ஞாயிறு, 22 மே, 2011

லண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை

ஒசாமா பின் லேடன் மரணத்திற்குப் பின்னர் அல் கொய்தாவின் புதிய தலைவராக மாறியிருக்கும் சைப் அல் அதெல், லண்டனைத் தாக்கித் தகர்ப்போம் என எச்சரித்துள்ளார்.

பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் வகையில் லண்டனில் தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதை சந்திக்க லண்டன் தயாராக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தலிபான் தலைவர்களின் பேச்சுக்களை இடைமறித்து கேட்டு கண்டுபிடித்துள்ளது இங்கிலாந்து உளவுத்துறை. அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் தாக்கி அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என அதெல் உறுதி பூண்டுள்ளாராம்.

முதலில் லண்டனில் தாக்குதல் நடத்துவோம் என்று அதெல் கூறியதாக அந்த தலிபான் தலைவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்களில் நடந் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி அப்போது 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். தற்போதும் அதே போன்ற ஒரு தாக்குதலுக்கு அல் கொய்தா திட்டமிட்டுள்ளதாம்.

தாக்குதலுக்கு விரைவில் அதெல் உத்தரவிடுவார் என்றும், அது வந்த பிறகு தாக்குதல் நடத்தப்படும் என்றும் தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

மேலும் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலைப் போல மிகப் பெரிய சர்வதேச தாக்குதலுக்குத் தயாராகுமாறும் அல்கொய்தா அமைப்பினருக்கு அதெல் உத்தரவிட்டுள்ளாராம்.

தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் இஷானுல்லா இஷான் கூறுகையில்,எங்களது புதிய தலைவர் லண்டனைத் தாக்க தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பாவின் முதுகெலுப்பு இங்கிலாந்துதான், முதலில் அதை முறிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும். லண்டனில் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அங்கு எங்களுக்கு ஆட்கள் நிறைய இருப்பதால் லண்டனை முதலில் தேர்வு செய்துள்ளோம் என்றார் இஷான்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: