வெள்ளி, 20 மே, 2011

கனிமொழி கைது-கருணாநிதி வீட்டில் திமுக முன்னணித் தலைவர்கள் குவிந்தனர்

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ள திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதி வீட்டில் குவிந்துள்ளனர்.

கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் வீட்டில் அவர்கள் குவிந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு மேலும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என்ற எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர். விரைவில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர்கள், கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனிமொழி கைது குறித்து இதுவரை திமுக சார்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. பெரும் அமைதியும், இறுக்கமான சூழ்நிலையும் காணப்படுகிறது.

திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு அவர் கோபமாக சென்று விட்டார். பதிலளிக்க மறுத்து விட்டார்.

http://thatstamil.oneindia.in/

5 கருத்துகள்:

vijayan சொன்னது…

"பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே,செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே. வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வரவேண்டாமோ,வாய்நிறைந்த பொய்யனுக்கு சூலம் வரவேண்டாமோ.என்ற திரைப்பாடல் ஏனோ நினைவிற்கு வருகிறது.

siva sinnapodi சொன்னது…

“ஓன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்
எங்கள் சொந்தங்கள் அழிந்தது பெரும்துயரம்!
முள்ளிவாய்க்கால் அவலம் தனை நினைத்து அழுகிறோம்!”
இந்த வரிகளும் எனது நினைவில் என்றும் நிற்கிறது நண்பரே

பெயரில்லா சொன்னது…

துரோகம் இழைத்த காங்கிரஸ் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு வெளியே வாருங்கள் .

பெயரில்லா சொன்னது…

This is only a start.he will face more punishments for his betrayal to tamils in Elam.

பெயரில்லா சொன்னது…

Hai
this is ok!!!!!!
what about Ambani, and TATA?
till date they are outside......