சனி, 7 மே, 2011

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு கலைக்கப்பட்டது

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்தார்.

அக்குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதலில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அதன் பின் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.

அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளார். தன் பதவிக்காலம் முடிவதற்கிடையில் அவர் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்களை அளித்தவர்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் இருபது வருடங்களுக்குள் வெளியிடக் கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: