வியாழன், 5 மே, 2011

பின்லாடனின் இறப்பில் மர்மம் : அரபு டி.வி., தகவல்

கடந்த ஞாயிற்றுகிழமை அல்குவைதா இயக்கத்தின் தலைவன் பின்லாடனைஅமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றனர். அதற்கு சாட்சியாக ஒரு சில போட்டோக்கள் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. பின்னர் அவை உண்மையில்லை என மறுக்கப்பட்டது. கனடாநாட்டு எதிர்கட்சி தலைவரும் பின்லாடனின் போட்டோ குறித்து சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபரும் தற்போதைக்கு போட்டோக்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய தந்தை சுட்டுக்கொல்லப்படவில்லை. சிறைபிடிக்கப்பட்ட பின்னரே சுடப்பட்டுள்ளார்.என பின்லாடனின் 12 வயது மகள் தெரிவித்துள்ளதாக அரபு டி.வி.,தெரிவித்துள்ளது.தற்போது ஏமன் நாட்டை சேர்ந்த பின்லாடன் மனைவியின்பாதுகாப்பில் அக்குழந்தை உள்ளதாக ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டி.வி., தகவல் தெரிவித்துள்ளது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: