செவ்வாய், 17 மே, 2011

இனந்தெரியாத குண்டர்கள் நடிகர் வடிவேலு ‌வீடு மீது தாக்குதல்

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் அடையாள‌ம் தெ‌ரியாத நபர்க‌ள் அடித்து நொறு‌‌க்‌கியு‌ள்ளன‌ர்.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இ‌ங்கு காவலாளியாக வேலு எ‌ன்பவ‌ர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நே‌ற்று மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்இ காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டி உ‌ள்ளன‌ர். தொலைபேசி எண் தெரியாது என்று கூறிய காவலா‌ளிஇ உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்து‌ள்ளன‌ர்.

அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை காவலா‌ளி‌யிட‌ம் கொடுத்த மர்ம நபர்கள்இ வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி உ‌ள்ளன‌ர்.

''வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும்'' என்றும் இல்லையென்றால் நாங்களே ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனரா‌ம் ம‌ர்ம நப‌ர்க‌ள்.

இது கு‌றி‌த்து பண்ணை மேலாளர் சங்கருக்கு காவலா‌ளி தகவ‌ல் கொடு‌‌த்து‌ள்ளா‌ர். இதையடு‌த்து மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர். காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

கருத்துகள் இல்லை: