புதன், 18 மே, 2011

தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு பலமான ஆதரவு உண்டு: AFP

தமிழீழ விடுதலைப் புலிகள் படையியல் ரீதியாக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் தனித் தமிழீழம் என்ற அவர்களின் கோரிக்கைக்கான அதரவு தென்னிந்தியாவிலும் (தமிழ்நாடு) வெளிநாடுகளிலும் இன்னும் பலமாகவே இருப்பதாக, உலகின் முன்னணி செய்திச் சேவைகளுள் ஒன்றாகிய ஏ.எஃப்.பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்கள் மற்றும் சில பரப்புரைப் பொருள்கள் கொழும்பு துறைமுகம் ஊடாக கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை கொழும்பிலுள்ள சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுப்பி வைக்கப்பட்ட 45 பொதிகளில் புத்தகங்கள் மற்றும் பரப்புரைப் பொருள்களைக் கைப்பற்றியுள்ள சிறீலங்கா காவல்துறையினர் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முகவரி, கனடாவில் பெறுனரின் முகவரி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறீலங்காவிலும், இந்தியாவிலும், கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஊடகம், குறிப்பிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் மறைமுகமாகத் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை: