சனி, 14 மே, 2011

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!

தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.

தோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.

இதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.

ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், "அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்", என்றனர்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: