வெள்ளி, 20 மே, 2011

செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஏன்?: முதல்வர் விளக்கம்

சட்டசபையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை தேர்ந்தெடுத்ததில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை கட்டிடத்தில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: