செவ்வாய், 24 மே, 2011

கருணாநிதி-குலாம்நபி சந்திப்பு : கனி விவகாரத்தில் கைவிரிப்பு!

டில்லியில் இருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத் : தி.மு.க., - காங்கிரஸ் உறவு பலமாக இருப்பதாக தெரிவித்தார். 2ஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னையில் காங்கிரஸ் எந்த அளவு உதவ முடியும் என்பது கருணாநிதிக்கும் தெரியும். கருணாநிதி எந்தச் சூழலையும் புரிந்து கொள்ளும் திறன் உடையவர். காமன்வெல்த் ஊழலில் கைதாகி இருக்கும் சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் கட்சியில் உயர் பொறுப்பில் இருந்தவர். அவரும் தற்போது திகார் சிறையில் தான் இருக்கிறதர். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். கருணாநிதியை நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சோனியா வருத்தம் : கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா வருத்தம் தெரிவித்ததாக குலாம் நபி கூறினார். ஆனால் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது. இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் மேற்கொண்டு ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. கருணாநிதியின் மனவேதனையில் காங்கிரஸ் பங்கு கொள்கிறது என்றார் குலாம் நபி.

கருத்துகள் இல்லை: