சனி, 14 மே, 2011

கனிமொழி கைது ஆவாரா?

ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யாமல் இருக்கக்கோரி தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் மக‌‌ள் கனிமொழி தாக்கல் செய்ய மனு மீது டெ‌ல்லி சிறப்பு நீதிமன்றம் இ‌‌ன்று தீர்ப்ப‌‌ளி‌க்‌கிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைக் கூட்டுச் சதியாளர் என்று குறிப்பிட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சா‌ற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து தாங்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெ‌த்மலா‌னி, கலைஞர் டி.வி.யில் வெறும் பங்குதாரராக இருப்பதால் மட்டும் கனிமொழியைக் குற்றம்சா‌ற்ற முடியாது என்‌றா‌ர்.

ஆனால், சி.பி.ஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித், கலைஞர் டி.வி.க்கு கைமாற்றப்பட்ட ரூ.200 கோடி பணம் லஞ்சமேயன்றி வேறில்லை. டி.வி.யின் நடவடிக்கைகளை குடும்பமே கண்காணித்து வந்த நிலையில், சரத்குமாரை மட்டும் குற்றத்துக்குப் பொறுப்பாக்க முடியாது என்று வாதிட்டார்.

இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, 14ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில், கனிமொழிக்கு ‌பிணை கிடைக்குமா என்பது இ‌‌ன்று தெரிந்துவிடும். அ‌ப்படி ‌பிணை ‌கிடை‌க்கா‌வி‌ட்ட‌ா‌‌ல் க‌னிமொ‌ழி கைதாவது உறு‌தி.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: