திங்கள், 16 மே, 2011

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மதிமுக ஆலோசனை

அதிமுக கூட்டணியில் கேட்ட சீட் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக தற்போது தேர்தல் முடிந்து, அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்ட நிலையில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். வைகோ மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

நாளை காலை 10 மணிக்குத் தொடங்கும் இக்கூட்டத்தில் மதிமுக தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

1 கருத்து:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நல்ல முடிவா எடுக்கட்டும்...