சனி, 21 மே, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் ராசா, கனிமொழி, சரத்குமார் ஆஜர்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான தொடர் விசாரணையில் ராசா தொடர்ந்து ஆஜராகி வருகிறார். நேற்றும் கூட அவர் விசாரணைக்கு வந்திருந்தார். கனிமொழியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால் கனிமொழி கலக்கமடைந்து அழுதார். இதையடுத்து ராசா அவருக்கு ஆறுதல் கூறிப் பேசினார்.

இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வரும்போது கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரை ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று காலை கோர்ட்டில் விசாரணை தொடங்கியபோது கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் ஆஜர்படுத்தப்பட்டனர். ராசாவும் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: