வியாழன், 5 மே, 2011

பாலித கொஹன்னவுக்கு எதிராக விசாரணை - அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆராய்கிறது

அவுஸ்ரேலியாவிலும் சிறிலங்காவிலும் இரட்டைக்குடியுரிமை கொண்டுள்ள பாலித கொஹன்னவுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவாளர் லூயிஸ் மொரேனோ ஒக்கம்போ தெரிவித்துள்ளார்.

இன்னர் சிற்றி பிரசுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கவனம் செலுத்தாது. சிறிலங்கா தொடர்பான ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை நான் படிக்கவில்லை.

சிறிலங்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 115 நாடுகளில் உள்ளடங்கவில்லை.

எனினும், வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவுக்கு எதிராக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அரசாங்கம் றோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை என்பதால், மூத்த அரசாங்க அதிகாரியொருவருக்கு எதிராக விசாரணை நடத்துவதில் சிக்கல் நிலை உள்ளது.

ஆனாலும், பாலித கொஹன்ன இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர். அவுஸ்திரேலிய அரசாங்கம் றோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதால் அவர் மீது விசாரணை நடத்தப்படலாம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: