் மக்கள் உலகம் அழியும் என்ற தகவல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி உலகம் அழியும் என மதப்போதகர்கள் எச்சரித்து இருந்தனர். அன்றைய தினம் மக்கள் பெரும் அரங்குகளில் திரண்டனர்.

அவர்கள் குறிப்பிட்டதை போல உலகம் பேரழிவை சந்திக்கவில்லை. அதுபோன்று மே 21ம் திகதியும் ஒன்றும் நிகழாது. அடுத்த நாள் இது பற்றி பேசிய நபர்களிடம் விவாதிப்போம் என அறிவியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
http://www.newsonews.com

கருத்துகள் இல்லை: