திங்கள், 16 மே, 2011

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!

ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு அழைப்பு வந்தால் போவது குறித்து சொல்வேன், என்று கூறிவந்த விஜயகாந்த், இன்று விழாவில் பங்கேற்றார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

கூட்டணி கட்சி என்ற முறையில் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பீர்களா? என்று விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அழைப்பு வரட்டும் பார்க்கலாம் என்றார். இதனால் ஆரம்பமே முறுகல் நிலையா என்ற பேச்சு கிளம்பியது.

விஜயகாந்தை விழாவுக்கு அழைப்பீர்களா என்று ஜெயலலிதாவிடம் கேட்டபோது, அவரும் கூட்டணி கட்சி தலைவர்தான். அனைவருக்கும் அழைப்பு உண்டு என்றார்.

அதன்படி விஜயகாந்துக்கும் அழைப்பு விடப்பட்டது. அழைப்பை ஏற்று, விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தின் மச்சான் எல்கே சுதீஷ் உள்பட பலரும் விழாவில் பங்கேற்றனர்.

அவர்களை நிதியமைச்சராக பொறுப்பேற்கும் ஓ பன்னீர் செல்வம், அதிமுக - தேமுதிக கூட்டணிக்காக பெரும்பாடுபட்ட சோ ஆகியோர் வரவேற்று உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்

கருத்துகள் இல்லை: