புதன், 11 மே, 2011

சிறிலங்கா அமைச்சர் கருணாவின் இணைப்பதிகாரி மட்டக்களப்பில் சுட்டுக்கொலை

சிறிலங்காவின் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்பு அதிகாரி இன்று பிற்பகல் மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புளியந்தீவு அமைப்பாளரான மதி எனப்படும் நடராசா மதியழகன் (38 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டுக்கு உந்துருளியில் சென்ற இரண்டு ஆயுததாரிகள் இன்று பிற்பகல் 2.50மணியளவில் இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டு வந்த இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுடப்பட்டு, முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியிலேயே நடமாடி வந்தார்.

அதேவேளை இவர் முன்னர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர் என்றும், இவரைச் சுட்டுக்கொன்ற ஆயுததாரிகளைப் பிடிக்க தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: