புதன், 25 மே, 2011

தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை

சிறீலங்கா படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி சிறீலங்கா விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கழுத்தில் விழுந்த சுருக்குக் கயிற்றை தளர்த்தும் சாகசமோ?