வெள்ளி, 13 மே, 2011

தேர்தல் முடிவு 8 மணி நிலவரம்

234 தொகுதிகளில் 201 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி - 175 இடங்களில் வெற்றி
தி.மு.க. கூட்டணி - 25 இடங்களில் வெற்றி
மற்றவை - 1 இடம்
--------------

மக்கள் எனக்கு ஓய்வளித்துவிட்டார்கள் - கருணாநிதி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு குறித்து தனது கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழக மக்கள் தனக்கு ஓய்வளித்துள்ளதாகவும், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
----------

அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான சு.திருநாவுக்கரசு, அதிமுக வேட்பாளர் ராஜநாயகத்திடம் 16,656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியினுடைய மகன் விஷ்ணுபிரசாத், அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியத்திடம் 25,463 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
-----------

தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரும், நடிகருமான சரத்குமார் தி.மு.க. வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனை 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

நிதியமைச்சர் க.அன்பழகன், வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மு.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.என்.எம்.உபயதுல்லா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பரிதி இளம்வழுதி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
-------------

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடித்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தேர்தல் ஆணையம் மிகச் சீரிய பணியாற்றியுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
------------

பூவிருந்தவல்லி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இரா.மணிமாறன் 41,530 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீமாராவ் 24,032 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் காந்தி அதிமுக வேட்பாளர் முஹம்மத்ஜானிடம் 14,490 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 2,973 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

எழும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 202 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கடையநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்·போன்ஸ் 16,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 14,160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் 5,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ரிஷிவந்தியத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 30,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயன் 15,176 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை தோற்கடித்துள்ளார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார்

செங்கம் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் 11,497 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 7,883 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்னுசாமி 15,025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 22,330 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

----------

மே 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
----------

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 24,972 வாக்குகள் வித்யதிசாத்தில் சபா நாயகர் ஆவுடையப்பனை தோற்கடித்துள்ளார்.

சீர்காழி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி 27,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்போரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தண்டரை மனோகரன் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் 12,280 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை தோற்கடித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மொய்தீன் கான் 625 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியை 44,154 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

பெருந்துறை தொகுதியில் கொங்கு இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் பாலுவை, அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் 42,324 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புஷ்பலீலா 19,221 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆஸ்டினை தோற்கடித்துள்ளார்.

செங்கல்பட்டு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் முருகேசன், 291 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் ரங்கசாமியை தோற்கடித்துள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம், பாமக வேட்பாளர் உலக ரட்சகனை 26,047 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி, 35,654 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனை அதிமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 26,368 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

திருச்சுழியில் தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு 19,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
---------
http://tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை: