திங்கள், 16 மே, 2011

படு வேகமாக பதவியேற்ற கருப்பசாமி-விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

கால்நடைத்துறை அமைச்சராக சொ.கருப்பசாமி பதவியேற்றபோது படு வேகமாகவும், துடிப்புடனும் அவர் பேசியதைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதாவும், அரங்கில் கூடியிருந்த அனைவரும் சிரித்து ரசித்தனர்.

சொ1. கருப்பசாமி பிதவிபிரமாணம் எடுத்துக் கொண்டபேது படு வேகமாகப் பேசியதை ஜெயலலிதா சிரித்து ரசித்தார். அனைவரும் சிரிக்கவே அரங்கமே கலகலப்பானது.

அமைச்சர்கள் பதவியேற்பின்போது சொ.கருப்பசாமி பதவியேற்க அழைக்கப்பட்டார். கால்நடைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டபோதும் படு வேகமாகவும், துடிப்புனுடனும், அழுத்தம் திருத்தமாகவும் உறுதிமொழியை வாசித்தார்.

அவரது வேகத்தைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா வாய் விட்டு சிரித்தார். அதேபோல அமைச்சர்களும், அரங்கில் கூடியிருந்தவர்களும் சிரித்தனர். கருப்பசாமியின் துடிப்பை, பத்திரிக்கையாளர் சோவும் சைகையால் செய்து காட்டி, கைதட்டி ரசித்தார்.

அமைதியாக இருந்த அரங்கத்தை தனது துடிப்பான பேச்சால் கலகலப்பாக்கி கவர்ந்து விட்டார் கருப்பசாமி. இதே துடிப்புடன் அவர் அமைச்சராக செயல்பட்டால் அதிமுக அரசுக்கும், அவருக்கும் மிகப் பெரிய பெயர் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை: