புதன், 25 மே, 2011

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன்-கருணாநிதி

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், சமச்சீர் கல்வி தலைசிறந்த கல்வியாளர்களால் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்பட்டது. தற்போது அதிமுக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்திருப்பதால், எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தை அதிமுக அரசு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது, சட்ட மேலவையை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன் என்றார்.


கருத்துகள் இல்லை: