ஞாயிறு, 8 மே, 2011

பின்லேடனின் கடைசிப் பேச்சு வெளியிடப்படும்: அல் காய்தா

ஒஸாமா பின்லேடனின் கடைசிப் பேச்சு விரைவில் வெளியிடப்படும் என்று அல் காய்தா இயக்கம் அறிவித்துள்ளது.

அல் காய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடன், பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக அந்த ஒடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதற்காக அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பழிவாங்குவோம் என்று அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது கடைசிப் பேச்சு அடங்கிய ஒடியோவை வெளியிடப் போவதாக அல் காய்தா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை: