வெள்ளி, 6 மே, 2011

பின்லேடனுக்காக சென்னை மசூதியில் சிறப்புத் தொழுகை

அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னையில் உள்ள மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த சிறப்புத் தொழுகை இன்று நடந்தது.

மசூதியின் இமாம் மெளலானா சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழுகையின்போது பின்லேடனைக் கொன்று கடலில் வீசிய அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய நெறிப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in

2 கருத்துகள்:

jaganathan சொன்னது…

எது எப்படியோ? செத்தான் ஒரு சமுதாய விரோதி

sunaa சொன்னது…

//இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

நமக்கு வாய்த்த சென்னை முஸ்லிம்கள் மிகவும் வெறி பிடித்தவர்கள் ..:) சபாஷ் ...(நரகத்தில் பின் லேடன்)