சனி, 7 மே, 2011

ஒசாமா தங்கிய வீடுதரைமட்டமாகிறது

பாகிஸ்தான் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், "டெய்லி நியூஸ்' என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:பின்லாடன் தங்கியிருந்த பண்ணை வீட்டுக்கு, தற்போது ஏராளமானோர் வரத் துவங்கி விட்டனர். இந்த வீட்டிற்கு வரும் அனைத்து வழிகளும், ராணுவத்தால் "சீல்' வைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டை, விரைவில் இடித்து தரைமட்டமாக்க, திட்டமிடப்பட்டுள்ளது.விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இந்த வீட்டிற்கு, பத்திரிகையாளர்களை அனுமதிப்பதா, இல்லையா என்பது பற்றி, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: