வெள்ளி, 3 ஜூன், 2011

கனிமொழி வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை?: 1 மாத கோர்ட் விடுமுறையும் துவங்குகிறது!

2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகாது என்று தெரிகிறது.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவில்லை.

மேலும் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைக் காலம் தொடங்கவுள்ளதால் தீர்ப்பு இன்னும் ஒரு மாதம் வரை தீர்ப்பு தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தீர்ப்பை எதி்ர் நோக்கியவாறு மேலும் ஒரு மாதம் கனிமொழி சிறையில் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: