ஞாயிறு, 15 மே, 2011

தமிழ்நாட்டு தேர்தலில் கருணாநிதியின் தி.மு.க மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

கருணாநிதியின் இரண்டாவது குடும்பம் வாழும் கோபாலபுர மக்கள் தமக்கான ஆதரவை கருணாநிதிக்கு வழங்கவிரும்பவில்லை என்பதை நடந்து முடிந்த தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் மூலம் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

அதேவேளையில், மைலாப்பூரில் சிஐரி கொலணியில் CIT Colony-Mylapore உள்ள இவரது மூன்றாவது குடும்பத்தின் செயற்பாடுகள் கருணாநிதி தோல்வியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளதால், கோபாலபுரத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எந்தநேரமும் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க 2006ல் ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் இடம்பெற்ற 2009 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளடங்கலாக பல இடைத் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

உண்மையில், தி.மு.காவால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 'உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்' பின்னரே இக்கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றம் கட்சி உறுப்பினர்களின் அழுக்குப்படிந்த உண்மைகள் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டன.

மாநாடு முடிந்த கையுடன், மேற்குத் தமிழ்நாட்டில் தனக்கிருக்கும் செல்வாக்கை காண்பிக்கும் நோக்குடன் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கோயம்புத்தூரில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

தி.முக.வின் முக்கிய உறுப்பினரும் கருணாநிதியின் மகனுமான அழகிரியின் கோட்டை எனக் கருதப்படும் மதுரை மற்றும் திருச்சி போன்ற இடங்களிலும் ஜெயலலிதா கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்தினார்.

அதுவரை தி.மு.க சார்பான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழ்நாட்டின் நன்கறியப்பட்ட முதன்மை ஊடகங்கள் ஜெயலலிதாவின் பரப்புரை சாதகமாகச் செல்வதை கண்டுகொண்ட பின்னர் தி.மு.க சார் கருத்துக்களைப் புறக்கணிக்கத் தொடங்கின.

2Gஅலைக்கற்றை விவகாரம் பூதாகாரமாக வெளிக்கிளம்பத் தொடங்கிய பின்னர் தமிழ்நாட்டின் முதன்மை ஊடகங்கள் தி.மு.க தொடர்பான விமர்சனங்களை முக்கியத்துவப்படுத்தி அதற்கெதிரான கருத்துக்களை வழங்கத்தொடங்கின. தமிழ்நாட்டு ஊடகங்கள் ஒருபோதும் முக்கியத்துவம் கொடாத ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான விமர்சனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தன.

இதனடிப்படையில், சுப்ரமணியம் சுவாமியால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்கள், தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஜெயா மற்றும் கப்ரன் போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் இவரை தமது சாதகமான பரப்புரைக்குப் பயன்படுத்தி நலனைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியினர் சுவாமிக்குப் பல வழிகளில் தமது நன்றிகளைத் தெரிவிக்கவேண்டியவர்களாக உள்ளனர். இதன்விளைவு, அ..தி.மு.க போட்டியிட்ட 160 தொகுதிகளில் 150 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

கூட்டணிக்கட்சிகளின் எவ்வித ஆதரவுமின்றி மிகப் பெரும்பான்மையுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெறும் 35 ஆசனங்களையே பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலைமையில் இவர்களால் எந்தவொரு அரசியல் பேரம் பேசுதலையும் [horse trading] மேற்கொள்ளமுடியாது.

தி.மு.க வின் அதிருப்தியான செயற்பாடானது தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை இழக்கக் காரணமாகிவிட்டது. தேர்தல் முடிவுகளால் தி.மு.க வின் பெரும்பாலான அமைச்சர்கள் தமது ஆசனங்களைப் பறிகொடுத்துள்ளனர். மிகச் சிலரே கடினப் பிரயத்தனத்தின் மத்தியில் தமக்கான ஆசனங்களைத் தக்கவைத்துள்ளனர். மக்கள் இத்தேர்தல் மூலம் கருணாநிதிக்கு வழங்கியிருந்த தமது ஆணையை மீளப்பெற்றுக்கொண்டுள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் தமிழ்நாட்டு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படலாம் என தே.தி.மு.க தலைவர் பண்ரூட்டி இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இத்தேர்தலானது எதிர்பார்க்கப்படாத முடிவைப் பெற்றுத்தந்துள்ளபோதிலும், அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்குத் தீர்மானித்த நடிகர் விஜயகாந்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் கொடுக்கப்படவேண்டும் எனவும் இராமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் தனது கூட்டணிக்கட்சியின் வெற்றிக்காக அயராதுழைத்த விஜயகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும். ஜெயலலிதா போன்ற அரசியற் தலைவர்களைக் கையாள்வது எவ்வளவு கடினமானதொரு விடயம் என்பதை விஜயகாந்த மிகவிரைவில் உணர்ந்துகொள்வார்.

தி.மு.க கட்சியினர் என்றுமில்லாதவாறு இத்தேர்தலில் மிகவும் குறைந்தளவு எண்ணிக்கையான ஆசனங்களுடன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அவர்கள் மீதான அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டு முதனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் திடீர் ஆட்சி மாற்றம் மக்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி வழிமூலம்: The Pioneer.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: