வெள்ளி, 6 மே, 2011

கனிமொழி பிணை மனு மீதான விசாரணை : நாளை வரை ஒத்திவைப்பு

2ஜி இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என சி.பி.ஐ.,யால் வர்ணிக்கப்பட்ட கனி‌மொழி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் சம்மனுக்கு இணங்கி இன்று கோர்ட்டில் ஆஜரானார். காலை 10 மணியளவில் அவர் கோர்ட்டுக்கு வந்தார். கனி‌மொழி சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் சனிக்கிழமைக்கு ( நாளைக்கு) ஒத்திவைத்து உத்தரவிட்டனர். கனிமொழி கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்படவில்லை. கனி‌மொழியிடம் தொடர்ந்து நாளையும் விசாரணை நடைபெறுகிறது. கனிமொழியிடம் நடைபெறும் விசாரணை குறித்து தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் அளித்த பேட்டியில் : தி.மு.க., எப்போதும் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கும் என்றார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: