செவ்வாய், 24 மே, 2011

கனிமொழி பிணைய மனு: ம.பு.க.வுக்கு டெல்லி நீதிமன்றம் தாக்கீது

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்துள்ள பிணைய விடுதலை மனுவிற்கு பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான டிபி ரியால்டி நிறுவனத்திடமிருந்து சினியுக் வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான இலஞ்சமே என்று ம.பு.க. குற்றம் சாற்றியுள்ளது
மட்டுமின்றி, அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டுச் சதித்திட்டம் தீட்டப்பட்டதில் கலைஞர் தொலைக்காட்சியின் 20 விழுக்காடு பங்குதாரரான கனிமொழியும் பங்கு பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிலையில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநருமான சரத் குமார் ஆகியோரின் பிணைய விடுதலை மனுக்களை ம.பு.க.சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால், அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி, சரத் குமார் ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பாரியோக், கனிமொழி, சரத் குமார் ஆகியோரின் மனுக்களுக்கு வரும் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோரி மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் எந்த அளவிற்கு புலனாய்வு செய்யப்பட்டுள்ளது என்கிற விவரத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறும் மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, கனிமொழி, சரத் குமார் மனு மீதான விசாரணை மே 30ஆம் டீணீஞூதி நடைபெறும்.


கருத்துகள் இல்லை: